Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 2 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல்

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 2 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல்

அன்வர்தீன், பெரம்பலூர்

முஸ்லிம்களிடயே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே, இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள், கத்ரியாக்கள் (முஹ்தஸிலாக்கள்), ஷியாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்ற பல வழிகெட்ட கூட்டங்கள் தோன்றி மறைந்துள்ளன. உலகம் முடியும் வரை இதுபோன்று சோதனைகள் வந்து கொண்டே இருக்கும்.

அவர்களில் காரிஜியாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவந்தாலும் அவர்கள் அதனை விளங்குவதில் கருத்து வேறுபாடு கொண்டனர்.  உதாரணமாக விபச்சாரம், திருட்டு போன்ற ஹதீஸ்கள் அவர்களின் படுத்தறிவுக்கு முரணாக தோன்றியதால் அதை நிராகரித்தார்கள். மேலும் காரிஜியாக்கள் முத்தஸாபிஹாத்தான வசனங்களுக்கு விளக்கங்களை தாம் அறிந்திருப்பதாக அவர்களை பின்பற்றியவர்களை நம்ப வைத்தனர்.. சில நபித் தோழர்களை காஃபிர்கள் என ஃபத்வா கொடுத்தனர். 

இந்த வழிகெட்ட காரிஜியாக்களைப்பற்றி நபி (ஸல்) முன்னறிவிப்பு செய்த அலி (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புஹாரியில் 3611 ல் இடம் பெற்றுள்ளது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது…………

அப்படியே காரிஜியாக்கள் வாழ்ந்த காலத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ் காலத்துக்கு வாருங்கள். ஹதீஸ்களில் சொல்லப்பட்ட வாசகங்கள் NTF, TNTJ கூட்டத்தினருக்கு பொருந்துகிறதா என பொருத்திப்பாருங்கள்.

  • பூமியிலேயே சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள்.
  • பகுத்தறிவை கொண்டு ஹதீஸ்களை மறுப்பார்கள்.
  • சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள்.
  • முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள்.
  • சொல் ஒன்று செயல் வேறாக இருப்பார்கள்.
  • காஃபிர்கள் என ஃபத்வா கொடுத்து மகிழ்வதில் NUMBER ONE கூட்டத்தினர்…. Etc….

முஸ்லிம்களின் பார்வையில், இந்த நவீன பித்அத்வாதிகள் செய்த மிகப்பெரும் தவறாக ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதை அபாயகரமான பாரதூரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் மார்க்கம் என்ற பெயரில் அறங்கேற்றிய தில்லுமுல்லுகளில் ஹதீஸ் நிராகரிப்பு பிரதானமானது.  இப்போது இந்த கூட்டம், நாளை மற்றொரு கூட்டம் என்று ஹதீஸ்களை பகுத்தறிவு / புத்தியை கொண்டு மறுக்க ஆரம்பித்தால், இஸ்லாத்தின் அடிப்படையான அகீதாவே ஆட்டம் காண ஆரம்பித்துவிடும். ஆகையால் இவர்கள் மக்கள் மன்றங்களில் அடையாளம் காட்டப்பட்டு பூமிப்பந்தில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டியவர்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

உலக இஸ்லாமிய வரலாற்றில், இதுவரை தோன்றி மறைந்த அறிஞர்கள் யாரும் செய்யாத, இறை அச்சத்தை காலில் போட்டு மிதித்து, துணிந்து, ஹதீஸ்கலை அறிஞர்களால் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸஹீஹான ஹதீஸ்களை தன் மனம் போன போக்கில் நிராகரித்தவர் ஒருவரை காட்டச்சொன்னால், இயக்கவேறுபாடின்றி அனைவரும் தன் ஆள்காட்டி விரலை பீஜே மற்றும் TNTJ கூட்டத்தினரை நோக்கி நீட்டுவார்கள். பரவாயில்லை விட்டுவிடலாம் என்பதற்கு ஒன்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட தொன்னூற்றுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை சர்வ சாதாரணமாக மனோ இச்சையின் அடிப்படையில் நிராகரித்திருக்கிறார்கள்.

சுமார் கடந்த 20 ஆண்டு காலமாக முஸ்லிம் சமுதாயத்தில் தௌஹீதின் பெயரால் தோன்றிய வழிகெட்ட சிந்தனையென்று ஒன்று சொல்வதானால், அது ஸஹீஹான ஹதீஸ் மறுப்புக் கொள்கை தான். இந்தக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைப்பதும், குஃப்ரின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகவும் இதற்கு முன்னர் இஸ்லாத்தில் தோன்றிய வழிகெட்ட பிரிவினரின் வழிமுறையாகவும் உள்ளது. எனவே இதன் உண்மை நிலையை முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்த்தி இவ்வழிகேட்டில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.

ஆனாலும் இவர்கள் இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்குச் செல்வதற்கு முன் தவ்ஹீத் கொள்கைப் பற்றி நல்ல முறையில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதை அதிகமாக வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். இதுவெல்லாம் இவர்களின் இந்த ஹதீஸ் மறுப்பு வழிகேட்டை மக்கள் சரியாக புரிந்துக் கொள்வதற்கு பெரும் தடையாக உள்ளது.

இவர்கள் ஹதீஸ்களை அனுகும் விதமே அடிப்படையில் தவறானது. முதலில் ஹதீஸில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ந்து பார்த்து அதற்கு தகுந்தாற்போல் நம் அறிவை பயன்படுத்த வேண்டும். ஆனால் இவர்கள் முதலில் இந்த ஹதீஸை மறுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டு அதற்கு தகுந்தாற்போல் தம்முடைய அறிவை பயன்படுத்துவார்கள்.

முதலில் பெரிய அண்ணன் மறுப்பார்., பிறகு அவர்களின் அறிஞர் குழு? மறுத்து மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்லப்படும். இவர்களுடைய ஆய்வுக்கு மாற்று கருத்து கொண்டவர்கள் ஒன்று வெளியேறுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள். இப்படியாக அல்லாஹ் அருள் புரிந்த, அவர்களிடமிருந்து வெளியேறிய பல அறிஞர்கள், இவர்களைப்போல் அல்லாமல் கண்ணியமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் கிருபையால் ஒரு நன்மை நடந்திருக்கிறது. பெரிய அண்ணன் ஒன்றாக இருந்தபோது எல்லோரும் ஒருமித்த குரலில் ஹதீஸை மறுத்தார்கள்.  அவர் வெளியேற்றப்பட்டு NTF என்ற இயக்கம் ஆரம்பித்த பிறகு மறுக்கும் (உவைஸ் அல்கர்னி, இப்னு ஜியாது) போன்ற ஹதீஸை  TNTJ வினர் சரி காண்கிறார்கள். அதாவது முரண்பாட்டின் மொத்த உருவமான இவர்கள் ஒன்றாக இருக்கும்போது ஒரு நிலைபாடு. பிரிந்துபோன பிறகு வேரொரு நிலைபாடு. ஆகையால் இவர்கள் ஹதீஸை நிராகரிப்பதற்கு சூழ்நிலைக்கு ஏற்ப காரணங்களை மாற்றிக்கொண்டு இருப்பார்கள். எப்படியோ இவர்கள் தவறான வழியில் பயணிக்கிறார்கள் என்பதை அவர்கள் மூலமாகவே அல்லாஹ் இந்த உம்மத்துக்கு வெளிக்கொணர்ந்து விட்டான்.

மேலும், இவர்கள் ஹதீஸை மொழிபெயர்க்கும் போது / மேடைகளில் பேசும்போது சரியாக மொழியாக்கம் செய்யாமல், தங்களுடைய விளக்கங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்காக ஒன்று ஹதீஸை இருட்டடிப்பு செய்வார்கள் அல்லது கூடுதல் குறைவு செய்வார்கள்.

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு:

இறைவனால் அருளப்பட்ட வஹி செய்திகளை மறுப்பது இறை நிராகரிப்பு எனும் குப்ரில் கொண்டு சேர்க்கிறது. அல்குர்ஆன் வஹி என்பதை போல ஸஹீஹான ஹதீஸ்களும் இறைவனால் அனுப்பப்பட்ட வஹிச் செய்திகள் தான்.

உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர்(தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக அறிவிக்கப்படும் இறைச் செய்தியே தவிர வேறில்லை. அல்குர்ஆன் (53 : 2, 3, 4)

அல்லாஹ்வும் தூதரும் சொல்வதை அப்படியே ஏற்பதே முஃமினின் பண்பாக இருக்க வேண்டும். அதில் மனோ இச்சையை தினித்து மாற்று விளக்கம் கொடுக்கவோ தனது கொள்கைக்கு அது உடன்படவில்லை என்று மறுத்துவிடவோ எந்த முஸ்லிமுக்கும் அனுமதிக்கப்படவில்லை.

“அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தமது அக்கரரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவன் தெளிவாக வழிகெட்டு விட்டார்.” அல்குர்ஆன் (33:36)

மனோ இச்சை, பகுத்தறிவை விட இறைத்தூதரின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுத்த உமர் (ரழி) அவர்கள்.

உமர் (ரழி) அவர்கள் (இந்தக்) கருப்புக் கல் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ”நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன், நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்றார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்,etc..)

அலி (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

மார்க்கத்தில் பகுத்தறிவைக் கொண்டு முடிவு செய்வதாக இருந்தால் காலுறையின் மேற்புறத்தில் மஸஹ் செய்வதை விட அதன் கீழ்ப்புறத்தில் மஸஹ் செய்வதே பொருத்தமானதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர் : அலீ (ரழி), நூல் : அபூதாவூத் 140

மனோஇச்சை, பகுத்தறிவை பின்னுக்குதள்ளி, இறைத்தூதரின் கட்டளைக்கு முன்னுரிமை கொடுத்த ஸஹாபாக்களின் பண்பை இஸ்லாமிய சமுதாயம் இவர்களிடம் எதிர்பார்க்கிறது.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *