Featured Posts

[12] முடிவுரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-12
நிறைவாக நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது: உண்மையில் பித்அத்துகள் குப்ரின் பால் இட்டுச் செல்வதாகும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மார்க்கமாக்காதவைகளை அதிகப்படுத்துவதாகும். பித்அத் என்பது பெரும் பாவங்களை விட மிகக் கொடியதாகும். பெரும் பாவங்களை ஒருவன் செய்யும் போது ஷைத்தான் மகிழ்ச்சியுறுவதை விட, பித்அத்துகளை செய்யும் போது பன்மடங்கு மகிழ்ச்சி அடைகின்றான்.

பாவங்களில் ஈடுபடுபவன் நான் செய்வது பாவம் என்பதை அறிந்தே செய்கின்றான், அவன் அதிலிருந்து பாவ மீட்சி பெறுதவற்கு வாய்ப்பிருக்கின்றது. ஆனால் பித்அத்தை செய்யும் ஒருவன் அவைகளை மார்க்கமெனக் கருதி, அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறும் நோக்கில் செய்கின்றான், அவன் அதிலிருந்து பாவ மீட்சி பெறுவதற்கு வாய்ப்பில்லை. பித்அத் என்பது சுன்னாவுக்கெதிரானதாகும், சுன்னாவின் மீதும் சுன்னாவை நடைமுறை படுத்துபவர்கள் மீதும் அது வெறுப்பை ஏற்படுத்தும். பித்அத் என்பது ஒருவனை அல்லாஹ்வை விட்டு தூரப்படுத்தும், அல்லாஹ்வின் கோபமும் தண்டனையும் ஏற்படுவதற்கு அவை காரணமாகும். உள்ளங்கள் சத்தியத்தை விட்டு பிரழுவதற்கும், குழப்பங்கள் உருவாவதற்கும் இவை காரணமாகும்.

பித்அத்வாதிகளுடன் எப்படி செயல் படுவது:
பித்அத்வாதிகளைத் தரிசிப்பது, அவர்களுடன் உட்காருவது, அவர்களின் தவறுகளை தடுக்கும் நோக்கில், அவர்களுக்கு நல்லுபதேசம் புரியும் நோக்கில் தவிர இல்லையானால் ஹராமாகும். ஏனெனில் அவர்களுடன் கலந்து இருக்கும் பொழுது அவர்களது தீமைகளால் ஒருவன் தாக்கம் பெற வாய்ப்பிருக்கின்றது. மற்றும் பலருக்கு அதன் தீங்குகள் பரவுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.
அவர்களின் அந்த பித்அத்துகளை தடுப்பதற்கு சக்தியில்லையெனும் போது, அவர்களின் விஷயத்திலும், அவர்களின் தீமைகள் விஷயத்திலும் மிக எச்சரிக்கையாக இருப்பது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

அது தவிர முஸ்லிம் அறிஞர்கள், ஆட்சித் தலைவர்கள் பித்அத்துகளைத் தடுப்பது, பித்அத்வாதிகளின் கையைப் பிடித்து அவர்களின் பித்அத்துகளைத் தடுப்பது கடமையாகும். அவர்கள் இஸ்லாத்திற்கு கடும் ஆபத்தானவர்கள. குப்ரியத்தான நாடுகள் பித்அத் வாதிகளின் செயல்களுக்கு ஆர்வமூட்டுகின்றனர், அவை பல வழிகளிலும் பரவுவதற்கு உதவி புரிகின்றனர், ஏனெனில் இஸ்லாத்தின் பெயரை மாசுபடுத்துவதிலும், அதற்கு கலங்கத்தை ஏற்படுத்துவதிலும் அவர்களின் பங்கு மிக முக்கியமானது.

பரிசுத்த கலிமா உயர்வதற்கும், அவனது மார்க்கம் மேலோங்குவதற்கும், அதன் எதிரிகளை அழிப்பதற்கும் நாம் அல்லாஹ்விடமே பிரார்த்திப்போமாக. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவரது தோழர்கள் மீதும், அவரது குடும்பத்தவர்கள் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *