Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » சகோதரர் பீ.ஜே அவர்களுக்கோர் மடல்

சகோதரர் பீ.ஜே அவர்களுக்கோர் மடல்

மதிப்புக்குரிய சகோதரர் அவர்களுக்கு
السلام عليكم ورحمة الله وبركاته

இந்த மடல் உங்களை அடைந்து அதனை வாசிக்கின்ற போது நீங்கள் பூரண ஆரோக்கியத்தோடும் மன நிம்மதியோடும் இருக்க அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

இலங்கையில் பீ ஜே அறிமுகம்
பீ.ஜே என்ற நாமம் 1991 ம் ஆண்டு இலங்கை மண்ணில் பரகஹதெனிய அன்சாருஸ்ஸுன்னா மாநாட்டில் பிரயபல்யம் பெறத் தொடங்கியது.

எனது தவ்ஹீத் சிந்தனை ஆசான் பீ.ஜே வா?
1984-1990- காலப்பகுதியில் நான் சம்மாந்துறை தப்லீக்குல் இஸ்லாம் அரபி என்ற அரபி மத்ரஸாவில் படித்துக் கொண்டிருந்த போது அங்கு மதீனாப் பல்கழைக் கழகப் பட்டதாரியான எமது ஆசான் அஷ்ஷைக் ஆதம்பாவா மதனிجزاه الله خيرا (சம்மாந்துறை) என்பவரின் கற்பித்தல் போதனைகளால் கவரப்பட்ட நாம் அவர் முன்வைக்கும் தவ்ஹீத் சிந்தனையை முதல்முதலாக ஏற்றுக்கொண்டிருக்கும் போதுதான் அங்கு கல்வியைத் தொடர முடியாது இடை நிறுத்தப்பட்டோம் . அதனால் தவ்ஹீத் பெயரில் ஹாஷிம் மதனியால் தொடங்கப்பட்ட தவ்ஹீத் சிந்தனைக்கு முதல் அரபுக்கல்லூரியான ஸஹ்வா இஸ்லாமியா அரபிக் கல்லூரியில் தொடர்ந்தோம். பின்னர் மதீனா சென்று உயர் கல்விபடிக்க அல்லாஹ் நஸீபாக்கினான்.
والحمد لله الذي بنعمته تتم الصالحات

JASM மாநாடு
1991 JASM அமைப்பின் தேசிய தவ்ஹீத் மாநாட்டில் பீ.ஜைனுல் ஆபிதீன் என்ற பெயரில் நீங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உரை நிகழ்த்தினீர்கள். நான் அன்று முதல் இன்று வரைக்கும் JASM வோடுதான் இருக்கின்றேன்.
الحمد لله الذي بنعمته تتم الصالحات

உங்களின் வசீகரமான பேச்சும், கவர்ச்சியானஎழுத்தும், எளிமையான நடத்தையும் மக்கள் மனங்களில் நீங்கள் பெரியளவு இடம்பிடித்ததன் மூலம் தமிழ் உலகில் நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளராக பார்க்கப்பட்டீர்கள் என்பது மறுக்க முடியாது.

நான் அப்போது 19 வயது நிரம்பிய இளைஞனாக இருந்தேன். அந்தப் பருவம் இளமை முறுக்கேறிய பருவமல்லவா? உங்கள் ஓடியோ& வீடியோ கேசட்டுக்களை விநியோகம் செய்து சில போது ஏச்சும், கடுமையான வார்த்தைகள் மூலமான கண்டிப்புக்களையும் சந்தித்த காலமது. இப்போது எனக்கு 48 வயதாகின்றது. அதாவது நீங்கள் கொழும்பில் விவாதத்தில் கலந்து கொண்டபோதிருந்த உங்கள் வயது

இலங்கை வரலாற்றில் கொழும்பில் ஒரு விவாதம்
இலங்கை சுன்னத் (பித்அத்) ஜமாஅத்துக்கும் , இலங்கை தவ்ஹீத் ஜமாத்துக்கும் இடையில் 2001 ஆண்டு கொழும்பு BMACH ல் அருமையான விவாதம் நடந்தேறியது.
அதில் இலங்கை ஆலிம்களில் கலாநிதி அஷ்ரஃப் மற்றும் டாக்டர் நண்பர் ரயீசுத்தீன் ஷரயி ரிஸ்வான் மதனி(நான்), மர்ஹூம் அர்ஹம் இஹ்ஸானி ஆகியோர் மேடையில் உங்களோடு கலந்து கொண்டோம்.

உங்கள் மீதுள்ள பாசம் எப்படி வெறுப்பாக மாறியது?
பல காரணங்கள்: குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் பிழையான விளக்கம் அளித்தல். உதாரணமாக
لحم الخنزير

பன்றியின் மாமிச சமாச்சாரம்
அல்லாஹ் அல்குர்ஆனில் பன்றியின் மாமிசம் என்றே குறிப்பிட்டுள்ளான். அதன் பாகங்கள் பற்றி அவன் எதுவும் குறிப்பிடவில்லை.எனவே அதன் இதயத்தை மனிதர்களுக்கு பொருத்தலாம் என்பததனால் அவ்வாறு குறிப்பிட்டிருக்க முடியும் என்பது உங்கள் வாதமாக இருந்தது.

பன்றியின் கொழுப்பு, எலும்புகள் போன்ற அதன் அனைத்து பாகங்களும் ஹராம் என்பது ஸஹீஹான ஹதீஸின் நிலைப்பாடு. இருந்தும் அதை நீங்கள் கவனிக்காது சொன்னதை உங்கள் மீது அளவுக்கதிமான நேசம் கொண்டோர் உங்கள் நிலைப்பாடு பிழையாகுமா? எனக் கேள்வி எழுப்பி புதியதொரு தக்லீதை ஆரம்பம் செய்தனர்.
நீங்கள் அல்ஜன்னத் மாத இதழ் ஆசிரியராக இருந்த போது 1990 இது நடந்தது.

இதனால் கப்று வணங்கிகள் குளிர் காய்ந்தனர். ஆனாலும் நீங்கள் இதில் இருந்து தெளிவாக வாபஸ் ஆகவில்லை.

முஸ்லிம் கிரந்த ஹதீஸ் மறுப்பு
1998 ம் ஆண்டு நாம் மதீனா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலம்.

பாம்பின் தோற்றத்தில் தோன்றிய ஜின் புதிய மாப்பிள்ளையாக இருந்த நபித்தோழர் ஒருவரோடு சண்டை செய்து இருவரும் மரணித்தனர். அவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக முஸ்லிம் கிரந்தத்தில் இடம்பெறுகின்ற ஹதீஸை நீங்கள் விமர்சனம் செய்தது மட்டுமின்றி, பல்கலைகழகத்தையும் சேர்த்தே விமர்சனம் செய்திருந்தீர்கள்.

(அல்ஜன்னத்) இதன் பின் ஜின்கள் சிறுகுழந்தைகளை இறாஞ்சிச் செல்வது பற்றி புகாரியில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ்டளைப் பார்த்ததும் உங்கள் அறிவின் மீதுள்ள நம்பிக்கை நன்றாகவே குறைய ஆரம்பித்தது

عن جابر بن عبد الله رضي الله عنهما، رفعه، قال «خمروا الآنية، وأوكوا الأسقية، وأجيفوا الأبواب واكفتوا صبيانكم عند العشاء، فإن للجن انتشارا وخطفة، وأطفئوا المصابيح عند الرقاد، فإن الفويسقة ربما اجترت الفتيلة فأحرقت أهل البيت ( أخرجه البخاري في صحيحه)
. وفي راية البخاري «إذا كان جنح الليل، أو أمسيتم، فكفوا صبيانكم، فإن الشياطين تنتشر حينئذ

உங்கள் அமைப்பு உறுப்பினர்களின் பரிதாப நிலை
இவர்களில் பலருக்கு அல்ஃபாத்திஹா சூறாவைக் கூட பார்த்து ஓதத் தெரியாத நிலையிலும், மார்க்க அடிப்படை அறிவு இல்லாத நிலையிலும் உண்மை எது? பொய் எது என்று கண்டு கொள்வது கஷ்டமான காரியம்.

அப்படி இருக்க அவர்கள் நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்குரிய மாறுபட்ட இரு கருத்துக்களை விளங்குவதற்குப் பதிலாக உங்களையே தக்லீத் செய்வதை நாம் இப்போதும் அவதானிக்கும் ஒன்றாகும்.

நான் மதீனா கற்கை நெறியை முடித்ததும் ஜுபைல் மற்றும் தபூக் ஆகிய இஸ்லாமிய தஃவா நிலையங்களில் கடமையாற்றினேன்.
அப்போது எமது பாடங்களுக்கு சமூகம் தரும் மாணவர்கள் மத்தியில் உங்களின் தவறான கருத்தை நாகரீகமான முறையில் நாம் விமர்சனம் செய்த போதும் உங்கள் அமைப்பு உறுப்பினர்களான அவர்கள் நாகரீகமற்ற, மிகவும் கீழ்த்தரமான முறையில் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். (சிலர் விதிவிலக்கு)
நீங்கள் தர்ஜுமா வெளிட்டு சூனியத்தையும் புகாரியில் இடம் பெறும் அன்னை ஆயிஷா ரழி அவர்களின் ஹதீஸையும் நீங்கள் மறுத்த போதும் அவ்வாறே நடந்து கொண்டனர்.

இப்படிப் பல சந்தர்ப்பங்களில் நடந்ததால் நாமும் உங்கள் அமைப்பு சகோதரர்களோடு கடுமையாக நடக்கவும் சில போது அவர்களின் செயற்பாடுகளை முடக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

இப்படி உங்கள் உறுப்பினர்கள் உங்கள் மீது கொண்ட குருட்டு பக்தியால் மார்க்கத்தில் ஏற்படும் உங்களின் பாரிய தவறுகளைக் கூட காண முடியாதவாறு அவர்கள் கண்கள் கட்டப்பட்டிருந்தனர். அதனால் நமது வெறுப்பும் அதிகரித்தது. ஏனெனில் இன்றுவரை நீங்கள் வளர்த்த மக்கள் இப்படித்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் உங்கள் போக்கை மறு பரிசீலனை செய்யலாம் !
மனிதன் என்ற வகையில் நீங்கள் மார்க்க விளக்கத்தில் பல பாரிய தவறுகளை இழைத்துள்ளதை நமது ஆய்வுகள் மூலம் நாம் அறிந்து கொண்டதாகும்.
இமாம்கள் பொய்யான ஹதீஸ்களை நிராகரிப்பதற்கு இட்டுள்ள நிபந்தனைகளையும் விதிகளையும் ஸஹீஹான ஹதீஸ்களை அவர்கள் மறுக்கச் சொன்னது போன்ற பிரச்சாரத்தை குர்ஆனுக்கு முரண்படுவதாக நீங்கள் முன்வைக்கும் ஹதீஸ்களுக்கு ஆதாரமாக பிரச்சாரம் செய்துள்ளீர்கள். ஆனால் இந்த நிலை உங்களின் ஆரம்கால அணுமைமுறைகளில் இருந்ததில்லை.

கோவை காதியானிகளுடனான விவாதத்தின் போது நீங்கள் இப்போதுள்ள நிலைப்பாட்டில் இல்லாமல் விவாதம் செய்தீர்களே அது ஏன்? எப்படி ? சிந்தியுங்கள்
ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் பூமிக்கு வருவதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸ் குர்ஆன் வசனத்திற்கு முரண்படுவதாக காதியானிகள் முன்வைத்த போது நீங்கள் அளித்த பதிலில் இருந்து பிற்காலத்தில் எவ்வாறு தடம்புடண்டீர்கள் என யோசிக்கும் போது سبحان مقلب القلوب என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் கூறமுடியாதுள்ளது.
இலங்கையில் உமர் அலி தனக்கு பைஅத் செய்யாதவர்கள் காஃபிர்கள் என முன்வைத்த கருத்தை நீங்கள் மறுத்துப் பேசிய போது அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களுக்கு பைஅத் செய்யாது மரணித்தார்களே அவர்கள் காஃபிரா எனக் கேட்டு ஆதாரம் காட்டினீர்கள்.

மரணித்தவரை முத்தமிடலாமா என்பதற்கு அபூபக்கர் சித்தீக் ரழி அவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களை முத்தமிட்டதை ஆதாரமாக உங்கள் ஜனாஸா புத்தகத்தில் எழுதி நபித்தோழர்களை மார்க்கத்திற்கு முரணில்லாத விவகாரங்களில் ஆதாரம் காட்டிய நீங்கள் பிற்பட்ட காலங்களில் உங்கள் நிலைப்பாட்டில் இருந்து எப்படி மாறினீர்கள் சிந்தனை செய்யுங்கள்.

நபித்தோழர்கள் விஷயத்தில்
அவர்கள் விஷயத்தில் அநாகரீகமான வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கின்றீர்கள். சில போது அவர்கள் ஆட்சிக்காக தமக்குள் சண்டை செய்தவர்கள், வெட்டிக்குத்திக் கொண்டவர்கள்? நாம் தேவெல்லையே! நாம் சண்டை செய்தோமா எனக் கேள்வி எழுப்பும் நீங்கள், உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) ஏன் கொலை செய்யப்படமாட்டார்கள். மச்சானுக்கும், மாமனுக்கும் பதவி வழங்கி அவரே தனது மரணத்தை தேடிக் கொண்டார் , ஒரு நபித்தோழர் கூட அவரைப் பாதுகாக்க வரவில்லை எனப் பேசும் நீங்கள் வானவர்களே வெட்கப்படும் ஷஹீத் என்று நபி ஸல் அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட அந்த உத்தமர்
விஷயத்தில் கொஞ்சம் கூட நாக்கூசாது நடப்பது நாகரீகமான செயற்பாடல்லவே.

இப்படிப் பார்க்கின்ற போது நீங்கள் மார்க்க விவகாரங்களில் அறிஞர்களின் வழியில் பயணிக்கும் அறிஞராக நோக்க முடியாதுள்ளது. இவைகள் உங்கள் பேச்சில் இருந்து சிலதுளிகளே!

வீடியோ விவகாரம்
உங்கள் வீடியோ விவகாரம் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீதின் வளர்ச்சி/வீழ்ச்சி எதையும் இன்ஷா அல்லாஹ் தீர்மானிக்கப் போவதில்லை.
ஏனெனில் அது அல்லாஹ்வின் மார்க்கம். அதை அவனே பொறுப்பேற்றுள்ளான்.

இருப்பினும் நீங்கள் உங்கள் கொள்கையில் தொடர்ந்தும் தெளிவற்றவராகவும் ஹதீஸ்கலை அறிஞர்கள் வகுத்த கோட்பாடுகளில் குழப்பத்திலும் இருக்கின்றீர்கள் என்பது உங்கள் எழுத்துக்கள், பேச்சுக்களில் இருந்து நான் அறிந்து கொண்டதாகும்.

எனினும் தொய்வின்றி நீங்கள் மேற்கொண்ட உங்களின் நல்ல பணியில் சேற்றைப் பூசிக் கொண்டதாக உள்ளதை நினைக்கின்ற போது மனம் வேதனை அடைகின்றது.
இஸ்லாமிய அறிஞர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் நீங்கள் இழைத்த இந்தப் பாரிய குற்றம் இழைத்ததாகவோ, அல்லது ஒருவரை எல்லை மீறி விமர்சனம் செய்ததாகவோ நமக்குத் தெரியாது.

உங்களுக்கு ஏற்பட்டுள்ள மானம் தொடர்பான நிலை நீங்கள் பிறரின் மானத்தை துச்சமாக மதித்ததும், அவர்களின் கண்ணியத்தை கலங்கப்படுத்தியதனாலுமா? என்று சுய பரிசோதனை செய்யுங்கள். நாம் அப்படித்தான் அஞ்சுகின்றோம்.

நீங்கள் வாழ்வில் பெரூம்பகுதியை உலகில் கழித்துள்ள நிலையில் உலக மனிதர்கள் என்னதான் பேசிக் கொண்டாலும் பறவாயில்லை என்ற அசமந்தப் போக்கில் இனியும் கவனயீனமாக இருக்காதீர்கள். ஏனெனில் திட்டும் நாவுகள் உரிமையோடு திட்டவும் சபிக்கவும் செய்வது நமது நல்ல மரணத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

எனவே இதன் பின்னராவது நீங்கள் தர்க்கவியல் மற்றும் பகுத்தறிவு சார் சிந்தனையில் பயணிப்பதை திறுத்தி விட்டு சிறந்த நூற்றாண்டில் வாழ்ந்த நல்லறிஞர்கள் வழியில் பயணிக்க முன்வாருங்கள்.

அல்லாஹ் நம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக!

والسلام عليكم ورحمة الله وبركاته

இப்படிக்கு
ரிஸ்வான் மதனி – இலங்கை
22/05/2018

2 comments

  1. الحمد لله ماشاء الله تبارك الله

    அல்ஹம்து லில்லாஹ்..

    மிகவும் அழகாக தெளிவாக நிதானமாக சிறப்பாக உமது கருத்துக்கள் உள்ளது இதை நிதானமாக( அவர்) படித்தால்
    அவருக்கு நேர்வழி கிடைக்கும் அல்லாஹ் நாடினால்

    அருமை ஷேக்ஹ் .

  2. அபூ சுஹைல்

    பீஜே தீயவர் என்பதை அவரின் சொந்த வாழ்க்கையின் அடிப்படையில் சுட்டிக்காட்டுவது குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில்தான். பார்க்க கீழ்கண்ட குர்ஆன் வசனம்

    49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

    ததஜவின் கொள்கை மற்றும் அடித்தளம் பீஜே போட்டது. பீஜேயை அப்படியே தக்லீத் செய்பவர்கள் ததஜவின் பக்தர்கள். கொள்கையின் சூத்திரத்தாரி பொய்யன் விபச்சாரகன் என்பதாக நாங்கள் சொல்லவில்லை. ததஜவின் நிர்வாகக்குழு சொல்கிறது. அதனால்தான் அவரை வெளியேற்றிய நடவடிக்கை.

    அப்படியிருக்க, குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் தீயவனின் கொள்கையை
    ததஜ மறுபரிசீலனை செய்யட்டும். பெரும்பாவம் ஒன்றை செய்த காலத்தில் தோற்றுவித்த கொள்கைதான் ததஜவின் தலைவன். அதாவது இவர்கள் சொல்லும் “கொள்கையே தலைவன்”.

    மேலும், பீஜே மற்றவர்களின் சொந்த வாழ்க்கையை அலசியதும் இந்த அடிப்படையில்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *