Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » சிறிய தியாகம்தான்

சிறிய தியாகம்தான்

வீட்டின் மேலதிகச் செலவை ஈடு செய்வதற்காக நகையொன்றை அடகு வைப்பது பற்றி கணவன், மனைவிக்குள் நடந்த உரையாடலைச் செவியுற்ற அவர்களது ஒன்பது வயது மகன்

“இல்லம்மா…
அடகு வைக்காதீங்க…
அது வட்டி…”
என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான்.

ஏற்கெனவே ஜும்ஆவொன்றில் நிகழ்த்தப்பட்ட உரையொன்றினை செவிமடுத்ததன் விளைவாகத்தான் மகன் இவ்வாறு பேசுகிறான், எனக்கூறி உள்ளூர சந்தோசப்பட்ட இருவரும் அவனது கோரிக்கைக்கு மதிப்பளித்து அவ்வெண்ணத்தை கைவிட்டார்கள்.

இப்போது சிறுவனுக்கு சோதனையொன்று காத்திருந்தது.

ஒரு வாரமாக அத்தியவசியமற்ற ஒரு விளையாட்டுப் பொருளை வாங்கிக் கேட்டு வீட்டாரைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருந்தான்.

அதை அவதானித்த அவனது தாயார் அதன் அவசியமற்ற தன்மையைப் புரிய வைக்க முயற்சித்தும் பலனின்றிப்போகவே,
தன் மகனுக்கு ஆடம்பரச்செலவு எது? அத்தியவசியச் செலவு எது? என்பதை உணர்த்த முடிவு செய்தார்.

“சரி இந்த நகைய பேன்ங்ல வச்சி காசு எடுத்து வாங்க…
எல்லாச் செலவையும் சமாளிக்கலாம்…”

என்று கையிலிருந்த நகையைக் கணவரிடம் கொடுக்க, அதைத் தடுத்தது மட்டுமல்லாமல் தனது அடம்பிடித்தலையும் வாபஸ் வாங்கிக் கொண்டான் அந்தச் சிறுவன்.

இச்சம்பவம் காரியாலய உறவொன்றின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து பகிர்ந்ததும் அறிந்ததும்.

பிள்ளைகள் தனக்கு விருப்பமானதொன்றை தியாகம் செய்வதோ, அல்லது தெரிவு செய்வதோ அவர்களின் சுயவிருப்பிலுள்ளது.

ஆனால், அவை உயர்ந்த நோக்களைங்களைக் கொண்ட தெரிவாக அல்லது தியாகமாக அமைவதில் இறையச்சமே பெரும்பங்கினை வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை

பர்சானா றியாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *