Featured Posts
Home » Tag Archives: உங்கள் சிந்தனைக்கு

Tag Archives: உங்கள் சிந்தனைக்கு

சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 075]

சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்! ஷுரைஹ் அல்காழீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சோதனையால் நிச்சயமாக நான் பீடிக்கப்படுவேன். அப்போது, அதற்காக நான்கு தடவைகள் அல்லாஹ்வை நான் புகழ்ந்து கொள்வேன். ஏற்பட்ட சோதனை, அதைவிட மிகப்பெரியதாக இருக்கவில்லை என்பதற்காகப் புகழ்வேன். அதற்காகப் பொறுமையுடன் இருக்கும் பாக்கியத்தை அவன் தந்துள்ளான் என்பதற்காகப் புகழ்வேன். நற்கூலியை நான் ஆதரவு வைத்துப் பெறுவதற்காக, ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ ௭ன்று சொல்லும் பாக்கியத்தை அவன் எனக்குத் …

Read More »

நன்றிகெட்ட மனிதர்களாக இருக்காதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 051]

நன்றி கெட்ட மனிதர்களாக இருக்காதீர்கள்! அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக மனிதன் தன் இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன், 100:06) “சோதனைகளைக் கணக்கிலெடுத்து, தனக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை மறந்து வாழ்பவனே நன்றி கெட்டவன்!” எமக்கு முன் வாழ்ந்து மறைந்த ஸலfபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவர் வழுக்கைத் தலை உடையவராகவும், உடல் குஷ்டரோகமுடையவராகவும், இரு கண்கள் பார்வையற்றவராகவும், இரு பாதங்கள் மற்றும் இரு கைகளும் இயங்காதபடி சூம்பிப்போனவராகவும் இருந்தார். அவர், “படைத்த …

Read More »

இறைவிசுவாசிக்குப் பலத்தைப் பெற்றுக்கொடுக்கும் ‘திக்ர்’! [உங்கள் சிந்தனைக்கு… – 047]

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “(அல்லாஹ்வை) திக்ர் செய்தல், திக்ர் செய்பவருக்கு நல்ல பலத்தைக் கொடுக்கிறது. எந்தளவுக்கென்றால், திக்ர் இல்லாமல் செய்ய முடியாதிருக்கும் ஓர் விடயத்தை திக்ருடன் ஒருவர் உண்மையாகவே செய்து விடுகின்றார். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் நடை அமைப்பிலும், அவரின் பேச்சிலும், அவரின் வீரத்திலும், எழுத்திலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பலம் இருந்ததை நான் நேரடியாகவே பார்த்தேன். புத்தகம் ஒன்றைத் தொகுத்து எழுதக்கூடிய …

Read More »

அல்லாஹ் இட்ட வரம்புகள், சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைகள் அல்ல! [உங்கள் சிந்தனைக்கு… – 046]

“(கொஞ்சம் இப்படிக்) கற்பனை செய்துபார்! நீ நடந்து செல்லும் உன் பாதையில், ‘முன்னே செல்லத் தடை; மிதிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதி இருக்கிறது!’ என்று எழுதப்பட்ட அறிவித்தல் பதாகை காணப்படுகிறது. அப்போது, ‘தடை!’ என்ற வார்த்தையைச் சொல்லி (எழுதி) அப்பதாகையை வைத்தவன் மீது உன் மனதில் குரோதம் ஏற்படுவதை நீ கண்டு கொள்ளவேமாட்டாய்!. மாறாக, அதற்காக நீ அவனுக்கு நன்றி செலுத்துவாய். அப்பதாகை, உன் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டதென்றும் நீ சிந்திக்கவேமாட்டாய்! …

Read More »

வேண்டாம் இந்நிலைப்பாடு! [உங்கள் சிந்தனைக்கு… – 045]

இமாம் வஹ்ப் இப்னுல் வர்த் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “உள்ளே ஷைத்தானின் நண்பனாக நீ இருந்துகொண்டு, வெளியே அவனைத் திட்டாதே. அல்லாஹ்வை நீ அஞ்சிக்கொள்!”. { நூல்: ‘ஸிfபதுஸ் ஸfப்வா’, 03/135 }   قال الإمام وهب بن الورد رحمه الله تعالى:- [ ولا تسبّ الشيطان في العلانية، وأنت صديقه في السّرّ. إتّق الله! ] { صفة الصفوة، ٣/ ١٣٥ …

Read More »

இலாபத்தை இழக்க வைக்கும் கவனயீனம்! [உங்கள் சிந்தனைக்கு… – 029]

அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “கவனயீனம் இலாபத்தை இழக்கச் செய்து விடும்; பாவம் நஷ்டத்தை ஏற்படுத்தும்; கவனயீனம் சுவர்க்கத்தின் வாசல்களை அடைத்து விடுகிறது; பாவம் நரகத்தின் வாசல்களைத் திறந்து விடுகின்றது!” { நூல்: ‘அத்தஸ்கிரா’, பக்கம்: 103 } قال العلّامة إبن الجوزي رحمه الله تعالى:- [ الغفلة تحرم الربح؛ والمعصية توجب الخسران! الغفلة تغلق أبواب الجنة؛ والمعصية تفتح أبواب …

Read More »

நோன்பும்… ஜிஹாதும்… [உங்கள் சிந்தனைக்கு… – 028]

அறிஞர்களின் பார்வையில்…. நோன்பும் ஜிஹாதும்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அல்லாஹ்வின் அடியார்களே! நாம் ரமழான் மாதத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். இங்கே ஜிஹாதுக்கும் நோன்புக்குமிடையில் வலுவானதோர் தொடர்பு காணப்படுகின்றது. அதாவது, உணவு மற்றும் பானம் ஆகியவற்றின் ஆசையை வெற்றிகொள்ளக்கூடியதாக நோன்பு இருக்கிறது; ஜிஹாதோ, இவ்வுலக வாழ்க்கை மீது கொள்ளும் பேராசையைக் கழற்றி வெற்றியைக் கொடுக்கின்றது. எதிரிகளுக்கெதிராக வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஜிஹாத் என்றிருக்குமாக இருந்தால், நோன்பு உள்ளத்திற்கெதிராகப் …

Read More »

வழி காட்டும் கழுதையும், வழி தெரியாதிருக்கும் சில மனிதர்களும்! [உங்கள் சிந்தனைக்கு… – 023]

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:- “மிருகங்களிலேயே ஆகப் புத்தியற்ற மிருகமாக கழுதை இருந்தும், (போகும் இடத்திற்கான) வழியைக் காட்டுகின்ற தன்மை அதிலே இருக்கிறது. எப்படியெனில், ஒரு மனிதன் அதிலே பயணம் மேற்கொள்கிறான்; தூரத்திலிருந்து இருள் நிறைந்த இரவில் அவனை அது கொண்டு சென்று அவனது வீட்டை சரியாக அறிந்து கொள்கிறது; தனிமையில் விடப்பட்டாலும் அவனின் வீட்டிற்கு அது வந்து சேர்ந்து விடுகிறது; தன்னை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சத்தம், …

Read More »

வேர்களைப் பாழ்படுத்தி, கிளைகளைப் பாதுகாக்கும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 022]

இமாம் இப்னுல் ஜவ்சீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் அதிகம் பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அசுத்தமொன்றைத் தெளித்து பூசிக்கொள்ளாதவாறு பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொள்கிறார்கள்; ஆனால், புறம்பேசுவதிலிருந்து விலகித் தூரமாகாமல் அவர்கள் இருந்து விடுகின்றார்கள்! தானதர்மங்களை அவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள்; ஆனால், வட்டியுடன் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் அவர்கள் கணக்கில்லாமல் இருக்கிறார்கள்! இரவில் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகிறார்கள்; ஆனால், பர்ழான தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்துகிறார்கள்! இவ்வாறு, அடிப்படைகளைப் …

Read More »

பொய் வராதபடி பேச்சில் அவதானம் தேவை! [உங்கள் சிந்தனைக்கு… – 021]

இமாம் அபூ ரவ்ஹ், ஹாதம் பின் யூசுப் (ரஹ்) கூறுகின்றார்கள்:- நான் புfழைல் பின் இயாழ் (ரஹ்) அவர்களின் வாசல் படி சென்று, அவருக்கு சலாம் கூறி, “அலியின் தந்தை (புfழைல்) அவர்களே! என்னிடம் ஐந்து நபிமொழிகள் இருக்கின்றன; (உங்களிடம் உறுதிப்படுத்தி எழுதிக்கொள்வதற்காக) நீங்கள் அனுமதித்தால் அவற்றை உங்களுக்கு வாசித்துக் காட்டுவேன்!” என்று சொல்லி (அவர் அனுமதிக்க) வாசித்துக் காட்டினேன். ஆனால் அதுவோ ஆறு நபிமொழிகளாக இருந்தன. உடனே என்னிடம் …

Read More »