Home » நூல்கள்

நூல்கள்

[e-Book] தேர்ந்தெடுக்கப்பட்ட 90 நபிமொழிகள்

بسم الله الرحمن الرحيم தேர்ந்தெடுக்கப்பட்ட 90 நபிமொழிகள்  தமிழில்: எம். அஹ்மத் அப்பாஸி அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் முன்னுரை அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் ஏக நாயன் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். இறுதிமுடிவு இறையச்சம் உள்ளோருக்கே. சாந்தியும் சமாதானமும் நபிமார்கள் ரஸூல்மார்கள் அனைவருக்கும் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மற்றும் மறுமை வரை அவர்களைத் துயரும் அனைவர் மீதும் உண்டாவதாக. இஸ்லாத்தில் …

Read More »

ஷைத்தானின் சூழ்ச்சி – தொடர் 03

சூழ்ச்சி: ஷைத்தான் உங்கள் உள்ளத்தில் வீண் சந்தேகங்களை உருவாக்கி அதைப் படைத்தது யார்? இதைப் படைத்தது யார்? என்று இறுதியில் உன் இறைவனைப் படைத்தது யார்? என்று கேட்பான். தீர்வு: உடனே அல்லாஹ்விடம் ஷைத்தான் ஏற்படுத்தும் இவ்வாறான வீண் சந்தேகங்களை விட்டு பாதுகாப்புத் தேடிக்கொள்வதுடன் இத்தகைய தீய சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். இன்னும் “அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்” (ஆமன்த்து பில்லாஹ்) என்று கூறிக்கொள்ளுங்கள். ஆதாரம்: “உங்களில் ஒருவரிடம் (அவர் …

Read More »

ஷைத்தானின் சூழ்ச்சி – தொடர் 02

ஷைத்தான் சந்தர்பங்களை, வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கி தீண்டுதல்களை, ஊசலாட்டங்களை உங்கள் உள்ளங்களில் ஏற்படுத்துவான். குறிப்பாக உங்கள் தனிமையில். தீர்வு: இவ்வாறான ஷைத்தானிய தீண்டுதல்களை உணர்ந்தவுடன் சிரிதும் அவனுக்கு அவகாசம் கொடுத்துவிடாமல் உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள். أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ யாவற்றையும் செவியேற்கின்ற, யாவற்றையும அறிந்த அல்லாஹ்விடம் எறியப்பட்ட ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுகின்றேன். ஆதாரம்: وَإِمَّا …

Read More »

சூழ்ச்சி-01 :- பாவங்களையும் தீமைகளையும் அலங்கரித்துக்காட்டுதல்

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் (புதிய தொடர்) நமது பகிரங்க விரோதியான ஷைத்தானின் சூழ்ச்சிகளை இனங்கண்டு அதிலிருந்து நாம் முழுமையாக விடுபடுவதற்கே இத்தொடர். அல்குர்ஆன், ஸுன்னா அடையாளப்படுத்தும் ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும். அவன் ஒவ்வொரு நொடியும் நமக்கு எதிரியே, நமது உடலிளிருந்து இறுதி மூச்சுகள் பிரியும் வரை அவனது சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவனது சூழச்சிகளை இனங்காணவில்லை யென்றால் நமது ஈருலக வாழ்வும் அழிந்து விடும். சந்தர்பம் …

Read More »

வணக்கத்திற்கும் வழக்கத்திற்கும் மத்தியில் நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள் (eBook)

ஆக்கம்: எம். அஹ்மத் (அப்பாஸி) வெளியீடு: இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி – காலி – இலங்கை புகழனைத்தும் படைத்தவன் அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களை அழகிய முறையில் துயரும் அனைவர் மீதும் உண்டாவதாக. இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய இஸ்லாம் இரு முக்கிய பகுதிகளைக் கொண்டது. 1. அல்குர்ஆன். …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 03 (முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள்)

(03) முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள் முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபில் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே! 1. தவ்ஹீத் – ஏகத்துவம். 2. அல் அத்ல் – நீதி 3. அல் வஃது …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 02

முஃதஸிலாக்களின் தோற்றமும் வளர்ச்சியும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப்பெரிய வழிகெட்ட அமைப்புக்களில் முஃதஸிலாக்கள் பிரதானமானவர்கள். கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள், செயல் சார்ந்த பித்அத்துக்கள் போன்றன இவர்களிடம் இல்லாவிட்டாலும் குர்ஆனைத் திரிபுபடுத்துவது, சுன்னாவை மறுப்பது, குர்ஆனுக்கு குதர்க்கமாக விளக்கமளிப்பது, நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற பிரதான வழிகேடுகள் இவர்களிடம் காணப்பட்டன. இவர்களிடம் காணப்பட்ட வழிகேடுகளை மையமாக வைத்து இவர்களை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய அறிஞர்கள் பல பெயர்களைக் குறிப்பிட்டு சமூகத்திற்கு அடையாளப்படுத்தினர். சென்ற …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 01

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது …

Read More »

ஸஹீஹுல் புகாரீ-யின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் (தொடர் 1)

இமாம் புகாரீஅவர்கள் ஸஹீஹுல் புகாரீ-யில் 81வது பாடமாக كتاب الرقاق நெகிழ்வூட்டும் உபதேசங்கள் என்ற தலைப்பில் நபி (ஸல்) அவர்கள செய்த நெகிழ்வூட்டும் உபதேசங்களை தொகுத்துள்ளார். சுமார் 182 ஹதீஸ்கள் (6412 முதல் 6593 வரை) அடங்கிய இந்த தொகுப்பை ஆசிரியர் முஜாஹித் இப்னு ரஸீன், தொடர் வகுப்பாக நடத்துவதற்க்கு திட்டமிட்டுள்ளார்கள் (அல்லாஹ், முஜாஹித் மவ்லவி அவர்கள் இந்த தொடரை தொடர்ந்து நடத்தி முடிப்பதற்க்கு தவ்பீக் செய்வானாக) உண்மையிலே இந்த …

Read More »

வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (eBook)

ஆசிரியர்: அப்துர் ரஹ்மான் மன்பஈ தங்களின் கைகளில் தவழும் இச்சிறு நூல் “அல்ஜன்னத்” இஸ்லாமிய மாத இதழின் தொடர் கட்டுரையில் வந்த தொகுப்பாகும். (மே 2013 – ஜனவரி 2014), தொடராக வெளிவந்த போது பலருக்கும் பயன் தரக்கூடியதாக இருந்ததால், சத்தியத்தை எத்திவைக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள சகோதரர்களின் விருப்பத்திற்கு இணங்க இது நூலாக அத்துடன் மின்னணு நூலகாக (eBook in PDF format) உங்கள் கைகளில் தவழ்கிறது. முழு …

Read More »