Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » முஃமின்களை பலப்படுத்தும் வார்த்தை! [உங்கள் சிந்தனைக்கு… – 015]

முஃமின்களை பலப்படுத்தும் வார்த்தை! [உங்கள் சிந்தனைக்கு… – 015]

“நம்பிக்கை கொண்டோரை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான வார்த்தையைக்கொண்டு அல்லாஹ் பலப்படுத்துவான்.” (அல்குர்ஆன், 14:27) என்ற இவ்வசனத்திற்கு அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்)

அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:-
“வசனத்தில் வருகின்ற உறுதியான வார்த்தை என்பது: ஆதாரம் மற்றும் தெளிவான சான்று மூலம் இறைவிசுவாசியின் உள்ளத்தில் பலம்பெற்றிருக்கும் ‘கலிமதுத் தவ்ஹீத்’ எனும் வார்த்தையாகும்.
இதைக்கொண்டு இவ்வுலகில் இறைவிசுவாசிகளை பலப்படுத்துதல் என்பதன் பொருள்: இதன் பாதையில் பயணிக்கின்றபோது தொல்லையோ, வேதனையோ இவர்களுக்கு ஏற்பட்டாலும் சத்தியத்தை இறுகப் பற்றிப்பிடித்துக் கொள்வார்கள் என்பதாகும்.
மறுமையில் அவர்களைப் பலப்படுத்துதல் என்பதன் பொருள்: வானவர்கள் இருவரும் கேள்வி கேட்கின்ற போது அதற்கு விடையளிக்க அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவதாகும்!”

{ நூல்: ‘ஷர்ஹுல் அகீதா அல்வாசிதிய்யா’, பக்கம்: 182 }

قال الله تعالى: « يثبّت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة »
قال العلامة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-
[ والقول الثابت: هو كلمة التوحيد التي ثبتت في قلب المؤمن بالحجة والبرهان. وتثبيت المؤمنين بها في الدنيا: أنهم يتمسكون بها ولو نالهم في سبيلها ما نالهم من الأذى والتعذيب. وتثبيتهم بها في الآخرة: توفيقهم للجواب عند سؤال الملكين ].

{ شرح العقيدة الواسطية ، ص – ١٨٢ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *