Home » இஸ்லாம் » அறிவுரைகள் » அது ஒரு காகம்! (நீதிக்கதை)

அது ஒரு காகம்! (நீதிக்கதை)

Story வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது. திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் ‘சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்
இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டு களை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

45 comments

 1. Assalamu alaikum …..
  Really this is a very nice. after reading this i was surprised…. bcs this things commonly happen… so we must show our kind to our parents…. wellcome, need more like this stories

 2. Really this is pretty Good. When I read this I remains My parents. It was very excellent. I will spread this every one to read this.

 3. Assalamu Alaikkum(Varah..)

  Nice example to remeber our parents Patience…Hope insha allah

  this kind of stories will teach more to youngsters….

 4. Assalamu Alaikkum

  ஒரு மனிதன் பிறக்கும் பொழுது பெரும் குணங்களே அவனின் முதுமைப் பருவத்தில் நிலைக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அதனை உணராது தவறுகின்றவர்களுக்கு இக்கதை பாடமாகட்டும். நல்ல கதை நண்பா!!!

  “பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்னும் பழமொழி நினைவூட்டும் அறிய சிறிய படைப்பு. படைப்பு சிறிதாயினும் பொருள் படிப்போரை அகாலமாய் சிந்திக்கத் தூண்டுகிறது!!!!

  பெற்றோர் கடமை
  பிள்ளைகள் கடமை
  உணரச் செய்யும்
  ஒரு சிறு பாகம்
  அது ஒரு காகம்!!!!!

  Alhamdhullillah.

 5. When i read the story , it about to ready for tears……….
  Im proud of my parents….

 6. when i read the story, I am proud of my parents. I teach the lesson to above story. Allah is a God, Parents are great.

 7. u.k.rameez-sri lanka

  its really good. i am appreciating the writer to wrote many stories like this. when i read i was cried.

 8. In this story the moral was We all must kind to Our Loveable Parents especially when they are in “OLD”.

  This story was good lesson for all Daughters & Sons

  When I am reading this I feel pitty … about the Parents. PARENTS ARE REALLY GREAT ….. coz no expectations….. etc.

 9. its realy good story. islam is best . allah is always great

 10. Assalamu Alaikkum(Varah..)

  Actually i like this story when i read first, and then i welcome more stores like this, this story would be a lesson for those who are did’nt respect their parents, we not only need to read this we have to distribute this message to those people dont know, if we do that every one will intrested to read those islamic short stories.
  Its fentastic, its realy a good story, we hope we get more and more and best stories like this, islam is best, i always prowd my self to be a “Muslim”, allah is great!!!

 11. assalamu alaikum,masah allah realy story was nice and good,i welcome like this stories many more.i should be no we should be kind our parents forever.

 12. Salam to see this story saja

  with :rujahim

 13. Dear All
  Assalamu Alaikum
  May Allah will bless all Muslims. I hope this kind of publishings help to all as how we have to grow with good manners . when we growing with good manners Allah will give all the goodthings in ‘thunyah and Aahir’

  regards

  Sathik

 14. Assalamu alaikum varahmathullah va barakathu

  Its realy good story,this message disturb me if i read this story i crried that time.

 15. உங்கள் கதை அருமை. தாய் தந்தையரின் பொறுமையையும், நாம் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்பையும் லென்ஸ் போட்டு காட்டி உள்ளீர்கள். நன்றி. பாராட்டுக்கள்.

 16. Assalamu Alaikkum

  ஒரு மனிதன் பிறக்கும் பொழுது பெரும் குணங்களே அவனின் முதுமைப் பருவத்தில் நிலைக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அதனை உணராது தவறுகின்றவர்களுக்கு இக்கதை பாடமாகட்டும். நல்ல கதை நண்பா!!!

  “பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்னும் பழமொழி நினைவூட்டும் அறிய சிறிய படைப்பு. படைப்பு சிறிதாயினும் பொருள் படிப்போரை அகாலமாய் சிந்திக்கத் தூண்டுகிறது!!!!

  பெற்றோர் கடமை
  பிள்ளைகள் கடமை
  உணரச் செய்யும்
  ஒரு சிறு பாகம்
  அது ஒரு காகம்!!!!!

  IBNU DAWOOD
  SENAPATHI

 17. Assalumalikum WW,

  this is a very good story qbout ur parents and elders to respect

  and it was touching my heard ,and who eva is wrote it was realii good thy must be very good to their parentS alhamduliah
  Masha allah walla kuwata illa billa!

  walekumassalam WW

 18. Subhanallah!

  every child to need this story.really very use full story.
  jazakallah islam kalvi.com……

  wahalaikku mussalam

 19. jazzakallah hairan islam kalvi.com……..i like so much this story……..and i tel the story tomy frnds also………..all r feed back s very nice…..

  wassalam

 20. alhamdurillah,
  Good stories like this often touch our heart,
  i am having tears in my eyes,
  i have a better knowledgeof respecting my parents,insha alla
  my parents live a long life.

 21. ashraff uthuman

  assalamu alaaikkum warahmathullahi wabarkathuhu….
  really i feel happy and i’m a lucky guy…. bcz i’m always loving
  my mother & father…. thanks…
  need more like this…..

 22. Assalamu alaikum …This story really impressed me. may allah guide us all. may he blessed the writer. jazakallah. keep it up the work.

 23. Assalamu Alaikum,

  Really a touching story brother,
  Please also check this link, Though its greek you can find the translation in English.

  This won a award too for the best short film.

  http://www.youtube.com/watch?v=mNK6h1dfy2o

  Jizakkallah

 24. assalamu allaikum

  really good story about the parents

  but i want to know how many parents loving child like this story

  in this modern world just look at the all the parents they have no way to spend time with child.

  every parents looking my child become an eng,doctor,businessman,computer eng, etc….

  could you tell me any parents looking first my child become good islamian…..

  just see u r life ( for u r friens and relative circle ) all parents putting presure to child read english and speak english and study english ( afcoruse i am also looking ) every where modern life occupied

  thing always good bcas this is not permenant world

  bye

 25. Pudur Nazeer (cable)

  Real story thanks

 26. assalamu alaikum.va rahmathullahi va barakathuhu.after read this, i feel my past what i had do wrong in my life. thank u for giving good story like this to become a kind man. insha allah.

 27. alhamthulillah
  when i read this story i was vry suprised…

 28. Assalamualaikum,
  this is very great story about the great parents, who is missing their parents let them prey allah to ask forgiveness and make happy with them.
  i read already this article before but when i read with quran sentence really i am crying toomuch .

 29. Assalamualikum……

  This kinds of writings are very much needed for our society.
  And I sow a Video about this also….

  Jazakallah.

 30. assalamu alikum

  all files vedio la illamal tamil la type panni veliyidavum

 31. Assalamu alaikum dear brother of Islam,
  what an story? I was realy excited with this , We realy need this type of stories.

 32. MOHAMED YUSOOF RAJAGHIRI

  All Br & Sist… See all time web nice example

 33. MOHAMED DAWOOD

  MASA ALLAH REALLY AMAZING
  I LIKE IT SO MUCH WE NEED MORE STORY LIKE THIS ALLAH WILL HELP TO DEVELOP THIS WEB SITE MORE & MORE

 34. Mohammed Shajahan

  assalamu-o-alikkum

  this story was very very nice and powerful.i m very provd of my parents

 35. hi
  i read this story

  very nice for son to father…
  (iam a hindu religion but i like ur religion)

 36. Hi very nice story

 37. மாதா பிதா குரு தெய்வம் என்பதை அழகாக ஞாபகப் படுத்தியுள்ளார். பராட்டுக்கள்.

 38. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் வை தவிர வேர் யாரும் இல்லை. தாயாக இருந்தாலும் அவர் தெய்வமாக ஆக மாட்டார்கள். தாயிக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருப்பதுப்போல் நம்மை படைத்த அல்லாஹ் விற்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றது. அவனை மட்டும் வணங்குவதும் ,அவனைத்தவிர வேர் எதையும் வணங்காமலும் , அவனுக்கு இணையாக கருதாமலும் இருப்பதுதான் நாம் அல்லாஹ் விற்கு செய்ய வேண்டிய உன்னத கடமை. அல்லாஹ் நம்மை அவனை வணங்குவதர்க்காகத்தான் படைத்துள்ளான். அவனை தவிர மற்றவைகளை தெய்வங்களாக கருதுவது மிகப்பெரிய பாவம் ஆகும்.

  Masoud
  masuud2k5@gmail.com

 39. Assalamu Alaikum,
  This is very great story about the great parents, who is missing their parents let them prey allah to ask forgiveness and make happy with them.

  this story was very very nice and powerful.i m very provd of my parents

 40. Assalaamu Alaikum REALY VERY NICE jazakallah

 41. Masha Allah!….

  Love ur Parents Always and Forever….

 42. mashallah.superstory.every child should response 2 it.

 43. அல்ஹம்துலில்லஹ்
  மிகவும் பயனுல்ல தகவல்

 44. ASSALAMU ALAIKKUM (VAR)
  I LIKE THIS STORY.

 45. naan cirudu neram yushi thu paar they-en

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *