Featured Posts
Home » பொதுவானவை » உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்

உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்

பணவீக்கம், காவிரிப் பிரச்சினை,கன்னட பிரசாத், நொய்டா படுகொலைகள் போன்ற தலைப்புச் செய்திகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பங்களாதேஷ் இந்தியாவை வென்றதை தலைப்புச் செய்தியாகவும் அதற்கான காரண காரியங்கள் பற்றிய அலசலும் டி.வி. ரேடியோ, இணையம் என எல்லா ஊடகங்களிலும் விவாதிக்கப் படுகிறது. நம் இளைஞர்களின் தற்போதைய கவலையெல்லாம் இந்தியா சூப்பர்-8 க்கு தகுதியாகி விட வேண்டும் என்பதுதான்!

பண்டைய கிரேக்க மன்னர்களுக்கு எதிராக இளைஞர்கள் திரும்பிவிடக் கூடாதென்பதால் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு,அதில் இளைஞர்களின் கவனத்தை செலுத்தியதாக சொல்லப்படுவதுண்டு. ஆங்கிலேயர்கள், குளிர் காலங்களில் இரத்த ஓட்டம் சீராக வைத்திருக்க நாள்முழுதும் விளையாடக் கூடிய கிரிக்கெட் விளையாட்டைக் கண்டுபிடித்தார்கள் என்றும் சொல்லப் படுகிறது.

கிரிக்கெட் தவிர்த்த மற்ற விளையாட்டுக்களில் போட்டியாளர்கள் உடலால் கடுமையாகப் போராடி திறமையைக் காட்டி வெல்கின்றார்கள். கிரிக்கெட் விளையாட்டிலும் திறமை, உடல் வலிமை அவசியமாகப் பட்டாலும் மற்ற விளையாட்டுக்களை விட குறைவு.

சமீப காலங்களில் அணியின் வெற்றி Match Fixing எனும் சூதாட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டது. மற்ற துறை விளையாட்டுக்களைவிட கிரிக்கெட் வீரர்கள் சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக அல்லது அதிகமான ஊதியம் பெறுகிறார்கள். கிரிக்கெட் வீரர் இல்லாத விளம்பரங்களே இல்லை எனும் அளவுக்கு கிரிக்கெட் மோகம் அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது.

பத்தாண்டுகள் பள்ளி வாழ்க்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும் SSLC மற்றும் தொழிற்கல்வி தேர்வு நேரத்தில், தேர்வு ஜுரத்தைவிட கிரிக்கெட் ஜுரம் மாணவர்களையும் வாட்டுகிறது. மெகா சீரியல்களால் சிறைவைக்கப் பட்டுள்ள தாய்மார்களையும் ‘குர்குரே’ கொரிக்க வைத்து கிரிக்கெட் ரசிகர்களாக மாற்றிய வல்லமை உலகக்கோப்பைக் கிரிக்கெட்டிற்கு உண்டு.

இரவு-பகல் போட்டிகள் நம் நாட்டு நேரத்தில் நள்ளிரவில் ஒளிபரப்பப் படுகின்றன. இரவு முழுவதும் கண் விழித்து மறுநாள் அலுவலகம், கல்லூரி என எல்லாப் பணிகளும் கண் எரிச்சலுடன் நடைபெறுகின்றன. மொபைல் போன்களிலும் கிரிக்கெட் பற்றிய SMS, FLASH NEWS எனப் பரிமாறப்பட்டு தொழில்நுட்பம் விரயம் செய்யப்படுகிறது.

இந்தியா-பங்களாதேஷ் இடையேயான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் நம் அணியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். எதிரொலியாக முதல்நாள் பூசிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் மறுநாள் கொடும்பாவி கொழுத்தப்பட்டார்கள்! மறுநாள் ரசிகர்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொண்ட நமது வீரர்கள் பெர்முடா அணியின் பெர்முடா கிழியும் அளவுக்கு நானூறுக்கும் அதிகமான ரன்கள் எடுத்து உலக சாதனைப் படைத்துள்ளார்கள்.

சூப்பர்-8 போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வெளியேறிய பிறகு, உலக கோப்பை போட்டி நடத்துபவர்களின் ஒரே கவலையெல்லாம் இந்தியா எப்படியாவது இலங்கையை வென்று சூப்பர் எட்டுக்கு தகுதியாகிவிட வேண்டும் என்பதே! பதினாறு நாடுகள் விளையாடும் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று கவலைப்படும் இவர்களுக்கு இந்திய தேசப்பற்று ஒன்றும் வந்து விடவில்லை. கோடிக்கணக்கில் விற்கப்பட்ட வர்த்தக விளம்பரங்கள் நஷ்டமடைந்து விடக்கூடாது என்ற கவலைதான் இந்த திடீர் இந்தியதேசப் பற்றுக்குக் காரணம்!

ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பரெட்டிலிருந்து வெளியேறிவிட்டதால் கனிசமான விளம்பர வருவாய் குறைந்து விட்டதாம்! சூப்பர் எட்டிலிருந்து இந்தியாவும் வெளியேறினால்,

  • உலகக்கோப்பை கிரிக்கெட் ரசிகர்களில் கிட

2 comments

  1. சாணான்

    நீங்கள் அடுக்கிய காரணங்களுக்காகவே இந்தியா இலங்கையுடன் விளையாடும் போட்டியில் தோற்க வேண்டும் போல் உள்ளது.

    தேசபக்தியை விலைக்கு வாங்கியவர்கள் கையில் சூலாயுதம் எடுக்கும் முன் விடு ஜூட்!

  2. நல்லடியார்

    3,000 கோடி ரூபாய்களை விழுங்கிய இந்திய கிரிக்கெட் அணி:
    ஒரு அலசல் ரிப்போர்ட்

    இனி, சச்சின் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைக் கையில் எடுத்து, ‘இதுதான் என் வெற்றியின் ரகசியம்’ என்றால் ரசிப்பீர்களா? தோனி, தன் கூந்தலை வருடியபடி ‘இந்த ஷாம்பு என்னை மாதிரியே பெர்ஃபெக்ட்’ என்று சொன்னால், அந்த ஷாம்பு மேல் வெறுப்புத்தானே தோன்றும்? டிராவிட் அமைதியான முகத்தோடு வந்து ‘ஊ.. ஆ.. இந்தியா..’ என்று கத்தினால், டி.வி.யை உடைக்க வேண்டும் என்றே தோன்றுமல்லவா?
    இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல. ஒரு மதம். ரசிகர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட் வீரர்கள், சாதாரண மனிதர்களல்ல. தங்களின் சொந்த ஊர்களில் தெய்வங்களாகவே கொண்டாடப்பட்டார்கள். எல்லாம் மார்ச் 23, நள்ளிரவோடு முடிந்துவிட்டது. அன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கையிடம் அடைந்த தோல்வியை, யாராலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு இந்தியனும் அதை தேசிய அவமானமாகவே கருதுகிறான்.

    விளைவு? வீரர்களின் உருவ பொம்மைகள் எரிப்பு, செருப்படி, பாடை கட்டி ஊர்வலம், கொந்தளிப்பு எஸ்.எம்.எஸ்.கள், கோபக் குமுறல்கள், இரண்டு ரசிகர்களின் மரணம். என்றாலும் ரசிகர்களின் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. அடங்குவதாகவும் இல்லை. ஒவ்வொரு வீரரின் வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு தொடரவே செய்கிறது.

    மனரீதியாக இவ்வளவு பாதிப்புகள். பண ரீதியாக? இன்னும் நிறையவே!

    முக்கியமாக கிரிக்கெட்டை ஒளிபரப்பும் டிவி நிறுவனங்களும், அதில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களும் தலையில் துண்டல்ல, துணிக்கடையையே போட்டுக் கொண்டு அழுகின்றன.

    நோக்கியா, பெப்ஸி, ஹீரோ ஹோண்டா, வீடியோகான், மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்கள் மேட்ச் ஒளிபரப்பப்படும்போது டிவியில் காட்டப்படும் விளம்பரங்களுக்காக மட்டும் 400 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. மேட்ச் நடக்கும் மைதானங்களிலும், மற்ற இடங்களிலும் வைக்கப்படும் விளம்பர போர்டுகளுக்காக மட்டும் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இந்த விளம்பரங்களின் தயாரிப்புச் செலவு, கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் செலவு, முக்கிய நகரங்களில், முக்கிய இடங்களில் விளம்பரங்களை வைக்க ஆகும் செலவு, பத்திரிகைகள், ரேடியோ, கிரிக்கெட் ஒளிபரப்பாகாத பிற சேனல்களில் இந்த விளம்பரங்களை வெளியிட ஆகும் செலவு, இன்னபிற லொட்டு லொசுக்கு செலவுகளுக்கெல்லாம் சேர்த்து 3000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.

    இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான முக்கிய ஸ்பான்சரான பெப்சியின் விளம்பர பட்ஜெட் மட்டும் 40 கோடி ரூபாய். இந்திய வீரர்களை நம்பி எடுத்த விளம்பரங்களை எரித்து விடலாமா என்றுகூட தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறது. இதே கவலையோடுதான் ரீபோக், விசா நிறுவனங்களும் இருக்கின்றன.

    ‘ப்ளீஸ்.. ஏதாவது செய்து என்னைக் காப்பாற்றுங்களேன்’ என்று நோக்கியா நிறுவனம் சோனியிடமும் தூர்தர்ஷனிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. இந்திய வீரர்களின் முகத்தை நம்பாத நிறுவனங்களும், கிரிக்கெட் கான்செப்ட் இல்லாமல் விளம்பரங்களை எடுத்துள்ள நிறுவனங்களும் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன. இருந்தாலும், இந்தியா விளையாடாத மேட்சுகளில் விளம்பரம் கொடுத்து என்ன பயன் என்று சீரியஸாகவே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சரி, விளம்பரங்களைக் கொடுப்பவர்களுக்கே இவ்வளவு நஷ்டம் என்றால், விளம்பரங்களை ஒளிபரப்பும் சேனல்களுக்கு? பல மடங்கு.

    சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, கிரிக்கெட் மேட்சை ஒளிபரப்பும் உரிமம் வாங்குவதற்கு, சேனல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை கொடுத்தது. ஆனால், கிரிக்கெட் மிகப் பெரிய வர்த்தகமாக்கப்பட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *