Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » பீஜே யின் மறுப்புக்கு மறுப்பு – தொடர் (1)

பீஜே யின் மறுப்புக்கு மறுப்பு – தொடர் (1)

கண்ணியத்திற்குரிய அறிஞர் பீஜே அவர்கள் எனது ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடர் கட்டுரைக்குத் தனது உத்தியோகபூர்வ இணையத் தளத்திலேயே பதிலளிக்க முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

சிலர் தமது இமேஜைப் பாதுகாக்கத் தமது மாணவர்களை விட்டே மறுப்பும், விவாதமும் செய்து வரும் இந்தக் காலத்தில், தானே பதிலளிக்க முன்வந்துள்ளமை வரவேற்கப்படவேண்டியதே!

அடுத்ததாக, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ‘சூனியம் – கலந்துரையாடல்’ எனும் சீடியில் எனது கட்டுரை குறித்து, ‘இதற்குப் பதிலளிக்கத் தேவையில்லை. இதற்குச் சாதாரண மக்களே பதிலளித்து விடுவர். அடுத்து, இந்தக் கட்டுரை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வெறும் உளரல்தான் இதிலுள்ளது’ என்ற அடிப்படையில் கருத்துத் தெரிவித்தவர், வெளியில் நிகழ்ச்சிகளுக்கே செல்லாமல் அறையில் இருந்து கொண்டு மறுப்பு எழுதும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்றால், ஏற்கனவே அவர் கூறிய ‘உளறல் குப்பை’ என்ற விமர்சனத்தை அவரே வாபஸ் வாங்கிக் கொண்டார் என்றே அர்த்தமாகும். மார்க்க விடயங்களில் மட்டுமன்றி உலக விடயங்களிலும் இவர் அடிக்கடி முடிவுகளை மாற்றித் தனக்குத் தானே முரண்பட்டுக்கொள்ளும் இயல்புடையவர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

நான் அவரது கருத்தை விமர்சனம் செய்யும் முன்னர் அவரது தியாகங்கள், திறமைகள், அவர் மூலம் நடந்த நன்மைகளைக் கூறி விமர்சனம் செய்துள்ளேன். பல முறை இலங்கைக்கு அவரை அழைத்துப் பிரச்சாரம் செய்த அமைப்பின் நன்மைகள் எதையும் அவர் பார்க்காமல் குரோத மனப் பான்மையில் அவதூறுகளைக் கூறியுள்ளார். அடுத்தவர்களின் நலவுகளையோ, தனது தவறுகளையோ ஒப்புக்கொள்ளும் இயல்பு இவரிடம் இல்லை என்பதற்கு இந்த மறுப்பு நல்ல சான்றாக உள்ளது.

எனது கட்டுரையை வெளியிட்ட இணையத் தளத்தைச் சாடியவாறே அவரது விமர்சனம் ஆரம்பமாகின்றது.

‘அனைத்து குப்பைகளின் குப்பைத் தொட்டியாக பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம் டாட்காம்’
குப்பைத் தொட்டி,
கொள்கை இல்லாதது
பலவேசம் டாட்காம்
இவைகளெல்லாம் ஒரு பண்பட்ட அழைப்பாளரின் பதப் பிரயோகமா?

‘உங்களுக்கிடையே நீங்கள் குறை கூற வேண்டாம். மேலும், பட்டப் பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் தீய பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றை விட்டும்) மீளவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.’ (49:11)

என அல்லாஹுத்தஆலா பட்டப் பெயர் சூட்டுவதைக் கண்டிக்கின்றான். சகோதரர் பீஜே அவர்களே! உங்களை ஒரு கூட்டம் சாணுக்கு சாண் பின்பற்றிக்கொண்டிருக்கின்றது. இஸ்லாம் கல்வி டாட் காம் இணையத் தளத்திற்கு நீங்கள் சூட்டியுள்ள பட்டப் பெயரையே உங்களது சகோதரர்களும் பயன்படுத்தி வருவதிலிருந்து இதை அறியலாம்.

எனவே, உங்களை ஒரு கூட்டம் பின்பற்றுகின்றது என்ற பொறுப்புணர்வுடனும், அவர்களைத் தவறான வழிக்கு அழைத்துச் சென்று அவர்களது பாவத்தையும் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலை உங்களுக்கு வந்து விடக் கூடாது என்ற அச்சத்துடனும் நீங்கள் செயல்பட வேண்டும் என அன்புடன் நஸீகத்துச் செய்கின்றேன்.

‘பட்டப் பெயர் சூட்டாதீர்கள்’ என்ற குர்ஆனின் கட்டளைக்கு முரணாக ஆரம்பிக்கப்பட்ட உங்கள் மறுப்பு ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

சகோதரர் பீஜே அவர்கள் கருத்தை விமர்சிக்கும் முன்னர் கருத்துடையவரது மதிப்பையும், மரியாதையையும் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார். இதுவே அவரது கொள்கைப் பலவீனத்தைக் காட்டுகின்றது.

அவர் எனது கண்ணியத்தைக் குறைத்து அதன் மூலம் எனது கருத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்காக

‘இஸ்மாயில் ஸலபியும் அவருக்கு படியளக்கும் ஜம்யிய்யது அன்ஸாருஸ் ஸுன்னாவும் மார்க்கத்துக்கு ஒரு தீங்கு என்றால் கொந்தளித்து எழுக் கூடியவர்கள் அல்ல. தவ்ஹீதுக்கு எதிராகவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவும் செயல்படுபவர்களுக்கு எடுத்து தொடர் என்ன எட்டு வரியிலும் பதிலளிக்காதவர்கள்’

என்று குறிப்பிடுகின்றார். தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுபவர்களுக்காக நாம் 8 வரி கூட எழுதவில்லை என்கின்றார். இவரை நான்கு முறை இலங்கைக்கு அழைத்து தஃவா செய்தது அறபு நாட்டு நிதியுடன் சம்பந்தப்பட்ட அமைப்புக்களே!

தவ்ஹீதுக்கு எதிரானவர்களுக்கு எதிராக 8 வரி கூட ஏன் எழுதவில்லை என்று அப்போது தட்டிக் கேட்காதது அல்லது சுட்டிக் காட்டாதது ஏன்? நான் தவ்ஹீதுக்கு எதிரானவர்களுக்கு எதிராக 8 வரி கூட எழுதியதில்லை என்று அவர் கூறுவதில் அவர் எவ்வளவு பெரிய பொய்யராக இருக்கின்றார் என்பதை சமூகம் அறிந்துகொள்ளும்.

எனது முதல் நூலே ‘பாகிஸ்தான் மௌலானா’ என்பவருக்கு எதிராக எழுதப்பட்ட ‘இறை நம்பிக்கைக்கு எதிரான சவால்கள்’ எனும் நூல்தான். எனது இரண்டாவது நூலான ‘கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் திருத்தப்பட வேண்டிய தீர்வுகள்’ எனும் நூல். இவர், ‘அல் ஜன்னத்’தில் இருக்கும் போது இவருடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில்தான் அச்சிடப்பட்டது. எனது ‘ஷீஆக்களின் சீர்கேடுகள்’, ‘தாயத்து ஈமானுக்கு ஆபத்து’, ‘சகுணம்’, ‘அல்லாஹ் எங்கும் உள்ளானா?’, ‘இஸ்லாமிய அகீதா – ஒரு விளக்கம்’, ‘காதியானிகள் – ஓர் எச்சரிக்கை’ போன்ற நூற்கள் கொள்கை ரீதியாக எழுதப்பட்டவைகளாகும். அண்மைக் காலமாக அனைத்தையும் நான்தான் செய்தேன் என்று இவர் எழுதுவதையும், பேசுவதையும் கூட ஜீரணித்துக்கொள்ளலாம். ஆனால் ‘வேறு எவரும், எதையும் செய்யவில்லை’ என இவர் குறை கூறுவதுதான் வேதனையானதும், வேடிக்கையானதுமாகும். (எட்டு வரி கூட எழுதியதில்லை எனக் கூறியதற்காகவே 8 நூற்களைக் குறிப்பிட்டுள்ளேன்.)

அடுத்ததாக, அறபு நாட்டுப் பணத்துக்கு எதிராகப் பீஜே பேசியதால்தான் நாம் அவருக்கு எதிராக எழுதியதாகக் கூறுகின்றார். ‘அடி மடியில் கை வைக்கின்றானே’ என்ற ஆதங்கம்தான் இந்த மறுப்புக்குக் காரணம் என்கின்றார்.

இவர் அறபு நாட்டுப் பணத்துக்கு எதிராகப் பேசினால் இவரது பேச்சைக் கேட்டு அவர்கள் தமது பொதுப் பணியை நிறுத்தி விடுவார்களா? பீஜே இப்படிப் பேசியதற்குப் பின்னர்தான் ஓட்டமாவடி பள்ளி, சம்மாந்துறை அனாதை இல்லம், ஓட்டமாவடி அனாதை இல்லம் போன்ற பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் துவங்கின. எனவே, இவர் அறபு நாட்டுப் பணத்துக்கு எதிராகப் பேசினால் ‘அடி மடியில் கை வைக்கின்றானே!’ என நாம் பயந்ததாகக் கூறுவது இவரது சிறு பிள்ளைத்தனமான கற்பனையாகும்.

‘உள்நாட்டில் மக்களிடம் நிதி திரட்டி தஃவா செய்யும் போது தாறுமாறாக பணம் குவியாது. பணம் கொடுத்த மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் பெருமளவுக்கு ஊழல் நடக்காமல் காத்துக் கொள்ள முடியும்’

அறபு நாட்டுப் பணத்தில் கிடைக்கும் கமிஷன், எடுக்கும் கமிஷன் என்றெல்லாம் அவதூறு கூறும் சகோதரர் எழுத்து மூலமாகவே தமது அமைப்பில் ஊழல் நடப்பதை ஒத்துக் கொண்டு விட்டார். பெருமளவுக்கு ஊழல் நடக்காமல் காத்துக்கொள்ள முடியும் என்று கூறியதன் மூலம் சின்ன அளவில் (சின்ன அளவு என்பது அவரவர் தகுதிக்கு ஏற்ப கூடுதலாகவும், குறைவாகவும் இருக்கலாம்) ஊழல் நடக்கிறது. பெருமளவில் ஊழல் நடக்காததற்கு இறையச்சம் காரணமல்ல. மக்கள் கேட்பார்கள் என்ற பயம். எவ்வளவு கொடுத்தோம் என்பது மக்களுக்குத் தெரியாவிட்டால் அந்தப் பயமும் அற்றுப் போய் விடும். இதுதான் உண்மை. ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துக்கு நிதியளிக்கும்போது  ‘வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்’ என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் இருதரப்பினரும் கைச்சாத்திட்ட பின்னரே நிதியளிக்கப்படுகின்றது. இவ்வாறு நிதியனுப்பினால் அனுப்பிய நிறுவனத்திற்கும், பெற்ற நிறுவனத்திற்கும் தொகை எவ்வளவு என்பது தெரியும். அவர்களிடமும் கணக்குக் காட்ட வேண்டும். பணத்திற்குரிய பணி நடந்திருப்பதை நிரூபிக்க வேண்டும். வெளி நாட்டு நிறுவனம் இங்குள்ள ஒரு நிறுவனத்துடன் 25 வருடங்களாகத் தொடர்பைப் பேணுகின்றது என்றால், அது அந்த நிறுவனத்தின் நேர்மைக்குச் சான்றாகும்.

ஆனால், பீஜே தனது தோழர்களை இலங்கை, குவைட், கடார் (Sri lanka, Kuwait, Qatar) என நிதி திரட்ட அனுப்புகின்றார். அவர்கள் நிதியைத் திரட்டுகின்றார்கள். திரட்டுகின்ற அந்தத் தனி மனிதருக்கு மட்டும்தான் எவ்வளவு திரட்டப்பட்டது என்பது தெரியும். கொடுத்தவர்களுக்கோ, அமைப்புக்கோ எவ்வளவு என்ற விபரம் தெரியாது! அங்குதான் ஊழல் நடைபெறும் சாத்தியம் உள்ளது. அதைத்தான் பீஜே பெருமளவு ஊழல் நடக்காது என்பதன் மூலம் ஒத்துக் கொண்டுள்ளார். இவர்களால் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீது இவர் சுமத்தும் இலட்சக் கணக்கான ரூபாய்களுக்கான  ஊழல் குற்றச் சாட்டுக்கள் இதை இன்னும் உறுதி செய்கின்றன.

அடுத்து, அனைத்துத் தவ்ஹீத் கூட்டமைப்பு என்ற பெயரில் இவர்கள் இயங்கிய போது, இவர்களது அப்போதைய தலைவரும், அதற்கடுத்த தலைவராகச் செயல்பட்ட, தற்போதும் இவரது அமைப்பில் உள்ள ஒரு ஆலிமும் 1999 களில் குவைட்டிலுள்ள ‘லுஜினதுல் காரதில் ஹிந்திய்யா’ என்ற அமைப்பிடம் நிதி உதவி பெற முயற்சி செய்து முடியாமல் போனது. இது குறித்து நான் தங்கியிருந்த அறையில் இருந்துதான் அவர்கள் பேசித் திட்டங்கள் பலவும் தீட்டினார்கள்.

அறபுப் பணம் கிடைக்காதவர்கள் உள் நாட்டு வசூலை இலக்காக் கொண்டு, ‘சீ சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று நரி நாடகமாடுகின்றனர். இதுதான் உண்மையாகும்.

இவர் அறபு நாட்டுப் பணத்துக்கு எதிராகப் பேசியது அல்ல. அது தொடர்பில் அவதூறு கூறியதும், இலங்கை தவ்ஹீத் சகோதரர்களைப் பிரித்ததும், இந்தியா சென்று ஜமாஅத்துக்கள் ஒன்றிணைந்தன என்று பொய் செய்தி வெளியிட்டதும் இவர் மீது வெறுப்பை உண்டாக்கின என்பதுதான் உண்மையாகும்!

பொய் சொல்பவர்களுக்கு அதிக ஞாபக சக்தி தேவை என்பர். அப்போதுதான் சொன்ன பொய்க்கு அமைவாகத் தொடர்ந்தும் பொய் சொல்லலாம். முன்னர் கூறிய பொய்யை மறந்து மறுப்பு எழுதிய பீஜே யின் போலித் தன்மையை அவதானிக்கலாம்.

‘இலங்கையிலிருந்து ஒரு மடல்’ என்ற தலைப்பில் (1996 – ஆகஸ்ட்) க்குப் பின்னர் நாம் அவரை தரக் குறைவாக விமர்சிக்க ஆரம்பித்ததாகவும், அவர் ஆசிரியராக இருந்த ‘அல் ஜன்னத்’தை வாங்குவதை உடன் நிறுத்தியதாகவும் தனது இணைதளத்தில் கூறியுள்ளார். (இதன் பின்னரும் இவரும், இவருடன் உள்ள உலமாக்களும் இலங்கைக்குத் தருவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தமிழகத்திலுள்ள ஒரு அமைப்புக்கு நிதியளிக்குமாறு வேண்டி 1998ல்  பீஜே தனது கைப்பட எழுதிய கடிதம் எமது கைவசம் இருக்கிறது என்பதும் தனி விடயம்.) இப்படிப் பொய் கூறியவர், அதை மறந்து ‘2002 க்குப் பின், அதாவது நான் கொள்கை கெட்டவனாக ஆன பின்பும் என்னை ஆதரித்தனர் எதிர்க்கவில்லை என்பதே உண்மை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

1996 இல் இருந்தே விமர்சித்து எதிர்த்தது அல்லது 2002 க்குப் பின்னரும் ஆதரித்து எதிர்க்கவில்லை என்ற இரண்டில் ஏதோ ஒன்று பொய் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இரண்டையும் பீஜேதான் கூறியுள்ளார். அதுவும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து வைக்கும் இணையத் தளத்திலேயே வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தனது பொய் முகத்தை அவரே அம்பலப்படுத்தியுள்ளார்.

அடுத்து, அறிஞர் பீஜே அவர்கள் அற்புதமான அவதூறுகளை முன்வைக்கின்றார்.
‘கொள்கையற்ற கும்பல், ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னா மூலம் ஒரு கவிதை நூல் வெளியிட்டனர்”. (இந்தத் தமிழ்ப் பிழை அவருடையது.)

‘இஸ்மாயில் ஸலபியின் மேற்பார்வையில் வெளியிடப்பட்ட நூலில்… அறபு நாட்டுச் சல்லியில் வெளியிடப்பட்ட நூலில் இடம் பெற்ற வாசகங்கள்…’ என்று கூறி எனக்குச் சம்பந்தமில்லாத ஒரு நூலுடன் என்னைச் சம்பந்தப்படுத்துகின்றார்.

இக்பால் அலி என்ற ஒரு கவிஞரால், ‘புள்ளிகளில் சில புள்ளிகள்’ என்ற ஒரு நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கும், அறபு நாட்டுப் பணத்துக்கோ, ஜம்இய்யாவுக்கோ எந்தச் சம்பந்தமுமில்லை. இந்த நூல் எனது மேற்பார்வையில் எழுதப்படவும் இல்லை. ஆனால், அந்த நூலில் அவர் குறிப்பிட்ட தவறான கவிதை இடம்பெற்றுள்ளது. யாரோ எழுதிய கவிதையில் உள்ள தவறுக்கு நான் ஏன் தவ்பாச் செய்ய வேண்டும்? அவர் வேண்டுமானால் முஜீபுர் ரஹ்மான் உமரியுடன் நடந்த தெருச் சண்டையின் போது, ‘அல்லாஹ்வைப் பற்றிப் பேசாதீங்க‘ என்று கூறியதற்குத் தவ்பாச் செய்து கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணையட்டும்.

[flashvideo file=http://www.islamkalvi.com/wp-content/uploads/2009/10/mujeeb.flv /]

இதோ அவர் அவதூறாக என்னைச் சம்பந்தப்படுத்திய அந்த நூலின் ஆசிரியரின் வாக்குமூலம்:

‘புள்ளிகளில் சில புள்ளிகள்’ என்ற எனது நூலுக்கும், இஸ்மாயில் ஸலபிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்த நூல் அறபு நாட்டு பணத்தாலோ, ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னாவினாலோ வெளியிடப்படவில்லை. ‘ஞானம் பதிப்பகம்’ எனும் தமிழ்ப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதாகும். குறித்த எனது கவிதையில் உள்ள தவறை ஜம்இய்யாவின் உலமாக்கள் பலரும் என்னிடம் சுட்டிக் காட்டினார்கள். நான் இப்போது அந்தக் கருத்திலும் இல்லை. இது குறித்துப் பீஜே வெளியிட்டுள்ள கருத்துக்கள் பொய்யான அவதூறாகும் என்பதை உறுதி செய்கின்றேன்.’
-இக்பால் அலி

இதோ அந்த நூலின் பதிப்புரை

பதிப்புரை

PULLI

புத்தகத்தின் அட்டையைப் போட்டவர் வெளியீட்டகத்தை மறைத்து விட்டுத் திட்டமிட்டு என் மீதும், அன்சாரிஸ் ஸுன்னா மீதும் அவதூறு கூறியுள்ளார். எழுத்து மூலம் உள்ள வெளிப்படையான இந்த விடயத்திலேயே இப்படித் துணிந்து பொய் கூறுகின்றவர், மறைவான செய்திகளில் எவ்வளவு துணிந்து பொய் கூறுபவராக இருப்பார் என்பதைப் பொது மக்கள் உணர்ந்துகொள்ளலாம். தமிழகத்தின் தலை சிறந்த ஒரு அறிஞர் இப்படித் தரங்கெட்டு விமர்சிப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவாகும்.

பீஜே அவர்களின் சகோதரர் எழுதிய திருக்குர்ஆனின் நிழலில் என்ற நூலில்

sosalism

பக்கம் XI

எனத் தெளிவாக இஸ்லாமிய சோசலிஸம் எனும் கமியூனிஸவாதம் முன்வைக்கப்பட்டுள்ளதே. உங்கள் அண்ணன் இஸ்லாமிய பொருளாதாரத்தையே மாற்ற முயற்சித்த இந்தக் குற்றத்தை எப்போதாவது போட்டு உடைத்துள்ளீர்களா? எம்மீது நீங்கள் சுமத்திய கம்யூனிஸ வாதி என்ற குற்றச்சாட்டு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நோக்கி வந்துள்ளது இதற்கு நீங்கள் கூறும் நியாயமான பதில் என்ன?

அடுத்ததாக, பீஜே அவர்கள் 2:102 வசனத்தில் வரும் ‘பிஹி’ என்ற சொல்லுக்கு அர்த்தம் செய்யாது விட்டிருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இது கடையநல்லூர் மத்ரஸாவின் இலங்கை மாணவர் ஒருவர் மூலம் அப்துன்னாஸர் மௌலவிக்கு எத்திவைக்கப்பட்டு அவர் இது குறித்துப் பீஜே யுடன் பேசி அவரும் அடுத்த பதிப்பில் திருத்துவதாகக்; குறிப்பிட்டதாகப் பீஜே யின் மத்ரஸா மாணவர் ஒருவர் எமக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார். பீஜே யின் தர்ஜமா 8 ஆம் பதிப்பில் கூட அந்தத் தவறு திருத்தப்படவில்லை. ‘தவறுகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் சுய கௌரவம் பாராமல் அதை ஏற்றுக்கொள்வோம்’ என்று கூறுவதில் அவர் எவ்வளவு தூரம் உண்மையாளராக நடந்துள்ளார் என்பதற்கு இது சான்றாகும்.

இவர் தனது தர்ஜமாவில் 2:102 இல் ‘பிஹி’க்கு அர்த்தம் செய்யாதது பற்றி நாம் குறிப்பிட்டிருந்தோம். சூனியம் இருக்கின்றது என்று கூறும் போது ‘பிஹி’க்கு அர்த்தம் செய்திருப்பது அதே வேளை தர்ஜமா (பதிப்பு நான்கு) 1313 ஆம் பக்கத்தில் ஒரு இடத்தில் ‘பிஹி’க்கு அர்த்தம் செய்திருப்பதும், மற்ற இடத்தில் செய்யாதிருப்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு மறுப்பாக அமையும் விதத்தில்    நாம் சுட்டிக் காட்டிய தவறைத் திருத்தாமல் முபாறக் (ஸலபி) மொழி பெயர்த்த ஒரு நூலில் இடம் பெற்ற ஒரு ஹதீஸின் சில பகுதிகள் மொழி பெயர்க்காமல் விடப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றார்.

‘நீங்கள் தவறு செய்துள்ளீர்கள்’ என்று கூறினால், இன்னொருவரைக் காட்டி ‘அவரும் தவறு செய்துள்ளாரே!’ என்று கூறுவதுதான் சுய கௌரவம் பாராது தவறை ஒப்புக்கொள்ளும் இலட்சணமா?

ஒரு விவாதத்தில் இவரது தர்ஜமாவில் குறை இருப்பதாகக் கூறப்படுகின்றது. ‘என்ன குறை?’ என்று கேட்காமல், ‘நீங்கள் சரி காண்கிற தர்ஜமாவை எடுத்துட்டு வாரீங்களா? இரண்டுல எதில தவறு அதிகமாக இருக்கின்றது என்று புட்டு புட்டு வைப்பமா?’ என எதிர்க் கேள்வி கேட்கிறார். அது சரி. அடுத்தவர் தவறு செய்திருந்தால், நீங்கள் செய்தது சரி என்று ஆகி விடுமா?

முபாறக் (ஸலபி) மொழி பெயர்த்த அந்த நூலை மீண்டும் அச்சிட்டால் நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸை முழுமையாக இடம் பெறச் செய்கின்றோம் இன்ஷா அல்லாஹ். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இருப்பினும் அந்த ஹதீஸை அவர் முழுமையாக மொழி பெயர்க்காததற்கு நீங்களாக உள் நோக்கம் கற்பித்தமை அறியாமையை அம்பலப்படுத்துகின்றது. அதே வேளை, காஃபிர்கள் கேட்பார்கள் என்பதற்காக இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்றும் துணிந்து மறைவான செய்தியை அறிந்தவர் போல் பொய் கூறுகிறார். அது மட்டுமன்றி, ‘இப்படியெல்லாம் துள்ளிக் குதித்த ஸலபி காஃபிர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக இருட்டடிப்புச் செய்வது எங்ஙனம் சரியாகும்?‘ என்று அற்புதமான கேள்வியையும் கேட்கிறார். ‘இவரால் இப்படியெல்லாம் உளர முடிகின்றதே!’ என்று ஆச்சரியமாக உள்ளது. இது முபாறக் (ஸலபி) மொழி பெயர்த்தது எனும் போது, நான் எப்படி இருட்டடிப்புச் செய்ததாகும்? என்பதை நடுநிலையுடன் சிந்தித்துப் பாருங்கள்!

அடுத்ததாக, இக்பால் மதனியின் தர்ஜமாவில் ‘நாங்கள் இருவரும் அகிலத்தின் இரட்சகனின் தூதராவோம்’ என்பதற்குப் பதிலாக, ‘அகிலத்தின் இரட்சகனாகிய தூதர்கள்’ என்று தவறாக அச்சாகியுள்ளது. இது அச்சுத் தவறு என்பதை சாதாரண வாசகன் கூட அறிவான். (அஷ்ஷூரா அத்தியாயம் என்று போட்டுள்ளார். அது 42 வது அத்தியாயம் அஷ்ஷுஅரா (26 ஆம்) அத்தியாயம் என்பதே சரியாகும். இதை வைத்து அஷ் ஷூரா அத்தியாயத்தில் இல்லாததை இருப்பதாகக் கூறிவிட்டார் என்று இவர் போல் விஷமத்தனமான விமர்சனம் செய்ய மாட்டோம். இது இவரால் ஏற்பட்ட தவறுதான் எனினும் கவனக் குறைவால் ஏற்பட்ட தவறு என்று நடுநிலையாக விமர்சனம் செய்வோம்.)

இது குறித்துக் கூறும் போது,   ‘மூஸா நபியையும் ஹாரூன் நபியையும் இறைவன் என்று சித்தரிக்கும் வகையில் மொழி பெயர்த்துள்ளனரே, பிஹி என்பதற்கு வரிந்து கட்டி வாதாடிய சலபியின் கண்ணுக்கு படியளப்பவரின் அத்வைதம் மட்டும் மறைந்து விட்டதா?’ என்று குறிப்பிடுகின்றார்.

நாம் ஏற்கனவே உண்மை உதயத்தில் (2001 ஒக்டோபர் – பக்கம் 15 – இதழ் எண் 62) இது குறித்து வாசகர்களுக்கு அறியச் செய்துள்ளோம்.

(முழுப்பக்கத்தையும் பார்க்க, படத்தின் மீது கிளிக் செய்யவும்)

தர்ஜமாவில் தவறு

இவையெல்லாம் பீஜே அவர்களுக்கோ, அவர்களது ஒற்றர் படையின் கண்களுக்கோ புலப்படாது என்பது எமக்குத் தெரியும். இதன் மூலம் பீஜே இன் வாதம் அடியற்ற மரம் போல் சரிந்து விட்டது. இனி நாம் கேட்கும் நியாயமான கேள்விக்கு அவர் பதில் தரட்டும்.

அடுத்து, சகோதரர் பீஜே போன்று இக்பால் மதனியோ அல்லது அபூபக்கர் ஸித்தீக் மதனியோ அந்த மொழி பெயர்ப்பில் தவறு இல்லை என்று வாதிக்கவோ, தவறு இருப்பதாகக் கூறுபவர்களை விவாதத்திற்கு அழைக்கவோ இல்லை என்பதைக் கவனத்திற்கொள்ளட்டும். அச்சுத் தவறை வைத்து அத்வைதப் பட்டம் கொடுக்கும் அறிஞர் பீஜே அவர்களிடம் நியாயமான ஒரு கேள்வியைக் கேட்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

‘ஃபீ ழிலாலில் குர்ஆன்’ என்ற ஸையித் குதுபின் தப்ஸீரில் ‘குல் குவல்லாஹு அஹத்’ சூறாவுக்கு அத்வைத விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பீஜே அவர்களின் சகோதரர், PS அலாவுதீன் அவர்கள் இந்த ‘பீ ழிலாலுல் குர்ஆன்’ தப்ஸீரின் ‘அம்ம ஜுஸ்ஊ’க்கான விளக்கத்தை, ‘திருக்குர்ஆனின் நிழலில்’ என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார்.

இதனை ‘நன்னெறி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. இதன் ‘மொழி பெயர்ப்பாளரைப் பற்றி…’ என்ற தலைப்பில் பீஜே அவர்கள் பற்றியும், அவர்களின் சகோதரர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலில் தெளிவாகவே அத்வைதக் கருத்து கூறப்பட்டுள்ளது.

psa

(பக்கம் 720)

‘இரட்சகனின் தூதர்கள்’ என்பது, ‘இரட்சகனாகிய தூதர்கள்’ எனத் தவறாக அச்சாகியதற்கே, அத்வைதப் பட்டம் கொடுக்கும் அறிஞர் அவர்களே!

‘அத்வைதக் கருத்து அடங்கிய’ ஃபீ ழிலாலில் குர்ஆனை மொழி பெயர்த்த உங்கள் சகோதரருக்கும் அந்தப் பட்டத்தை வழங்குவீர்களா? அந்த நூலில் உங்கள் பெயர், பிரச்சாரப் போராட்டம் எல்லாம் ஆரம்பத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த வகையில் கண்டிக்க வேண்டிய கடமை உங்களுக்குள்ளது.

அல்லது அந்த நூல் மீண்டும் மீண்டும் அச்சாகுவதையாவது தடுத்தீர்களா? ‘மூன் பப்ளிகேஷன்’, ‘நபீலா பதிப்பகம்’ என புத்தக வியாபாரம் புரியும் உங்களுக்கு இதன் பதிப்பக உரிமையை வாங்கி, உடன் பிறந்த அண்ணன் மூலம் அத்வைதக் கருத்துப் பரவுவதைக் கொஞ்சமாவது கொள்கைப் பற்று இருந்திருந்தால் தடுத்திருக்கலாமல்லவா?

(குறிப்பு: P.ளு. அலாவுதீன் அவர்கள் காலம் சென்ற அறிஞராவார். தமிழகத்தின் ஷிர்க்கிற்கு எதிரான போராட்டத்திற்கு அடித்தளமிட்டவர்களில் அவரும் ஒருவர். நான் அவரைக் கண்ணால் காணா விட்டாலும் அவரை மதிக்கின்றேன். அல்லாஹ் அவருக்கு அருள் செய்து, அவரது நன்மைகளை அங்கீகரித்து, தவறுகளை மன்னிக்க வேண்டும் என இறைஞ்சுகின்றேன். பீஜே அவர்களின் தவறான வாதத்தையும், விமர்சனத்தையும் விளக்குவதற்காகவே இப்படிக் கேட்கின்றேன்.)

அச்சுத் தவறை வைத்து ஹாரூன் நபியையும், மூஸா நபியையும் அல்லாஹ்வாக சித்தரித்ததாக அவதூறு கூறிய பீஜே அவர்களே நீங்கள் அர்த்தம் தவறாகச் செய்து நபி() அவர்களைக் காஃபிராகச் சித்தரித்த அவலத்தைப் பாருங்கள்.

‘அலம் யஃதிகும்’ – ‘உங்களிடம் வரவில்லையா?’ எனக் காஃபிர்களைப் பார்த்துப் பன்மைப் பதம் பயன்படுத்தி அல்லாஹ் 64:5 ஆம் வசனத்தில் பேசுகின்றான். (காஃபிர்களே!) எனப் போடுவதற்குப் பதிலாக பீஜே (முஹம்மதே!) என்று போட்டுள்ளார்.

‘முன் சென்ற (ஏக இறைவனை!) மறுப்போரின் செய்தி (முஹம்மதே!) உம்மிடம் வரவில்லையா?…’ பீஜே தர்ஜமா. (64:5)

நீங்கள் செய்த அர்த்தம் தவறு என்றாலும் முஹம்மது நபியைக் காஃபிராக்கி விட்டீர்கள் என்று நாம் உங்கள் மீது அவதூறு கூற மாட்டோம். அர்த்தம் தவறு. அது தவறுதலாக ஏற்பட்ட பிழை என்று நியாயமாகவே விமர்சிப்போம். இந்த நாகரிகத்தையும், நடுநிலையான விமர்சன அனுகுமுறையையும் உங்களிடம் நாம் எதிர்பார்த்தது ஏமாற்றத்தில் முடிந்து விட்டது.

இது வரை நாம் குறிப்பிட்டதிலிருந்து பீஜே அவர்கள் பொய்யும், அவதூறும் கலந்து தனது விமர்சனத்தை அமைத்திருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

‘ஞானம் பதிப்பகம்’ வெளியிட்ட ஒரு நூலை அன்சாரிஸ் சுன்னா வெளியிட்டதாகக் கூறுகின்றார். எனக்குச் சம்பந்தம் இல்லாத ஒரு நூலை எனது மேற்பார்வையில் வெளியிடப்பட்டது என்கின்றார். அறபு நாட்டுச் சல்லியில் வெளியிடப்பட்டது என்று கொஞ்சம் கூட இறையச்சம் இல்லாது பொய்யைக் கூறுகின்றார். முபாறக் (ஸலபி)யின் மொழி பெயர்ப்பை வைத்துக் காஃபிர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக நான் இருட்டடிப்புச் செய்ததாகக் கூறுகிறார். இவரின் பொய்களை நம்பிப் பாமர மக்கள் ஏமாறுகின்றனர். அனைவரும் அறியக் கூடிய எழுத்து மூலம் இருக்கக் கூடிய ஒரு புத்தக விடயத்திலேயே இப்படிப் பொய் கூறுபவர் தனிப்பட்ட விவகாரங்களில், எவரும் அறியாத முடியாத விடயங்களில் எப்படி நடந்துகொள்வார் என்பதைப் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்!    இனி வரும் தொடர்களில் அவரது அவதூறுகள் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட மாட்டாது. நாளை மறுமையில் அதன் பெறுபேற்றை அல்லாஹ்வின் நீதி மன்றத்தில் வைத்துப் பெற்றுக்கொள்வோம். அவரது மார்க்க ரீதியான கருத்துக்களுக்கு மட்டும் இத்தொடரில் பதிலளிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்!

(இவரது மறுப்புக்குரிய பதில்களை இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடரில் முழுமையாகத் தருவோம். எனினும் அவரைப் போல் உள்ள பணிகளை எல்லாம் ஒதுக்கி விட்டு அறைக்குள் இருந்து கொண்டு எம்மால் பணியாற்ற முடியாது. சமூகப் பணிகள், பயான் நிகழ்ச்சிகள், ‘உண்மை உதயம்’ என்பவற்றுடன் சேர்த்து இந்தப் பணியையும் செய்வோம். இன்ஷா அல்லாஹ்! வாரா-வாரம் பதில் தர முயற்சிப்போம் என்பதை இணையத் தள நண்பர்களுக்கு அறியத் தருகின்றோம்.

பீஜே அவர்கள் இந்த மறுப்பையும் அவரது இணையத் தளத்தில் போட்டுப் பதில் தருவார் என எதிர்பார்க்கின்றேன்.

21 comments

  1. அண்ணன் pj இனியாவது அடக்கி வாசிங்க சார்!
    ஒற்றர் படைக்கும் ஆப்பு

  2. HMM Irshad (Faizi)

    அண்ணன் பிஜே இப்போ அடக்கித்தான் வாசிக்கிறார்.
    அதை அவர் அவரது வெப்தளத்திலே வெளியிட்டும் இருக்கிறார்.

    அதாவது அடிக்கடி பொய் சொல்வதால சில விவரமான தம்பிமார் கேள்வி கேட்டு விடுகிறார்கள் அதனால அண்ணன் ரூம மூடிக் கொண்டு உள்ளே இருந்துதான் பயான்கூட பண்றதாக எழுதி இருக்கிறார்.

    பாவம்! பிஜே

    அவர் திருந்த நினைத்தாலும் இந்த ஒற்றர் படை அவர திருந்த விட மாட்டாங்க போல தெரியுது.

    அண்ணன் மேல கொஞ்சம் இரக்கப்டுங்க சார்.

  3. தமிழக தௌஹீத் வரலாற்றில் மௌலவி பிஜே அவர்களுக்கு கனிசமான பங்களிப்பு இருப்பது போலவே மௌலவி இஸ்மாயீல் ஸலபிக்கும் இலங்கையின் பிந்திய தவ்ஹீத் வரலாற்றில் நிறையவே பங்களிப்பு இருக்கின்றது. தவ்ஹீதை இலங்கையில் பரவச் செய்வதையே முழு நோக்காகக் கொண்டு 1948ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னத்தில் முகம்மதிய்யா இன்று வரை தனது பிரச்சாரப் பணியினை தொய்வின்றித் தொடர்ந்து செய்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

    இவ்வமைப்பின் ஆரம்பகர்த்தாக்கள் ஆற்றிய பணிகள், செய்த தியாகங்கள் வார்த்தைகளால் எழுதி முடிக்க இயலாதவை. தஃவாப் பணித் தொடரில் 1980களில் இவ்வமைப்பு தவ்ஹீத் என்ற பெயரிலேயே ஒரு மத்ரஸாவை ஆரம்பித்து பல பெறுமதியான தாஈகளை இன்று களத்தில் வளர்த்து விட்டிருக்கின்றது. அவர்களில் ஒருவராகவே இஸ்மாயீல் ஸலபியும் இருக்கின்றார். 1990களில் அந்நஜாத் என்ற மௌலவி பிஜே அவர்களை ஆசிரியராகக் கொண்ட மாதாந்த சஞடசிகையை இலங்கையில் அறிமுகஞ் செய்து விற்பனையும் செய்தது

    ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா பின்னர் 1992ன் இறுதிப்பகுதியில் இலங்கைக்கு மௌலவி பிஜே அவர்களை ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா தனது வருடாந்த இஜ்திமாவுக்கு பேச்சாளராக அழைத்து பிஜே அவர்களை இலங்கையின் தஃவாக் களத்தில் அறிமுகஞ் செய்தது. அன்றிலிருந்து இன்று வரை மௌலவி பிஜே அவர்களது பேச்சுக்களை, எழுத்துக்களை கேட்டு வாசித்து வருகின்றேன். பிஜே அவர்களை மார்க்கத்துக்காக நேசித்தும் வருகின்றேன். இது போலவே இலங்கை உலமாக்களின் தவ்ஹீதுக்கான பணி, குறிப்பாக ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் தஃவாப் பணிகளினையும் தொடர்ந்து பங்குபற்றி உலமாக்களின் பேச்சுக்களையும் கேட்டு வருகின்றேன். அதிலும் இஸ்மாயில் ஸலபி அவர்களின் பேச்சுக்களும் கருத்துக்களும் மார்க்கத்துக்காக அவர் ஆற்றிவருகின்ற பணிகளும் என்னைக் கவர்ந்தவை என்றே சொல்ல வேண்டும்.

    இந்த வகையில் அண்மைக்காலமாக மௌலவி பிஜே அவர்களின் சில கருத்துக்களை அல்லது ஆய்வுகளை தவறானது என மௌலவி இஸ்மாயீல் ஸலபி அவர்கள் உண்மை உதயம் மற்றும் இஸ்லாம் கல்வி.காம் போன்றவற்றில் ஆதாரபூர்வமாகவும் மரியாதையாகவும், மௌலவி பிஜே அவர்களை மதித்தவராகவும் தனது ஆய்வினை முன்வைத்திருந்தார். ஆனால் இஸ்மாயில் ஸலபிக்கு மௌலவி பிஜே அவர்கள் எழுதிய மறுப்பை வாசித்தபோது நான் உண்மையில் அதிர்ந்து போய்விட்டேன். பண்பட்ட நல்லொழுக்கமுள்ள ஒரு தாயியின் எழுத்தில் எழக்கூடாத வாசகங்கள் மறுப்பு நெடுகிலும் காணப்பட்டது (அவரை பிஜே அவர்களை நான் நேசிப்பவன் என்ற வகையில்) என்னைக் கூடுதலாகச் சிந்திக்கவும் கதிகலங்கவும் வைத்து விட்டது. தூய்மையான இக்லாசான ஒரு அமைப்பு அம்மறுப்பில் காணப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

    இந்த நிலையில் மறுப்புக்கு மறுப்பொன்று இஸ்மாயீல் ஸலபியால் இஸலாம்கல்வி.காம்ல் வெளியிடப்பட்டதைப் பார்த்தேன். காரசாரமான வார்த்தைகளால் பண்பாடற்ற ஒரு மறுப்பாக மௌலவி பிஜே அவர்கள் எழுதியிருந்தும் கண்ணியமானதும் பணிவானதுமான வார்த்தைகளாலேயே இஸ்மாயீல் ஸலபி அவர்கள் மறுப்பெழுதியிருந்தார்கள். இதனை நான் உண்மையிலே பாராட்ட வேண்டும். இஸ்மாயீல் ஸலபி அவர்களே! உங்களின் இந்த அழகிய போக்கு தஃவாக் களத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் யார் உங்களை எவ்வாறான வார்த்தையால் குத்தினாலும் சரியே என்று உங்களை நான் இதனூடாகக் கேட்க விரும்புகின்றேன்.

    பிஜே அவர்களே! உங்களைப் பற்றி பொதுமக்களாகிய நாம் கொண்டுள்ள நல்லெண்ணங்களை தயவு செய்து தவிடுபொடியாக்கி விடாதீர்கள். உங்களிடம் மார்க்கம் கற்ற நாங்கள் உங்களுக்கு ஒழுக்கம் போதிக்கும் நிலையை ஏற்படுத்தாதீர்கள். குராபிகள் வெப்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அது உங்களுக்குப் பாதிக்கிறதோ இல்லையோ இலங்கையில் நடுநிலையாக நிற்கும் பொதுமக்களாகிய எம்மைப் பாதிக்கின்றது. அதற்காகவாவது தனிநபர் விமர்சனங்களையும், பொய்யான அல்லது தவறான தகவல்களை வழங்கி திசைதிருப்புவதையும் விட்டுவிடுங்கள்.

    மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்ற கட்டுரையில் அவர் சொன்ன மறுப்பிலுள்ள கருத்தை மட்டும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்துங்கள். சில நாட்களாக பிஜே மௌலவி அவர்களது வெப் முழுக்க முழுக்க மற்ற முஸ்லிம் சகோதரனின் மரணித்த மாமிசத்தை உண்பதாகவே முகப்பு முழுக்க இருக்கிறது. தயவுசெய்து இவற்றைத் தவிர்த்து விட்டு மார்க்க விடயங்களை எங்களுக்குச் சொல்லித் தாருங்கள்.

    இக்பால் அலி என்ற ஒருவரின் கவிதை நூலைப் போய் ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினதும் இஸ்மாயீல் ஸலபியினதும் வெளியீடாக மக்களுக்கு காட்டினீர்கள். நாங்களும் நம்பினோம். ஆனால் அதாரத்துடன் ஸலபி மறுப்பெழுதியதைப் பார்த்தபோது எழுத்திலுள்ளதையே சுயநலத்துக்காக மாற்றியமைக்கும்நிலை உங்களிடம் வந்துவிட்டதை உணரமுடிகின்றது. ஏதோ அல்லாஹ்வை அஞ்சி பொதுமக்களை வழிகெடுக்காது நடந்து கொள்ள இருவரும் முயலுங்கள். வேதனையுடன் இவற்றை எழுதுகின்றேன். அல்லாஹ் போதுமானவன்.

    AK Rahman

  4. பீ. ஜைனுல்ஆபிதீன் தனது இணையத்தில் மார்க்க அறிஞர்களை இழிவாக விமர்சிப்பதையே தனது தஃவாப்? பணியாக்கியுள்ளார். மார்க்க விஷயத்தில் அவருடைய முகத்திரையைக் கிழித்ததுதான் அந்த மார்க்க அறிஞர்கள் செய்த குற்றம்.

    மேற்படியாரின் இணையதள எழுத்துக்களைப் பார்க்கும் போது மனநோய் அதன் உச்சகட்டத்தை அடைந்து விட்டதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.அல்லாஹ் கூறுகிறான்:எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள். தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்களை அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே. (அல்குர்ஆன் 26:221-223)

    சாக்கடைப் பன்றி அதன் உணவை ரசித்து உண்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. எனவே அவருடைய பொய்களும் புளுகு மூட்டைகளும் அவதூறுகளும் பிளாட்பாரப் போக்கிரி வார்த்தைகளும் அவரால் விமர்சிக்கப்படும் மார்க்க அறிஞர்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவேண்டாம்.
    (பீ. ஜைனுல் ஆபிதீன் தனது கட்டுரையில் பயன்படுத்தியுள்ள ‘சாக்கடை பன்றி’ என்ற வார்த்தையைத்தான் அவருக்காக பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கண்ணியத்தை விரும்பும் சகோதரர்கள் எவரும் தயவு செய்து என்மீது கோபப்பட வேண்டாம்)
    மார்க்க அறிஞர்களே! உங்களை அவர் விமர்சிக்கின்றார் என்றால் உங்கள் செய்தி மக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கிறது, உங்களால் அவரது வேடம் களைகிறது, கூடாரம் காலியாகிறது என்று பொருள்!

    25 வருடங்களாக மார்க்கப் போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரை ‘மார்க்கத்தின் எதிரி’ என்ற அவரின் சுய உருவத்தை அடைய காட்டுவது கடினம்தான்! ஆனால் அது முடியாததோ, சாத்தியமற்றதோ அல்ல!

    சத்திய அழைப்பாளர்களே! அவரை அடையாளம் காட்டும்பணி தொடரட்டும்! இந்தப் பொய்யர் பீ.ஜைனுல் ஆபிதீனின் கீழ்தரமான விமர்சனங்களுக்கோ, மிரட்டல்களுக்கோ அஞ்சாதீர்கள்! கண்ணியமும் கேவலமும் வாழ்வும் சாவும் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அதை பீ.ஜைனுல் ஆபிதீன் தன் கையில் இருப்பதாக வாதிட்டால் அவரிடம் ஃபிர்அவுனியத் (தன்னை கடவுள் என்று வாதிடும் கொள்கை) இருப்பதாகப் பொருள்!

    எனவே அல்லாஹ்வுக்காக, அவனுடைய மார்க்கத்தை பாதுகாப்பதற்காக உங்கள் பணிகள் தொடரட்டும்! மனத் தூய்மையுடன் செய்யும் பணி மிகச் சிறியதாக இருந்தாலும் அல்லாஹ் அதில் பரக்கத்துச் செய்வான்!

  5. Ibnu jiffri, SRI LANKA

    ஸலபி அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக. அண்ணன் அவர்கள் உங்களை எந்தளவு அவரால் கிண்டல் பண்ண முடியுமோ அந்தளவு கிண்டல் பண்ண முயற்சித்துள்ளார். இதைக் கண்ட நீங்களும் அவரது ரூட்டில் போய் கிண்டலுக்கு மேல் கிண்டல் பண்ணுவீங்களோ என்று பயந்தேன். பரவாயில்லை. அவரை விட மிகக் குறைவு தான்.

    நீங்கள் கடைசியில்(அவரைக் குறைவாகவேனும் கிண்டல் பண்ண மாட்டேன் என்ற அடிப்படையில்) மறுமையை சாட்டி விட்டு கிண்டல் பண்ணுவதை விட்டும் ஒதுங்கியுள்ளீர்கள். இதற்காக உங்களை அதிகம் பாராட்டுகிறேன்.

    ஆனால் அறிஞர் பி.ஜே. அவர்கள் கிண்டல் பண்ணுவதை விட மாட்டார். அவரது கொள்கைக்கு எதிராக செயற்படுவதாக யாரையெல்லாம் இணங் காணுகிறாரோ அவரை வெட்கித் தலை குனிய வைப்பதாக ‘பிறரை விமர்சிப்பது தேவை தானா?’ என்ற தலைப்பில் ஓரிடத்தில் கூறுகிறார்.

    அதாவது ‘வெறும் அவதூறை மட்டுமே ஒரே தொழிலாக செய்பவர்களை வெட்கித் தலை குணிய வைத்தால் தான் சமுதாயம் சரியான திசையில் செல்லும்’ என்று கூறியுள்ளார்.

    இதனால் தான் போலும் உங்களைப் பற்றி அவருக்கு கிடைத்த செய்திகளைக் தீர விசாரிக்காமல் உங்களை வெட்கித் தலை குணிய வைக்க வேண்டும் என்ற நோக்கில் தாருமாறாக உங்களை விமர்சித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முஜீபுர் ரஹ்மான் உமரியை நேருக்கு நேர் சந்தித்து விவாதத்துக்கான தேதியை கேட்டுக் கொண்டே இருந்த வீட்யோ காட்சியை இணைய தளத்தில் வெளியிட்டு அவரையும் இவரது கொள்கையை மறுக்கிறார் என்பதற்காக தலை குனிய வைக்க முயற்சி செய்துள்ளார்’

    சுருக்கமாக விளங்குவது அவரது கொள்கையை மறுக்கின்ற எவராக இருந்தாலும் ‘அவரை வெட்கித் தலை குணிய வைக்க வேண்டும்’ என்பதை கொள்கையாக வைத்துள்ளார். இதற்கு இன்னும் உதாரணங்கள் சொல்வதாயின் ஹாமித் பக்ரி, கோவை, பாக்கர், முஜாஹித்,,,,,,

    மதிப்புக்குரிய அறிஞர்களாகிய உங்கள் இருவரையும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன். இது அல்லாஹ்வுடைய மார்க்கம். இது தூய்மையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மட்டும் சிந்தித்து கருத்துப்பரிமாற்றம் செய்யுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் மார்க்கத்தை வைத்து வெட்கித் தலை குணிய வைக்கின்ற, கிண்டல் பண்ணுகின்ற உரிமையை அல்லாஹ் உங்களுக்குத் தரவில்லை. அதை தவிர்த்து ‘தெளிவாக எத்தி வைப்பது மட்டுமே உங்கள் பொறுப்பாகும்’ என்பதை உணர்ந்து மார்க்க விடயங்களை அணுக முன் வாருங்கள்.

    நான் சொன்னதில் ஏதாவது தவறுகள் இருப்பின் இரு அறிஞர்களும் என்னை மன்னியுங்கள்.

  6. மௌலவி பிஜே அவர்களது இரண்டாவது மறுப்பும், மறுப்பின் மறுப்பும் பீஒன்லைனில் வெளியாகியிருந்ததைப் பார்த்தேன். நாள் முழுக்க ஆதரவு வைத்ததைப் போலல்லாது மற்றவனுக்கு வலை விரிக்கப்போய் அதில் தான் மாட்டிய சீலம்போல் ஆங்காங்கே மழுப்ப முயன்று மாட்டிக்கொண்டு போவதைக் காணக்கூடியதாக இருந்தது. எவனோ எழுதியதை மற்றவன் பேரில் பிஜே சுமத்துவார். அவர் மீது அவரோடு சம்பந்தமுள்ளதை வேறு யாரும் சுமத்தினால் மற்றவன் குறை பற்றி என்னை அல்லாஹ் கேட்கமாட்டான் என சாமத்தியமாக நழுவுகிறார். இந்த விதியை மற்றவர் விடயத்தில் மறுப்பது ஏனோ? பீஜே ஒன்லைனில் எழுதுவோம் என்று சிலதை எழுதிப்பார்த்தேன். ஒன்றுமே போடுகின்றார்களில்லை. அண்ணனுக்கு ஆதரவாக எழுதினால் உடன் வருகின்றது. எழுதி எழுதி அழுத்துப்போய் நாம் எழுதி அனுப்புவதில்தான் ஏதும் பிழை ஏற்படுகிறதோ? போய்ச்சேராமல் விடுகிறதோ என்று எண்ணி செக் பண்ணிப் பார்ப்போம் என பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரியை மாற்றி ஆதரவாக எழுதிப் பார்த்தேன். உடனே போட்டார். எதிராக விளக்கம் கேட்டால் தளத்தில் போடுகின்றாரே இல்லை. அதனால்தான் இதிலே எழுத வேண்டியிருக்கு. பிஜே பக்தனாகிய நான் மாறிவிட்டேன். மாறாத பக்தர்கள் கொஞ்சம் இதுபற்றி அண்ணனுக்குச் சொல்ல வேண்டும். இதையும் அண்ணன் பார்க்காமலா விடுவார். பார்க்கத்தான் செய்வார்.

    ஸபாப் நிறுவனத்திலே பள்ளிகட்ட வாங்கிப்போன ஐந்து இலட்சத்துக்கு இன்னும் அட்ரஸ் இல்லை. கேட்டால் அழகாக இதற்கும் ஒரு ட்ராமா ஆடுவார். வெளிநாட்டுல (இலங்கையும் வெளிநாடுதான் இந்தியாவுக்கு) அவர் பணம் சேர்ப்பார். கேட்டால் அவர்கள் எமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பார். மற்றவர்கள் கொள்கையோடு உடன்பட்டவர்களை அணுகி நிதி திரட்டி நற்பணி செய்தால் அது வெளிநாட்டுப் பணம் என்பார். என்ன கோலம் இது.

    அவரது சகோதரரின் புத்தகத்தவறுக்கு அவர் சொன்ன நியாயம் மற்றவர்கள் விடயத்தில் மாறிப்போய்விட்ட அநியாயம் கேவலமாக உள்ளது. அந்நஜாத்தை விட்டு வெளியேற்றப்பட்டபோது நடந்தவை அபூஅப்தில்லா போட்டுக் கிளித்தாரே மறந்திருக்க முடியாது. மறுப்பு என்ற பெயரில் சம்பந்தமில்லாது உளறியுள்ளதை அறிவுள்ளோர் விளங்குவார்கள். அவ்வாறானோர் தொடர்ந்து நாளுக்கு நாள் அண்ணனைப் பற்றிய நல்லெண்ணத்தைக் களைந்து கொண்டே போகிறார்கள். நானே அதற்கோர் எடுத்துக்காட்டு எனலாம்.

    தூய்மை கெடக் கெட இழிவுதான் வந்து சேரும் என்பதை மறந்து விடாதீர்கள்.இறைவனைப் பயந்து கொள்ளுங்கள் அண்ணன் அவர்களே! இஸ்மாயில் ஸலபி அவர்களே! நிதானமாக வழமைபோன்று அழகிய வார்த்தைகளால் மறுப்பு எழுதும் நிலையிலிருந்து நீங்கள் சருகிவிடக்கூடாது என நான் உங்களைக் கேட்க விரும்புகின்றேன். அழகிய முறையில் பதில் எழுதுங்கள். அண்ணன் பிஜே அவர்கள் விளங்காததுபோல் நடித்து தன்னை நியாயப்படுத்திப் பதில் எழுதினாலும் உண்மையைப் பொதுமக்களாகிய நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

    இலங்கையிலிருந்து
    AK Rahman

  7. அப்துல்லாஹ்

    மறுப்பு என்ற பெயரில் இதுவரை வெளிவந்த அவரது இரண்டு தொடர்களிலும், பீடிகை மேல் பீடிகைப் போட்டு தனக்கு எதிராகக் கருத்து சொல்பவரைப் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கியப்பின்னர், விளக்கம் என்ற பெயரில் எதைச் சொன்னாலும் அது அப்படியே சுயமாக சிந்திக்கத் தெரியாத அவரது ரசிகர்களுக்கு பதிந்துவிடும் என்ற மனோதத்துவ ரீதியான (தனது வழக்கமான) ஃபார்முலாவை ஜைனுல்ஆபிதீன் தனது மறுப்பில் பின்பற்றியிருக்கிறார்.

    கடுமையாகச் சாடுவதும், மிகக் கீழ்த்தரமான எழுதுவதும், பேசுவதும், தெருச் சண்டையில் இறங்குவதும் ஜைனுல்ஆபிதீனுக்கு கைவந்த கலை. இதைத்தான் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது முதல் பக்கத்தில் முழுக்க முழுக்க பரப்பியிருக்கிறார். பின்வரும் தலைமுறையினருக்கு, இணையச் சான்றுகள் இவையெல்லாம்.

    இவரே இப்படியென்றால், இவரது சீடர்களும், ரசிகர்களும் எப்படியிருப்பார்கள் என்று அறிவுடையோருக்குச் சொல்லித் தெரியவில்லை.

    புரிந்துக்கொண்டவர்கள் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்கள். ரசிகர்களும் சீடர்களும் பின்தொடர்கிறார்கள்.

  8. அஸ்ஸலாமு அலைக்கும்

    மிக அருமையான மறுப்பு. இஸ்மாயில் சலஃபி அவர்களுக்கு அல்லாஹ் மிகப் பெறிய கூலிகள் தரட்டும். ஆரம்பத்தில்,
    1. யாரோ ஒருவர் மார்க்சிசம் எழுதியதனால், இஸ்மாயில் சலஃபி அவர்கள் முர்தத் ஆகி விட்டதாக எழுதினார் பீ.ஜே.
    2. முபாரக் சலஃபி எழுதிய மொழிப்பெயர்புக்கு, இஸ்மாயில் சலஃபியை குற்றவாளி ஆக்கினார்.
    3. இக்பால் மதனியின், குர் ஆன் மொழிப்பெயர்பில் ஆன எழுதுப்பிழைக்காக, அன்சாருசுன்னா அமைப்பில் அத்வைதம் உள்ளதாக கூற்றம் சாட்டினார்.

    இப்படி வேறு நபர்களை குற்றம் சாட்டி, இஸ்மாயில் சலஃபி அவர்கள் மீது பொறுப்பை சாட்டும் இவர், தன் சொந்த சகோதரர் செய்தது, கண்ணுக்கு தெரியவில்லையா என்று இஸ்மாயில் சலஃபி சொன்னவுடன், “மற்றவரின் குற்றதிற்க்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” என்று சொல்கிறார். இதெற்கெல்லாம் காரணம், இவரை பற்றி யார் பேசினாலும், அவரின் முகத்திரையை கிழித்து, தலை குனிய செய்யவேண்டும் என்பதே இவர் லட்சியம். இதை எழுதியும் உள்ளார்.

    சொந்த அண்ணன் செய்த தவருக்கு தான் பொறுப்பில்லை என்று சொல்பவர், ஏன் இந்த நியாய உணர்வை இஸ்மாயில் சலஃபிக்கு காட்ட வில்லை????

    நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.

    அல் குர்’ஆன் (4: 135)

    முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள் ; இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் ; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
    அல் குர்’ஆன் (5: 8)

    தவலை தன் வாயால் கெட்டது என்பது போல, பீ.ஜே தன் எழுத்தாலேயே, தன்னை அடயாலம் காட்டிகொண்டு இருக்கிறார்.

    இவருக்கு நியாய உணர்வு இருந்தால், மற்றவர் குறைகள் சொல்லாமல், “சிஹ்ர்” சம்மந்தனாகவும், ஹதீஸ்கள் மருக்கவேண்டும் என்ற இவரின் தத்துவங்களை எழுதட்டும். எட்டு தொடர்கள்களில், இஸ்மாயில் சலஃபி, பீ.ஜே வை தவிற மற்ற யாரையாவது வம்புக்கு இழுத்தாரா?? பீ.ஜே வை கூட மிக கன்னியப்படுத்தி ஆரம்பம் செய்தார்.ஆனால் , தனக்கு ஆதரவாக தன் அமைப்பு வர வேண்டும் என்று அவசியம் பீ.ஜே யிக்கு தோன்றியதால், இஸ்மாயில் சலஃபி யின் அமைப்பை குற்றம் சொல்கிறார். இதனால், இஸ்மாயில் சலஃபி, த.ந.த.ஜ வை குறை சொல்வார்.இதனால், இந்த வாக்குவாதங்களை “அமைப்புகளின் சண்டை” போல் ஆக்குவதற்காக பீ.ஜே நினைப்பதாக தோன்றுகிரது.

    ஒறே நாளில், இஸ்மாயில் சலஃபியின் மறுப்புக்கு மறுப்பு எழுதியவர், பல மாதங்கள் ஆயும், எட்டு தொடருக்கு மறுப்பு எழுத திரானி இல்லை. அமைப்புகளை குறை சொல்வதுதான் ,இவருக்கு
    மார்கமா?? தன் மேல் செற்று உள்ளது என்பதால், அதை தொடைப்பதர்கு முன்னால், மற்றவர் மீது
    சானி பூச வேண்டும் என்று துடிக்கிறாரே??? பீ.ஜே வை சார்ந்துள்ளவர்களில், இறையச்சம் உள்ளவர்கள், அவரை விட்டு வருகிறார்கள். இதை கண்டு, பீ.ஜே யால் தாங்கிகொல்ல முடியாமல் தவிக்கிறார்.

    Pls read : http://salafkalvi.blogspot.com

    Masoud.

  9. PJ யின் தப்பும் தவறுகளும் உளரல்களும் தெளிவாக தோளுரித்து காட்டப்பட்டுள்ளது. தனது தவறை ஒப்புக்கொள்ள துணிவில்லாமல் அடுத்தவனுடைய குப்பைகளை கிளரி தனது குப்பை களை மூட நினைக்கிறார் PJ.

    “PJ சொன்னால் தேவன் சொன்ன மாதிரி” என்று ஓடித்திரியும் பக்த கோடிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. PJயின் இணையத்தள செய்தியை இலங்கையில் அச்சிட்டு வினியோகித்த பக்தர்களுக்கு இஞ்சி திண்ட குரங்கு மாதிரி அமைந்து விட்டது.

    பகுத்தறிவாளன் அண்ணன் PJ எதையும் பகுத்துணர்ந்து கேட்டு பார்த்து எழுத வேண்டும். எவனோ ஒருவன் கொண்டு வந்து கொடுத்ததை கண்மூடித்தனமாக பார்க்கக் கூடாது எழுதக் கூடாது என்பதை நச்சென்று புரியவைத்துள்ளார் இஸ்மாயில் ஸலபி- நன்றி

    சூனியம் சம்பந்தமாக பதில் எழுதுவதை விட்டு விட்டு சம்பந்தமில்லாத விடயங்களை எழுதி வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார் பகுத்தறிவாளர் அண்ணன். பாவம்!

    அபூ அம்னா

  10. ibnu jiffri SRI LANKA

    Dr! brother masoodh! u are exactly correct. Barakallah. but PJ must come to the point and explain the subject. he also our sheikh. Insha Allah.. He will change his wrong way as soon. we must pray for him.

  11. assalamu alikum i accept comments of mr masoud

  12. May Allah bless all of us to the ” Hidhayath”

  13. assalamualaikum.
    anbin ismail salafi awarhalukku.
    weenan pj kku maruppu eluthi time ai weenadippatharku allahvidam bathil solla wendum.
    jahilkalaik kandaal ‘salam’-santhi enru solli othinki vidumaru kuran koora neengal en thustanaik kandu thoora vilakathu allippottuk kolhoreerkal..//?
    aarambathtil aiu seithu dhawa seitha pj ippothu muttael mudi pidungum aiwil erankiyullar.
    please etharkaha time, sakthi enbawatrai veenadikka wendam.

  14. அஸ்ஸலாமுஅலைக்கும்.
    அன்பின் இஸ்மாயீல் ஸலபீ அவர்களுக்கு
    நீங்களும் PJ யும் சுய கௌரவப் போராட்டத்தில் இறங்க வேண்டாம.
    தற்போது PJ அனைவராலும் ஒதுக்கப்பட்டுவிட்டார். யாரோடும் ஒத்துப் போகும் தன்மையல்லாத, அனைவரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் PJ க்கு விளக்கமளிப்பது விழலுக்கிரைத்த நீராகவே அமையும். தயவு செய்து வீணர் PJக்கு மறப்பெழுதி வீணாக வேண்டாம் என அல்லாஹ்வுக்காகக் கேட்டுக்கொள்கிறேன். தெளிந்த சிந்தனையுள்ள நீங்கள் மனநோய்க்குட்பட்டவர்களைக் கண்டு கொள்ள வேண்டாம.

  15. சகோதர்களாகிய இஸ்மாயில் ஸலபி அவர்களுக்கும், பீ ஜெ அவர்களுக்கும் முதலில் எனது இஸ்லாத்தின் காணிக்கையான ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் இருவரும் கண்னியமான மார்க்க அறிஞர்கள் இஸ்லாமிய வரலாற்றில் கருத்து வேற்றுமை என்பது புதியது அல்ல என்பதை நீங்கள் நன்கு அரிவீர்கள். ஸகாபாக்கள் எத்தனையோ விஷயங்களில் கருத்து வேற்றுமை கொண்டார்கள் நபிகள் ஸல் அவர்களிடம் சென்று அதர்கான தீர்வை பெற்று நாகரிகமான முறையில் வழி காட்டினார்கள் அந்தவழி முறையைத்தான் பின்னர் வந்த கண்ணியமான இமாம்களும் முக்கியமான மார்க்க அறிஞர்கள் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள் அந்த வகையில் நீங்கள் இருவரும் நாளை மறுமையில் அல்லாஹ்வின சன்னிதானத்தில் உங்கள் இருவரின் சுயகவ்ரவம் அங்கு தலைதூக்காது என்பதனை நினைவில் வைத்து உங்கள் கருத்துக்களை விமர்சிக்கப்டும் அல்லது உங்களால் பிழையாக விளங்கியவைகளை குர்ஆன் கதீஸ் என்று இருந்தால் அதில்மாத்திரம் நின்று அழகாக விவாதியுங்கள் {குறிப்பாக சகோதரர் பீஜெ மன்னிக்க வேண்டும்} இதையெல்லாம் விட்டு விட்டு அவர் அரபு நாட்டு பணம் என்பதும் இவர் அந்த பணத்துக்குத்தான நான் இருந்த ரூமில் திட்டம் போட்டதன்பதும் உங்கள் இருவருக்கும் இது கேவலமாக தெரியவில்லையா உங்களது இந்த இணையத்தளங்களை முஸ்லிம்கள் மாத்திரம் பார்க்கவில்லை மாற்று மத சகோதரர்களும் பாக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் உங்கள் இருவருக்கும் அல்லாஹ் மகத்தான கல்வியை தந்து இருக்கிறான் அதைக் கொண்று நீங்கள் இஸ்லாத்தின் பெயரால் கிடந்த எத்தனையோ மூடநம்பிக்கைகளை தோல்லுரித்துக்காட்டி நம் மக்களுக்கு அன்னிய மக்களுக்கும் இஸ்லாம் என்றால் என்ன என்பதனை தெழிவு படுத்தி இருக்கிறீர்கள் அதற்காக அல்லாஹ் உங்கள் இருவருக்கும் நாளை மறுமையில் சுவனத்தை தர பிறார்த்திக்கிறேன் {ஆமின்}அல்லாஹ்குக்காக நீங்கள் உங்களது தனிப்பட் கசப்புனர்வுகளை மறந்து {உங்களில் ஒரு சாரார் மீதுல்ல வெருப்பு உங்களை நீதி செலுத்துவதில் இருந்து தடம்புரளச் செய்து விட வோண்டம்} என்ற அல்குர்ஆனின் வாத்தைக்கினங்கவும் {யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசுக்கிராறோ பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது வாய்மூடி இருக்கட்டும்} என்ற நபி மொழிக்கேற்பவும் நடந்து கொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் வேண்டி நான் எழுதியதில் தவறு இருப்பின் அல்லாஹ்வுக்காக மன்னித்து எனது மறுமை வெற்றிக்கு துஆ செய்யுங்கள் {நீங்கள் அனைவரும் திரும்ப கொண்டுச் செல்லப்படும் அந்த நாளை பயந்து கொள்ளுங்கள்} அல்குர்ஆன்

  16. றஸ்மி கியாஸ்

    சாக்கடையாகி வரும் தஃவாக் களம்!

    சில வாரங்களுக்கு முன்னால் நான் கொழும்புக்குச் சென்றிருந்த வேளை வெள்ளிக் கிழமை ஜும்ஆவை நிறைவேற்றுவதற்காக எசிடிஜே மஸ்ஜிதுக்குச் சென்றேன். ‘கருத்து முரண்பாடுள்ள இரு முஸ்லிம் தரப்பினரைச் சமாதானம் செய்வது சம்பந்தமான இஸ்லாமிய வழிகாட்டல்கள் என்ன?’ என்ற தலைப்பில் அஷ்ஷெயக் அர்ஹம் மவ்லவி அவர்களின் அழகிய குத்பாவினைச் செவிமடுத்து, மனம் நிரம்பியவனாகச் சந்தோஷத்துடன் வெளியேறிய நேரம் அங்கு ஒரு குழு துண்டுப் பிரசுரம் ஒன்றை விநியோகித்துக் கொண்டிருந்தது. அதில் ஒன்றை எடுத்து வாசித்த போது, ஏற்கனவே நாம் செவிமடுத்த அந்தக் குத்பா உரையை அவர்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதியாக அறிந்து கொண்டேன். ‘டீ.என்.டீ.ஜே – இலங்கைக் கிளை’ என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்த அந்தத் துண்டுப் பிரசுரத்தின் நாகரிகமற்ற, பண்பற்ற, கீழ்த் தரமான வசன நடைகளும், சொற்களும் அந்த அமைப்பினரின் கீழ்த் தரமான, பண்பற்ற, நாகரிகமற்ற பண்புகளை வெட்ட வெளிச்சமாகக் காட்டிக்கொண்டிருந்தது.

    சூனியம் சம்பந்தமாகத் தென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் பீ. ஜெய்னுலாப்தீன் வழங்கி வரும் விளக்கங்களுக்கு அந்த அறிஞரின் ஆளுமைக்கு எவ்வித இழுக்கும் ஏற்படாத வகையில் அஷ்ஷெய்க் இஸ்மாயீல் (ஸலபி) சமீப காலமாக மறுப்பு விளக்கம் அளித்து வருவது எல்லோரும் அறிந்த உண்மை. அஷ்ஷெய்க் இஸ்மாயீல் (ஸலபி) அவர்களின் விளக்கங்களுக்கு மறுப்பு எழுதும் உரிமை அவர்களுக்கும் உண்டு. ஆனால், மறுப்புரை என்ற பெயரில் இப்படிக் கீழ்த் தரமாக எழுதும் அவர்களுடைய பாணி உண்மையிலே சகிக்க முடியாத ஒன்று மாத்திரமின்றி அரசியலைப் போன்று தஃவாவையும் மக்கள் சாக்கடையாகக் கருத ஆரம்பித்து விடுவர். இப்படிப்பட்டவர்கள் விவாதங்களுக்கு அழைத்தால் அதைப் புறக்கணிப்பதுதான் சமூகத்துக்குச் செய்கின்ற மிகப் பெரிய புண்ணியமாக அமையும். ஏனெனில், இப்படிப்பட்டவர்களோடு விவாதம் புரிவதனால் சமூகத்துக்கு நன்மைகள் ஏற்படுவதற்குப் பதிலாகப் பாரிய பின் விளைவுகளே ஏற்படும்.

    எதிர்த் தரப்பினரின் பணிகளை அங்கீகரித்து, வரவேற்று அப்பணிகள் மக்களுக்குச் சென்றடைவதைத் தடுக்காது அவர்களுடைய தவறுகளைப் பண்பான முறையில் சுட்டிக் காட்டித் தன் பக்கத் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால், அவற்றை மனமுவர்ந்து ஒப்புக்கொள்கின்ற பண்பான மனிதர்களோடு விவாதம் செய்தால் அது நன்மைகளை சமூகத்தில் ஏற்படுத்தும். அதை விவாதம் என்று சொல்வதற்குப் பதிலாக ‘இத்திஹாத்’ (ஒருமைப்பாடு) என்றே கூறலாம். ஆனால் இவர்களிடமோ இதனை எதிர்பார்க்க முடியாது. எங்கள் தரப்பில் எவ்வளவுதான் சரியான விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இவர்களிடம் இல்லை. ஏனெனில், அவர்களும் ஒரு மத்ஹபை (பீஜே மத்ஹப்) கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களாயிற்றே!

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயீல் (ஸலபி) அவர்கள் வயதில் இளையவரானாலும், தஃவாவில் ஆழ்ந்த முதிர்ச்சியுடையவர். கொள்கையில் மிக உறுதியாகவும், விட்டுக் கொடுக்காமலும் இருப்பதோடு எல்லா இஸ்லாமிய தஃவா அமைப்புக்களோடும் நல்லுறவு பேணுபவர். எல்லா அறிஞர்களையும் மதித்து நடப்பவர். அதனால் எல்லா தஃவா அமைப்புக்களாலும் மதிக்கப்படுபவர். ‘கருத்து முரண்பாட்டில் உடன்பாடு காண்போம்!’ என்று எழுதுகின்றவர்களை விட, பேசுகின்றவர்களை விட அதைச் செயலில் காட்டியவர். ஏனைய இஸ்லாமிய சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளின் 50 ஆவது, 100 ஆவது இதழ்களுக்கு மறுக்காமல் வாழ்த்துச் செய்தி அனுப்புபவர். இது வெறும் முகஸ்துதி பாடுவதல்ல; உண்மைகள் மறைக்கப்படாமல் வெளிக் கொணரப்படல் வேண்டும்.

    எனவே, சகோதரர் அஷ்ஷெய்க் இஸ்மாயீல் (ஸலபி) அவர்களிடம் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், இவர்களோடு விவாதங்களுக்குப் போய் உங்களுடைய நிலையினை அவர்களுடைய நிலைக்கு இறக்கிக்கொள்ள வேண்டாம் என்பதே!

    -றஸ்மி கியாஸ், கிந்தோட்டை
    (சபரகமுவ பல்கலைக் கழகம்)

  17. அஸ்ஸலாமு அலைக்கும்
    முதலில் அல்லாஹ்வைப் புகழ்கிறேன்.
    இஸ்மாயீல் ஸலபி அவர்களுக்கு நன்றி,
    நபிமார்கள் வழியில் தாயிகளுக்கு இருக்க வேன்டிய பொருப்புணர்வும் நடுநிலமையும் என்ரும் உங்களிடத்திலும் பிற தாயிகளிடத்திலும் மேலும் வளர வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
    பீஜே அண்ணன் பற்பல கோற்பாட்டு ரீதியான தவருகள் செய்தும் எழுதியும்கூட : இல்லை அவர் திருந்துவார், ஏற்றுக் கொள்வார், ஏன் அவருக்கு ஆதாரங்களை வைத்து முடிவெடுக்கும் தகுதியுள்ளது என்றெல்லாம் பீஜே வாசகர்களாகிய நாம் நம்பி ஏமாந்ததுதான் மீதமாகியுள்ளது.
    சூனியத்தைப் பற்றி தௌ;வாக அல்-குர்ஆனிலும் ஸஹீஹான ஹதீஸிலும் வந்திருக்கும் போது பீஜே அதை தன் சொந்தக் கருத்தை மையமாக வைத்து குர்ஆன் வசனங்களை கருத்து மாற்றம் செய்யும் போதே அவர் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்க வேன்டும், அதன் பின்னராவது: அவர் அல்லாஹ் தான் நினைத்படி ஒவ்வொருநாளும் வானத்திற்கு இறங்குகிறான் என்ற ஸஹீஹான ஹதீஸை மருத்த போதாவது நாம் அவரைக் கன்டு கொன்டிருக்க வேன்டும், அல்லது ஸஹீஹான ஹதீஸ்கள் எம் ஆய்விற்கு தவராக தெறிந்தால் அதை மறுப்போம் ழஈபாக்குவோம் என தமபட்டமடித்த போதாவது நாம் அவர் வழிகேட்டை புறிந்தருக்க வேன்டும்.
    அலஹம்துலில்லாஹ் தறபோதாவது அவர் முகத்திரையை கிழிக்க, தனி நபர்களை பாதுகாக்காமல் மார்க்கத்தைப் பாதுகாப்பதே தாயிகளின் கடமை என்பதை நிருபித்துவரும் ஸலபி போன்ற நலலறிஞர்கள் மேலும் வளர வேன்டும். நன்றி

  18. وبالحقيقة دعاة أهل السنة والجماعة في سريلانكايسيرون في مسيرة سلف الصالح في النقد والرد ولكن لماذا علماء تاميل نادواودعاتهم يتعصبون على مذهب أو على جماعةمعينة هداهم الله وإيانا.

  19. Salam,

    I had a chance to read that book, which was written by PJ’s team bringing evidence of lying the Hadeeth from Bukhari and Muslim. Since I couldn’t read article opposing that or which making truth of those Hadeeth, I kept silence on those matters(ex: Musa(PBUH) and Angel, Adult feeding etc). Alhamdulillah, I appreciate Ismail Salafi, because now I can read the real position of those Hadeeth.

    May Allah guide us in straight path and May Allah forgive PJ and his followers who are isolating from the society and Islam and guide them toward true Religion of Islam.

  20. Abu Abdullah- Qatar

    Assalamu Alaikum dear brothers in Islam,

    may Allah Almighty bless us all and save us from all stray path, jazakallahu khairan for sheikh Ismail salafi please keep going in the right way you are going the all mighty Allah with you,
    and I have sent few emails to many sheikhs ( ahlul sunnah ) regarding pj waiting for their fatwa inshallah when I get them I will forward it to you as I am from Kandy I am much worried about our fellow muslims who are following pj in our area ( الله المستعان )

  21. ithu pj ku sama pathil adi inayavathu sontha kankalal aivu seiyavum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *