Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » பெற்றோருக்கு உபகாரம் செய்வதில்… [உங்கள் சிந்தனைக்கு… – 072]

பெற்றோருக்கு உபகாரம் செய்வதில்… [உங்கள் சிந்தனைக்கு… – 072]

பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் எம் முன்னோர் நிலையும்! எமது நிலையும்!!

உமர் இப்னு து(ذ)ர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மகன் மரணித்தபோது அவரிடம், “பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் உங்கள் மகனின் நிலை எப்படியிருந்தது?” என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், “எந்தப் பகல் பொழுதிலும் என்னுடன் அவர் எனக்குப் பின்னாலே தவிர நடந்து சென்றதில்லை; எந்த இரவிலும் எனக்கு முன்னாலே தவிர அவர் நடந்து சென்றதில்லை; மேலும், அவருக்குக் கீழே நான் இருந்த போது மேல் பகுதியில் அவர் ஏறியதும் இல்லை!” எனக் கூறினார்கள்.
{ நூல்: ‘அல்bபிர்ரு வஸ்ஸிலது’ லிப்னில் ஜவ்ஸீ, 01/89 }

عن عمر بن ذرّ: لمّا مات إبنه قيل له: “كيف كان برّه؟” ق: « ما مشى معي نهارا قط إلا كان خلفي، ولا ليلا إلا كان أمامي، ولا رقى على سطح أنا تحته »
{ البرّ والصلة لابن الجوزي، ١/٨٩ }

 இமாம் ஸுஹ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) சொல்லத் தான் கேட்டதாக, மூஸா பின் உக்பா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
‘அபுல்ஹசன் அலி இப்னுல் ஹுசைன் ஸைனுல் ஆப்தீன்’ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தாபிஈன்களிலுள்ள தலைவர்களில் ஒருவராக இருந்தார்கள். அத்துடன், “மனிதர்களில் உமது தாய்க்கு அதிகம் உபகாரம் செய்யக்கூடியவர்கள் நீங்கள்தான்!” என்று சொல்லப்படும் அளவுக்கு தனது தாய்க்கு அதிகம் உபகாரம் செய்யக்கூடியவர்களாகவும் இவர்கள் இருந்தார்கள்.
{ நூல்: ‘அல்bபிர்ரு வஸ்ஸிலது’ லிப்னில் ஜவ்ஸீ, 01/86 }

عن موسى بن عقبة قال: سمعت الزهري يقول: [ كان أبو الحسن علي بن الحسين زين العابدين رضي الله عنهم كان من سادات التابعين، وكان كثير البرّ بأمه حتى قيل له: « إنك من أبرّ الناس بأمك » ]
{ البرّ والصلة لابن الجوزي، ١/٨٦}

தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
[ 20/07/2018 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *