Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » பணிவு தரும் உயர்வு! [உங்கள் சிந்தனைக்கு… – 073]

பணிவு தரும் உயர்வு! [உங்கள் சிந்தனைக்கு… – 073]

பணிவு தரும் உயர்வு!

பணிவு என்பது, இறைவிசுவாசிகளின் பண்புகளில் சிறப்புக்குரிய பண்பாக இருக்கும் அதேநேரம், அகிலத்தைப் படைத்துப் பரிபாலித்துப் போஷித்து வருகின்ற ஏக இரட்சகனின் அன்புக்கான ஆதாரமுமாகும்.
இது…….

  • அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தின் பக்கமும், அவனின் சுவர்க்கத்தின் பக்கமும் கொண்டு சேர்க்கின்ற வழியாகும்!
  • மனிதனின் இம்மை மற்றும் மறுமை வாழ்வில் கிடைக்கும் சுபீட்சத்திற்கான அடையாளமாகும்!
  • அல்லாஹ்விடமும், மனிதர்களிடமும் உன்னை நெருக்கி வைக்கின்ற வழியாகும்!
  • அல்லாஹ்வின் பாதுகாப்பு, அவனின் கண்காணிப்பு, அவனின் அவதானிப்பு ஆகியவற்றின் மூலம் வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையாகும்!
  • பணம் மற்றும் சொத்துப்பத்திலும், வாழ்நாளிலும் செழிப்பையும் இறையருள் வளத்தையும் பெற்றுக்கொள்வதற்குரிய வழியாகும்!
  • மிகப்பெரும் திடுக்கமும் அச்சமும் ஏற்படும் மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழியாகும்!
  •  நற்குணத்தின் மீதிருப்பதற்கான ஆதாரமாகும்; இறுதி முடிவு அழகாக அமைவதற்குக் கொண்டு செல்லக்கூடியதுமாகும்!

التواضع خلق كريم من أخلاق المؤمنين، ودليل محبة ربّ العالمين عزّ وجلّ…
? وهو الطريق الذي يوصل إلى مرضاة الله وإلى جنته.
? وهو عنوان سعادة العبد في الدنيا والآخرة.
? وهو السبيل الذي يقربك من الله تعالى ويقربك من الناس.
? وهو السبيل للفوز بحفظ الله ورعايته وعنايته.
? وهو الطريق لحصول النضر والبركة في المال والعمر.
? وهو السبيل للأمن من عذاب الله يوم الفزع الأكبر.
? وهو دليل على حسن الخلق وقائد إلى حسن الخاتمة.
{ فيس بوك : “معا لتأييد تطبيق الشريعة الإسلامية في السودان”}

 நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை; மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான்; அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை!”
{ நூல்: முஸ்லிம் – 5047 }

தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
[ 19/07/2018 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *