Featured Posts
Home » சட்டங்கள் » முஹர்ரம் » ஆஷூரா நோன்பு மாற்றப்பட்டதா?

ஆஷூரா நோன்பு மாற்றப்பட்டதா?

முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் நோற்கக்கூடிய நோன்பிற்குத்தான் ஆஷூரா நோன்பு என்று கூறுகிறோம் இந்த நோன்பைப் பொறுத்தவரை ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு வரை கடமையான நோன்பாக இருந்தது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர் விட்டுவிட்டனர். நூல் ஸஹீஹுல் புஹாரி 2002

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் குறைஷியர் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் “முஹர்ரம் பத்தாவது நாளில் விரும்பியவர் (ஆஷூரா) நோன்பு நோற்கட்டும்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிடட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் ஸஹீஹ் முஸ்லிம் 2071

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்’ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள். நூல் ஸஹீஹுல் புஹாரி 2004

மேற்கூறிய ஹதீஸ்களில் இருந்து கிடைக்கக் கூடிய சில தெளிவுகள்

மக்காவில் இருந்த போது நபி அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றார்கள் அந்த நோன்பை கடமையான நோன்பைப்போன்று  நோற்க கட்டளையிட்டார்கள் அதன் பின்னர் ரமளான் கடமையாக்கப்பட்ட பின்னர் அதை விரும்பதக்க நோன்பாக ஆக்கினார்கள் மதீனா வந்த போது அங்கு யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாள் நோன்பு நோற்பதை கண்ட அல்லாஹ்வின் தூதர் அதன் காரணத்தை அறிந்த பின்னர் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்குக் கட்டளையும் இட்டார்கள்.  அது மட்டுமல்லாமல் ரமளான் நோன்பிற்கு அடுத்தபடியான சிறப்பான நோன்பாகவும் அதனைப் பார்த்தார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!’ நூல் ஸஹீஹுல் புஹாரி 2006

ஆஷூரா நோன்பின் சிறப்பு

உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்” என்று கூறினார்கள். பிறகு, “மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் ஸஹீஹ் முஸ்லிம் 2151.

முஹர்ரம் பத்தாவது நாள் நோன்பு நோற்பதற்கான சிறப்பாக முந்தைய ஒரு வருட பாவம் மன்னிக்கப்படும் என்பதாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் ஏனெனில் அந்நாளில் தான் மூஸா அவர்கள் நோன்பு நோற்றார்கள்.  முன்ச்சென்ற நபிமார்களின் சட்டங்களில் இருந்து எதுவெல்லாம் மாற்றப்படவில்லையோ அதை நாமும் அவ்வாறேதான் கடைபிடிக்கவேண்டும் எனவே மூஸா அவர்களுக்கு மாறுசெய்ய வேண்டிய தேவையில்லை மாறாக யூதர்களுக்குத் தான் நாம் மாறுசெய்யவேண்டும் அதனை கருத்தில் கொண்டு தான் அல்லாஹ்வின் தூதர் தனது இறுதிகாலத்தில்  தாஸூஆ அதாவது முஹர்ரம் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். நூல் ஸஹீஹ் முஸ்லிம் 2088.

இந்த நபி மொழியை வைத்து ஆஷ்ஹுரா நோன்பு தாஸூஆவாக மாற்றப்பட்டுள்ளது என்று ஒருவர் வாதிடுகிறார் இந்த வாதத்திற்கு வலுசேர்க்க இப்னு அப்பாஸ் அவர்களின் பின்வரும் கூற்றையும் முன்வைக்கிறார்

அல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “ஸம்ஸம்” கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். “ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “முஹர்ரம் மாதத்தின் (முதல்) பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!” என்று சொன்னார்கள். “இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு, “ஆம்” என்று அவர்கள் விடையளித்தார்கள். நூல் ஸஹீஹ் முஸ்லிம் 2087.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்  இந்த பதில் அஷூரா நோன்பு தாஸூஆவாக மாற்றப்பட்டது என்ற கருத்திற்கு இடமளிக்கக்கூடியதாக இருந்தாலும் உண்மையில் அத்தகைய பொருளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்  இவ்வாறு கூறவில்லை என்பதை ஆஷூரா நோன்பு தொடர்பான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்  ஏனைய கூற்றுக்களைப் பார்த்தால் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியும்

7839 – عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ فِي يَوْمِ عَاشُورَاءَ: «خَالِفُوا الْيَهُودَ وَصُومُوا التَّاسِعَ وَالْعَاشِرَ»مصنف عبد الرزاق

அதாஉ அவர்கள் அறிவித்தார் ஆஷூரா நாள் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்   கூறியதாக நான் செவியுற்றேன்,  யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்; முஹர்ரம் ஒன்பது, பத்து நோன்பு வைய்யுங்கள். நூல் முஸன்னஃப் அப்திர் ரஸாக் 7839 மேலும் இச்செய்தி  இமாம் பைஹகி அவர்களின் சுனனுல் குப்ரா என்ற நூலில் 8404 என்ற எண்ணிலும் இடம்பெற்றுள்ளது.

இதை விட மிகத் தெளிவாக முஹர்ரம் பத்தாவது நாள் தான் ஆஷூரா நோன்பை நோற்கவேண்டும் என்ற செய்தியும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்   கூறியதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ يُونُسَ، عَنْ الحَسَنِ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَوْمِ عَاشُورَاءَ يَوْمُ عَاشِرٍ» : «حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَسَنٌ صَحِيحٌ» وَاخْتَلَفَ أَهْلُ العِلْمِ فِي يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ بَعْضُهُمْ: يَوْمُ التَّاسِعِ، وقَالَ بَعْضُهُمْ: يَوْمُ العَاشِرِ “، [ص:120] وَرُوِيَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ: «صُومُوا التَّاسِعَ وَالعَاشِرَ وَخَالِفُوا اليَهُودَ» ، «وَبِهَذَا الحَدِيثِ يَقُولُ الشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ» الترمذيحَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ يُونُسَ، عَنْ الحَسَنِ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَوْمِ عَاشُورَاءَ يَوْمُ عَاشِرٍ» : «حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَسَنٌ صَحِيحٌ» وَاخْتَلَفَ أَهْلُ العِلْمِ فِي يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ بَعْضُهُمْ: يَوْمُ التَّاسِعِ، وقَالَ بَعْضُهُمْ: يَوْمُ العَاشِرِ “، [ص:120] وَرُوِيَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ: «صُومُوا التَّاسِعَ وَالعَاشِرَ وَخَالِفُوا اليَهُودَ» ، «وَبِهَذَا الحَدِيثِ يَقُولُ الشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ» الترمذي755

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்   கூறினார்கள் ஆஷூரா நோன்பை (முஹர்ரம்) பத்தாவது நாளில் நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கட்டளையிட்டார்கள்.திர்மிதி 755

இதனை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் ஆஷூரா நோன்பு பத்தாவது நாளா? அல்லது ஒன்பதாவது நாளா? என்று அறிஞர்களில் சிலர் கருத்து வேறுபாடுகொண்டார்கள் ஆனால் முஹர்ரம் ஒன்பது,பத்து நோன்பு வைய்யுங்கள் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்   கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இமாம் ஷாஃபி, இமாம் அஹ்மத்,இமாம் இஸ்ஹாக் ஆகியோர்களும் இந்த செய்தியின் அடிப்படையில் செயல்பட்டுள்ளார்கள் என்றும் கூறினார்கள் .

இறுதியாக சந்தேகத்திற்கு காரணமாக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றின் நோக்கத்தை புரிந்து கொள்வோம் 

“முஹர்ரம் மாதத்தின் (முதல்) பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!”

இதற்கு விளக்கமாக இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸி அவர்கள் கூறினார்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அனைத்து அறிவிப்பையும் யார் சிந்தித்துப்பார்ப்பார்களோ அவர்  சந்தேகம் நீங்கி இதை  தெளிவாக விளங்கிக்கொள்வார் இன்னும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கல்வியின் விசாலத்தையும் புரிந்துகொள்வார்  நிச்சயமாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்   ஆஷூரா தினத்தை ஒன்பதாவது நாளாக ஆக்கவில்லை மாறாக அவர் கேள்வி எழுப்பியவருக்கும் ஒன்பதாவது நாள் நோன்பை நோற்கும் படிச்சொன்னார் ஆஷூரா என்பது மக்கள் அனைவரும் எண்ணுகின்ற பத்தாவது நாள் தான் என்பதை அவரும் அறிந்திருப்பார் என்று கருதி அத்துடன் ஒன்பதையும் சேர்த்து வைக்கும் படி கூறினார் மேலும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவ்வாறு தான் நோற்பார்கள் என்றும் கூறினார் ஒரு வேளை நபி அவர்களின் செயலைக்குறிக்க இவ்வாறு கூறியிருக்கலாம் அல்லது அவரது கட்டளையையும், வரும்காலத்தில் அவ்வாறு செய்யவேண்டுமென்று முடிவுசெய்ததின் அடிப்படையிலும் இவ்வாறு கூறியிருக்கலாம் இதற்கெல்லாம் சான்றாக ஏனைய அவரது அறிவிப்புகள் உள்ளன.

”ஆஷூரா நாளில் நோன்பு வைய்யுங்கள் அதற்கு முந்தியும் பிந்தியும் ஒரு நாள் நோன்பு வைய்யுங்கள்”

”ஆஷூரா நோன்பை (முஹர்ரம்) பத்தாவது நாளில் நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கட்டளையிட்டார்கள்.”

இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஒன்றை ஒன்று உண்மைப்படுத்தவும் உறுதிபடுத்தவும் செய்கிறது. பார்க்க ஸாதுல் மாஆத் 2/72

இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸி அவர்கள் மேலும்  கூறினார்கள்

ஒன்பதாவது நாள் மட்டும் தனித்து நோன்பு நோற்பது என்பது ஆதாரங்களை புரிந்துகொள்வதில் உள்ள குறைபாடாகும் இன்னும் ஆதாரங்களின் வாசகங்களையும், அதன் அறிவிப்பாளர் தொடர்களையும் ஆய்வு செய்யாததன் விளைவாகும் இன்னும் அவ்வாறு புரிந்து கொள்வது மொழி அடிப்படையிலும் மார்க்க அடிப்படைஒயிலும் பாரதூரமான விஷயமாகும் சரியான கருத்தை தேற்தெடுக்க அல்லாஹ் தவ்ஃபீக் செய்யட்டுமாக! ஸாதுல் மாஆத் 2/72.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *