Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » காவோலைகள்

காவோலைகள்

உங்களின் தோல் சுருக்கங்களில்
மறைந்து கிடக்கின்றன
வாழும் யுக்திகள்
அந்தக் கூன்விழுந்த முதுகில்தான் எம் வாழ்க்கை
ஒத்திகை பார்க்கிறது

உங்களது அனுபவ நரைகள்
எமது குறைகளைச்
சிரைக்கும் கத்தி
அந்த விரல்கள் பட்ட
ஊன்றுகோலின் சிராய்ப்பும்
எங்களுக்கு ஆசான்

பேசுங்கள்
அது எங்கள் வரலாறு
இன்னும் பேசுங்கள்
அது உங்கள் கடந்தகால வலி
இன்னும் இன்னும் பேசுங்கள்
அதுவே எமக்கு மருந்து

உங்களுக்காய் தியாகித்த
பேரூந்தின் இருக்கையில் கிடைக்கிறது
ஓராயிரம் நிம்மதி
உங்களுடனான புன்னகையில்
குளிர்கிறது எம் உள்ளம்

குருத்தோலைகளை வரவேற்கும்
காவோலைகள்
நீங்கள்
பிள்ளைகளின் குறைகளை
பிரார்த்தனை கொண்டழிக்கும்
அதிசயமும் நீங்கள்

உங்கள் ஆயுள்கள்
எங்கள் புண்ணியங்களைத்
தீர்மானிப்பவை
நாங்கள் புண்ணியம்
சேர்க்க வேண்டும்
எங்களுடன்
வாழ்ந்துகொண்டேயிருங்கள்!

– பர்சானா றியாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *