Featured Posts
Home » கேள்வி-பதில் » ”பிலாலுடைய ‘ஸீன்’ (س) அல்லாஹ்விடத்தில் ‘ஷீன்’ (ش) ஆகும்” என்ற வார்த்தைக்கு எந்தவித அடிப்படையும் கிடையாது

”பிலாலுடைய ‘ஸீன்’ (س) அல்லாஹ்விடத்தில் ‘ஷீன்’ (ش) ஆகும்” என்ற வார்த்தைக்கு எந்தவித அடிப்படையும் கிடையாது

கேள்வி : பிலால் றழியல்லாஹு அன்ஹு அவா்கள் தொழுகைக்காக அழைப்பு விடுக்கும்போது ‘அஷ்ஹது’ (أشهد) என்பதற்கு பதிலாக ‘அஸ்ஹது’ (أسهد) என்று கூறுவார்கள். எனவே, றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “பிலாலுடைய ‘ஸீன்’ (س) அல்லாஹ்விடத்தில் ‘ஷீன்’ (ش) ஆகும்.” என என்முன்னால் கூறப்பட்டது. இக்கருத்தின் ஆதாரத்தன்மை என்ன?
(வெளியீட்டுத் திகதி : 2018-04-10)

பதில் : எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!

பிலால் றழியல்லாஹு அன்ஹு அவா்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களிடத்தில் தொழுகைக்காக அழைப்புவிடுக்கும் மனிதர்களிலே மிகவும் தெளிவாக சரளமாக பேசக்கூடியவராகவும், மிகவும் அழகிய குரல்வளத்தை உடையவராகவும் இருந்தார்.

பிலால் றழியல்லாஹு அன்ஹு அவா்கள் ‘ஷீன்’ (ش) என்பதை ‘ஸீன்’ (س) என்று மாற்றி உச்சரிக்கக்கூடியவா் என்று சிலபொதுமக்கள் மற்றும் அறிவிலிகள் நினைக்கின்றார்கள். எனவே, அவா்கள் தொழுகை்காக அழைப்பு விடுக்கும்போது ‘அஷ்ஹது’ (أشهد) என்பதற்கு பதிலாக ‘அஸ்ஹது’ (أسهد) என்று கூறுவார்.
ஆகவே, றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் கூறினார்கள் : “பிலாலுடைய ‘ஸீன்’ (س) அல்லாஹ்விடத்தில் ‘ஷீன்’ (ش) ஆகும்.” இக்கூற்றுக்கு எந்தவித அடிப்படையும் கிடையாது என்பதுடன், எந்தவித நம்பகத்தன்மையும் கிடையாது.

பிலால் றழியல்லாஹு அன்ஹு அவா்களைப் பற்றி இமாம் இப்னு கஸீ் றஹிமஹுல்லாஹ் அவா்கள் குறிப்பிடும்போது : அவருடைய ‘ஷீன்’ என்பது ‘ஸீன்’ ஆக இருந்தது என்று மனிதா்களில் சிலா் எண்ணுவதைப்போன்றல்ல. (மாறாக) அவா் மனிதா்களிலே மிகவும் தெளிவாக சரளமாக பேசக்கூடியவராக இருந்தார். இதற்கு ஆதாரமாக ”பிலாலுடைய ‘ஸீன்’ அல்லாஹ்விடத்தல் ‘ஷீன்’ ஆகும்.” என்ற எந்தவித அடிப்படையும் அற்ற அறிவிப்பை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். (அப்பிதாயா வந்நிஹாயா : 08-305)

அஸ்ஸா்கஷிய்யு றஹிமஹுல்லாஹ் அவா்கள் கூறினார்கள் : ”அல்ஹாபிழ் ஜமாலுத்தீன் அல்-மிஸ்ஸீ கூறினார் ; பிலால் றழிஹல்லாஹு அன்ஹு அவா்கள் ‘ஷீன்’ என்பதை ‘ஸீன்’ என்று மாற்றக்கூடியவர் என்ற கருத்து பொதுமக்களின் பேச்சில் பிரபல்யம் பெற்று காணப்பட்டது. என்றாலும், அதனை நாங்கள் எந்தவித நூற்களிலும் காணவில்லை.” (அத்தத்கிரா பில் அஹாதீஸ் அல்-மஷ்ஹுரா : பக்கம்-207)

அல்ஹாபிழ் அஸ்ஸஹவீ றஹிமஹுல்லாஹ் அவா்கள் கூறுகிறார்கள் : பிலால் றழியல்லாஹு அவா்களைப்பற்றி குறிப்பிடும்போது ; அவா் இனிமையாக, அழகாக, சரளமாக பேசக்கூடிய குரல்வளம் உடையவராக இருந்தார்.

(அதான் தொடா்பான) கனவுடையவரான அல்துல்லாஹ் பின் ஸைத் றழிஹல்லாஹு அன்ஹு அவா்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் கூறினார்ள் : நீா் அதானை பிலாலிடம் ஒப்புவிப்பீராக. நிச்சயமாக அவா் உம்மைவிட அழகிய, உயா்ந்த சப்தமுடையவா். (ஆதாரம் : அபபூதாவூத்-499)

அப்படி பிலால் றழிஹல்லாஹு அன்ஹு அவா்களின் நாவில் எழுத்துக்களை மாற்றக்கூடிய கோணல் இருந்திருந்தால்,, அச்செயற்பாடு பரவிக்காணப்படடிருக்கும். அத்துடன் அச்செயற்பாடு நயவஞ்சகா்கள், வழிகேடா்கள், மற்றும் இஸ்லாத்தை குறைகாணக்கூடிய அறிவியல்மேதைகளின் உமிழ்நீராகவே இருந்திருக்கும். (அல்மகாஸித் அஸ்ஹஸனா : பக்கம்-397)

அல்-அஜ்லூனி றஹிமஹுல்லாஹ் அவா்கள் கூறினார்கள் : “அல்-அல்லாமா இப்ராஹீம் அந்நாஜீ அவா்கள் கூறினார்கள் ; அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒருபோதும் பிலால் றழியல்லாஹு அன்ஹு அவா்கள் ‘அஸ்ஹது’ (أسهد) என்று ‘ஸீன்’ (س) ஐக் கொண்டு கூறியிருக்கமாட்டார்கள் என்று நான் சாட்சிகூறுகிறேன். மாறாக அவா்கள் மனிதா்களிலே சரளமாக பேசக்கூடியவராகவும், மிகவும் அழகிய உயா்ந்த குரல்வளமுடையவராகவும் இருந்தார்.” (கஷ்புல் ஹிபாஃ : 01-465)

யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.

அரபியில் : https://islamqa.info/ar/288024
தமிழில் : றஸீன் அக்பா் (மதனி)
அழைப்பாளா் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *