Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » முஃமீன்களே…! அவதூறுகள் உங்களை பொறுமையிழக்கச் செய்ய வேண்டாம்!

முஃமீன்களே…! அவதூறுகள் உங்களை பொறுமையிழக்கச் செய்ய வேண்டாம்!

தன் மானமுள்ள மனிதன் எதை சகித்துக் கொண்டாலும் தன் மீது சுமத்தபடும் மானக்கேடான அவதூறுகளை சகித்துக் கொள்ளவே மாட்டான் காரணம்
இப்படியான செய்திகள் ஒருவரை பற்றி  வந்து விட்டால் அதை உரியவரிடம் விசாரணை செய்து அவர் கூறுவதை  நம்புகின்றவர்களை விட உண்மைக்கு
மாற்றமாக உள்ள அந்த அவதூறை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் பரப்பி சந்தோஷம் அடைகின்றவர்கள். தான் எம்மில் அதிகம் என்பதால் இப்படியான சந்தர்ப்பங்களில் பொறுமையுடன் அதை அனுகுவது கடினம். நிச்சயமாக பொறுமையுடன் அதை எதிர் கொள்கின்றவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலிகளை வைத்துள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏

இந்த அவதூறைப் புனைந்துகொண்டு வந்தவர்கள் உங்களில் உள்ள ஒரு கும்பல்தான். இந்நிகழ்ச்சியினை உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தீங்காகக் கருதாதீர்கள். மாறாக, இதுவும் உங்களுக்கு நன்மையாகவே உள்ளது! அவர்களில் யார் எந்த அளவுக்கு அதில் பங்கேற்றார்களோ அந்த அளவுக்குப் பாவத்தை அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர். மேலும், அவர்களில் யார் இதில் பெரும் பங்கு வகித்தானோ அவனுக்குப் பெரும் தண்டனை இருக்கிறது.
(அல்குர்ஆன் : 24:11)

இதை யார் யாரெல்லாம் தமக்குள் பகிர்ந்து கொண்டு சூழ்ச்சி செய்கின்றார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தை சம்பாதித்தவர்கள் அவர்கள் பேசுகின்ற போதெல்லாம் அவதூறு சுமத்தபட்டவருக்கு நன்மைகள் வந்துகொண்டே இருக்கும்.

அவதூறு கூறுகின்றவர்கள் ஈருலகிலும் அவர்களுக்கான கூலியை நிச்சயம் பெற்றுக்கொள்வார்கள்

மர்யம் அலை அவர்கள் அந்த சமூகம் சந்தேகம் கொண்டு அவதூறுகளை பேசிக்கொண்ட போது அவர்கள் கொண்ட அந்த பொறுமை உண்மையில் அவதூறு சுமத்தப்படும் ஒவ்வொருவருக்கும் சிறந்த முன் உதாரணமாகும்.

அந்த சம்பவம் பற்றிய வசனங்களை படித்து பாருங்கள்

وَاذْكُرْ فِى الْـكِتٰبِ مَرْيَمَ‌ۘ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا ۙ‏

மேலும் (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில்
(அல்குர்ஆன் : 19:16)

قَالَتْ اِنِّىْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا‏

உடனே மர்யம் கூறினார்: “உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்!”
(அல்குர்ஆன் : 19:18)

‌قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ‌ لِاَهَبَ لَـكِ غُلٰمًا زَكِيًّا‏

அதற்கு அவர் கூறினார்: “நான் உம் இறைவனின் தூதராவேன்; தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”
(அல்குர்ஆன் : 19:19)

اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ  اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏

வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது கட்டளை பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈஸா ‘அல் மஸீஹ்’ என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார்.
(அல்குர்ஆன் : 3:45)

قَالَتْ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِيًّا‏

மர்யம் கூறினார்: “எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!”
(அல்குர்ஆன் : 19:20)

قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ ‌ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَآءُ‌  اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏

(இதனைக் கேட்ட) மர்யம், “என் இறைவனே! என்னை எந்த மனிதனும் தீண்டாமலிருக்க, எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” என்று வினவினார். அல்லாஹ் கூறினான்: “அவ்வாறுதான் நடக்கும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். அவன் எதையேனும் (செய்யத்) தீர்மானித்தால் ‘ஆகுக’ என்றுதான் அதற்குக் கட்டளை இடுவான். உடனே அது ஆகிவிடுகின்றது.” (பிறகு வானவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்:)
(அல்குர்ஆன் : 3:47)

قَالَ كَذٰلِكِ‌ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ‌ وَلِنَجْعَلَهٗۤ اٰيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا‌ وَكَانَ اَمْرًا مَّقْضِيًّا‏

அதற்கு வானவர் கூறினார்: “அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது;மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும், அது நடந்தே தீரும்!”
(அல்குர்ஆன் : 19:21)

فَحَمَلَـتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا‏

பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஓர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார்.
(அல்குர்ஆன் : 19:22)

فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِ‌ قَالَتْ يٰلَيْتَنِىْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا‏

பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அப்போது அவர், “அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருந்திருக்கக் கூடாதா?” என்று கூறலானார்.
(அல்குர்ஆன் : 19:23)

فَنَادٰٮهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا‏

அப்பொழுது கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார்: “நீர் கவலைப்படாதீர்; உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான்.
(அல்குர்ஆன் : 19:24)

وَهُزِّىْۤ اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا‏

மேலும், பேரீச்சை மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும். அது உம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களை உதிர்க்கும்;
(அல்குர்ஆன் : 19:25)

فَكُلِىْ وَاشْرَبِىْ وَقَرِّىْ عَيْنًا‌ فَاِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِىْۤ اِنِّىْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا ‌‏

ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் (அவரிடம்) கூறிவிடும்: “கருணைமிக்க இறைவனுக்காக நோன்பு நோற்க வேண்டுமென நான் நேர்ந்திருக்கின்றேன். ஆதலால், இன்று நான் எவரிடமும் பேசமாட்டேன்.”
(அல்குர்ஆன் : 19:26)

அந்த சமூகம் சொன்ன வார்த்தைகளை பாருங்கள்

فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ‌ قَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـٴًـــا فَرِيًّا‏

பிறகு, அவர் அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர்: “மர்யமே! நீ ஒரு பெரும் பாவச்செயலைச் செய்து விட்டாயே…!
(அல்குர்ஆன் : 19:27)

يٰۤـاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَ بُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِيًّا‌ ‌ ‏

ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராய் இருக்கவில்லை; உன் தாயும் தீய நடத்தையுடையவளாய் இருக்கவில்லை!”
(அல்குர்ஆன் : 19:28)

உடலுறவு கொண்டால் தான் ஒரு குழந்தை கிடைக்கும் என்ற அடிப்படை நம்பிக்கையில் இருக்கும் சமூகத்திடம் அல்லாஹ்வை தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் திருமணம் முடிக்காமல் ஒரு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் கூட மர்யம் அலை அவர்கள் நம்பிக்கையிலக்க வில்லை அல்லாஹ்வையே சார்ந்து இருந்தார்கள்

وَيُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِيْنَ‏

மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராயும் திகழ்வார்.”
(அல்குர்ஆன் : 3:46)

என்ற அவனின் வாக்குறுதியையே நம்பினார்கள்

அவதூறுகளுக்கு அல்லாஹ் கொடுத்த பதிலடி

فَاَشَارَتْ اِلَيْهِ‌ قَالُوْا كَيْفَ نُـكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا‏

அப்போது, மர்யம் குழந்தையின் பக்கம் சைக்கினை செய்தார். அதற்கு மக்கள் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசுவது?”
(அல்குர்ஆன் : 19:29)

قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ‏

உடனே, குழந்தை கூறிற்று: “நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான்; என்னைத் தூதராகவும் ஆக்கினான்;
(அல்குர்ஆன் : 19:30)

وَّجَعَلَنِىْ مُبٰـرَكًا اَيْنَ مَا كُنْتُ وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا ‌ ‏

பெரும் பாக்கியமுடையவனாயும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை!
(அல்குர்ஆன் : 19:31)

وَّبَرًّابِوَالِدَتِىْ وَلَمْ يَجْعَلْنِىْ جَبَّارًا شَقِيًّا‏

மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். மேலும், முரடனாகவும், துர்ப்பாக்கியமுடையவனாகவும் என்னை ஆக்கவில்லை.
(அல்குர்ஆன் : 19:32)

وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا‏

என் மீது சாந்தி உண்டாகும் நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!”
(அல்குர்ஆன் : 19:33)

ذٰ لِكَ عِيْسَى ابْنُ مَرْيَمَ ‌ قَوْلَ الْحَـقِّ الَّذِىْ فِيْهِ يَمْتَرُوْنَ‏

இவர்தான் மர்யமின் குமாரர் ஈஸா! இதுதான் இவரைக் குறித்து மக்கள் ஐயம் கொண்டிருக்கும் விஷயத்தில் உண்மையான கூற்றாகும்.
(அல்குர்ஆன் : 19:34)

ஆண் துணையின்றி குழந்தை எப்படி..?

مَا كَانَ لِلّٰهِ اَنْ يَّتَّخِذَ مِنْ وَّلَدٍ‌ۙ سُبْحٰنَهٗ‌ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏

எவரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வின் நியதியல்ல! அவன் புனிதமானவன்; அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் “ஆகிவிடு” என்றுதான் ஆணையிடுகின்றான்; உடனே அது ஆகிவிடுகின்றது.
(அல்குர்ஆன் : 19:35)

قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ ‌ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَآءُ‌  اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏

(இதனைக் கேட்ட) மர்யம், “என் இறைவனே! என்னை எந்த மனிதனும் தீண்டாமலிருக்க, எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” என்று வினவினார். அல்லாஹ் கூறினான்: “அவ்வாறுதான் நடக்கும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். அவன் எதையேனும் (செய்யத்) தீர்மானித்தால் ‘ஆகுக’ என்றுதான் அதற்குக் கட்டளை இடுவான். உடனே அது ஆகிவிடுகின்றது.” (பிறகு வானவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்:)
(அல்குர்ஆன் : 3:47)

اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏

திண்ணமாக, அல்லாஹ்விடத்தில் ஈஸாவின் உவமை ஆதத்தைப் போன்றதாகும். அல்லாஹ் அவரை மண்ணினால் படைத்தான். பிறகு ‘ஆகுக’ என்று கட்டளையிட்டான். உடனே அவர் ஆகிவிட்டார்.
(அல்குர்ஆன் : 3:59)

மர்யம் அலை அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த கண்ணியம்

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِيْنَ

மேலும், இம்ரானின் மகள் மர்யத்தை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான்: அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு, நாம் நம்மிடமிருந்து ரூஹை அவருள் ஊதினோம். மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார்.
(அல்குர்ஆன் : 66:12)

ஆசிரியரின் முந்தைய பதிவிற்கு… http://www.islamkalvi.com/?author=172

தொகுப்பு…
இன்திகாப் உமரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *