Featured Posts
Home » ஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ

ஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ

மாணவரொருவருக்கு ஆசிரியர் செய்த உபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்! [உங்கள் சிந்தனைக்கு… – 062]

மாணவரொருவருக்கு ஆசிரியர் செய்த உபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்! இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தனது மாணவர் ‘அல்முஸனீ’ (ரஹிமஹுல்லாஹ்) என்பவருக்கு இவ்வாறு உபதேசித்தார்கள்:- “அல்லாஹ்வை நீ அஞ்சிக்கொள்; உன் உள்ளத்தில் மறுமையை நிறுத்திப் பார்; உன் கண்கள் இரண்டிற்கும் முன்னால் மரணத்தை வைத்துக்கொள்! அல்லாஹ்வுக்கு முன் நிற்பதை நீ மறந்து விடாதே; அல்லாஹ்விடமிருந்து வரும் விடயங்களில் நடுக்கத்துடனும் அச்சத்துடனும் இரு! மேலும், அவன் தடுத்தவற்றைத் தவிர்ந்துகொள்; அவனின் …

Read More »

வெளித்தோற்றத்தைப் பார்த்து எவரையும் தவறாக எடைபோட்டு விடாதீர்கள்!! [உங்கள் சிந்தனைக்கு… – 060]

வெளித்தோற்றத்தைப் பார்த்து எவரையும் தவறாக எடைபோட்டு விடாதீர்கள்!! இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “(சஊதிஅரேபியாவின்) ரியாத் நகரிலுள்ள கல்விக் கலாபீடமொன்றில் நாம் மாணவர்களாக இருந்துகொண்டிருந்தோம். அந்நேரம் வகுப்பில் நாம் இருந்துகொண்டிருந்தபோது ஷெய்க் ஒருவர் எங்களிடம் வந்தார். அவரை நீங்கள் பார்த்திருந்தால், ‘இவர் ஓர் நாட்டுப்புற அரபியாகத்தான் இருப்பார்; அறிவிலிருந்து கொஞ்சம்கூட இவரிடம் எடுப்பதற்கு இல்லை!’ என்றுதான் நீங்கள் சொல்லியிருப்பீர்கள். அந்தளவு கந்தலான ஆடையுடன் …

Read More »

கோள்’ செய்தி கொண்டு வந்தவரிடம் மூன்று குற்றங்கள் கண்டுபிடிப்பு! [உங்கள் சிந்தனைக்கு… – 059]

கோள்’ செய்தி கொண்டு வந்தவரிடம் மூன்று குற்றங்கள் கண்டுபிடிப்பு! “ஸாலிஹான நல்ல மனிதரொருவரிடம், (அவர் பற்றிக் கூறப்பட்ட) கோள் செய்தியுடன் ஒருவர் வந்தார். வந்து சொன்னவருக்கு அந்த நல்ல மனிதர் கூறினார்: ‘மூன்று குற்றங்களுடன் என்னிடம் நீ வந்திருக்கின்றாய். எனக்கும், (என்னைப் பற்றி கோள் சொன்ன) எனது அந்த சகோதரருக்குமிடையில் நீண்டதோர் இடைவெளித் தூரத்தை நீ ஏற்படுத்தி விட்டாய்! வெறுமனே காலியாகயிருந்த எனது உள்ளத்தை வேலை செய்ய வைத்துவிட்டாய்! எனது …

Read More »

[உங்கள் சிந்தனைக்கு… – 051] நிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்!!

நிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்!! Rochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் பெண்ணின் நிர்வாண கோல ஆடை, அவள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகியிருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், (சுவர்க்கத்தில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருந்து, ஷைத்தானின் தூண்டுதலினால் அல்லாஹ்வுக்கு மாறு செய்த) ஆதம், மற்றும் ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோர் மீது அல்லாஹ் கோபம் …

Read More »

இஸ்லாத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நான்கு வகை மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 077]

இஸ்லாத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நான்கு வகை மனிதர்கள்! ஸூfபித்துவ அறிஞர், முஹம்மத் பின் அல்fபழ்ல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுவதாக அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் நான்கு தரப்பினரிடம் இருக்கின்றபோது, இஸ்லாம் (மதிப்பிழந்து) போய் விடுகின்றது…. அறிந்ததைக்கொண்டு செயல்படாதவர்கள். அறியாததை வைத்து செயல்படுகின்றவர்கள். செயல்படாமலும், அறிந்து கொள்ளாமலும் இருப்பவர்கள். அறிவைத் தேடும் மக்களைத் தடுப்பவர்கள்!”. இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இதை இவ்வாறு விளக்கப்படுத்திக் கூறுகின்றார்கள்: முதலாம் …

Read More »

ஷைத்தானின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாது எச்சரிக்கையாக இருப்போம்! [உங்கள் சிந்தனைக்கு… – 076]

ஷைத்தானின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாது எச்சரிக்கையாக இருப்போம்! அஷ்ஷெய்க் சஈத் அப்துல் அழீம் (ரஹ்) கூறுகின்றார்கள்:- ஒவ்வொரு முஸ்லிமும் தான் நோற்றிருக்கும் நோன்பு பாழாகாமல் இருக்கவும், வெறுமனே பசித்திருந்து தாகித்திருந்ததே தனக்கான பங்கு என்றில்லாதிருக்கவும் மனித மற்றும் ஜின் இன ஷைத்தான்களின் தவறான ஊசலாட்டங்களிலிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அல்லாஹ்வின் அடியார்களை ஏமாற்றுகின்ற விடயத்தில் ஷைத்தான் பல வழிகளால் வருவான். “எனது இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு …

Read More »

சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 075]

சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்! ஷுரைஹ் அல்காழீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சோதனையால் நிச்சயமாக நான் பீடிக்கப்படுவேன். அப்போது, அதற்காக நான்கு தடவைகள் அல்லாஹ்வை நான் புகழ்ந்து கொள்வேன். ஏற்பட்ட சோதனை, அதைவிட மிகப்பெரியதாக இருக்கவில்லை என்பதற்காகப் புகழ்வேன். அதற்காகப் பொறுமையுடன் இருக்கும் பாக்கியத்தை அவன் தந்துள்ளான் என்பதற்காகப் புகழ்வேன். நற்கூலியை நான் ஆதரவு வைத்துப் பெறுவதற்காக, ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ ௭ன்று சொல்லும் பாக்கியத்தை அவன் எனக்குத் …

Read More »

மனைவி தனது கணவனுக்குத்தான் பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறாள்! [உங்கள் சிந்தனைக்கு – 074]

மனைவிமார்கள் தமது கணவன்மார்களுக்குத்தான் பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-” தமது தாய்மார்களுக்குப் பணிவிடை செய்யக்கூடியவர்களாக தமது மனைவிமார்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற சில கணவன்மார்களுக்கு உபதேசமாக நான் கூறுகின்றேன்: ‘நிச்சயமாக இது தெளிவான தவறொன்றாகும். மனைவி தனது கணவனின் தாய்க்கோ, அல்லது கணவனின் தந்தைக்கோ பணிவிடை செய்யும் ஓர் வேலைக்காரி அல்ல; கணவனின் தாய், அல்லது தந்தைக்கு அவள் செய்யும் …

Read More »

பணிவு தரும் உயர்வு! [உங்கள் சிந்தனைக்கு… – 073]

பணிவு தரும் உயர்வு! பணிவு என்பது, இறைவிசுவாசிகளின் பண்புகளில் சிறப்புக்குரிய பண்பாக இருக்கும் அதேநேரம், அகிலத்தைப் படைத்துப் பரிபாலித்துப் போஷித்து வருகின்ற ஏக இரட்சகனின் அன்புக்கான ஆதாரமுமாகும். இது……. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தின் பக்கமும், அவனின் சுவர்க்கத்தின் பக்கமும் கொண்டு சேர்க்கின்ற வழியாகும்! மனிதனின் இம்மை மற்றும் மறுமை வாழ்வில் கிடைக்கும் சுபீட்சத்திற்கான அடையாளமாகும்! அல்லாஹ்விடமும், மனிதர்களிடமும் உன்னை நெருக்கி வைக்கின்ற வழியாகும்! அல்லாஹ்வின் பாதுகாப்பு, அவனின் கண்காணிப்பு, அவனின் அவதானிப்பு …

Read More »

பெற்றோருக்கு உபகாரம் செய்வதில்… [உங்கள் சிந்தனைக்கு… – 072]

பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் எம் முன்னோர் நிலையும்! எமது நிலையும்!! உமர் இப்னு து(ذ)ர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மகன் மரணித்தபோது அவரிடம், “பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் உங்கள் மகனின் நிலை எப்படியிருந்தது?” என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், “எந்தப் பகல் பொழுதிலும் என்னுடன் அவர் எனக்குப் பின்னாலே தவிர நடந்து சென்றதில்லை; எந்த இரவிலும் எனக்கு முன்னாலே தவிர அவர் நடந்து சென்றதில்லை; மேலும், அவருக்குக் கீழே நான் இருந்த போது …

Read More »