Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » கோள்’ செய்தி கொண்டு வந்தவரிடம் மூன்று குற்றங்கள் கண்டுபிடிப்பு! [உங்கள் சிந்தனைக்கு… – 059]

கோள்’ செய்தி கொண்டு வந்தவரிடம் மூன்று குற்றங்கள் கண்டுபிடிப்பு! [உங்கள் சிந்தனைக்கு… – 059]

கோள்’ செய்தி கொண்டு வந்தவரிடம் மூன்று குற்றங்கள் கண்டுபிடிப்பு!

“ஸாலிஹான நல்ல மனிதரொருவரிடம், (அவர் பற்றிக் கூறப்பட்ட) கோள் செய்தியுடன் ஒருவர் வந்தார். வந்து சொன்னவருக்கு அந்த நல்ல மனிதர் கூறினார்:

‘மூன்று குற்றங்களுடன் என்னிடம் நீ வந்திருக்கின்றாய்.

  1. எனக்கும், (என்னைப் பற்றி கோள் சொன்ன) எனது அந்த சகோதரருக்குமிடையில் நீண்டதோர் இடைவெளித் தூரத்தை நீ ஏற்படுத்தி விட்டாய்!
  2. வெறுமனே காலியாகயிருந்த எனது உள்ளத்தை வேலை செய்ய வைத்துவிட்டாய்!
  3. எனது உள்ளத்தில் உன்னைப் பற்றி இருந்த (நல்ல) இடத்தைப் பாழாக்கி விட்டாய்!”

இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: “புறம்பேசுதல் குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அந்த அல்லாஹ் மீது ஆணையாக! நெருப்பு விறகைச் சாப்பிடுவதை விட, நன்மைகளை அழிப்பதில் இது மிக வேகமானதாகும்!”

{ நூல்: الغيبة والنّميمة , பக்கம்: 163 }

[ جاء رجل بنميمة إلى أحد الصالحين، فقال له: جئتني بثلاث جنايات :-
الأولى: باعدت بيني وبين أخي.
الثاني: وشغلت قلبي الخالي.
الثالث: وأفسدت مكانتك في قلبي.
وقال الإمام الحسن البصري رحمه الله تعالى: [ إيّاكم والغيبة! والذي نفسي بيده لهي أسرع في الحسنات من النار في الحطب ]
{ الغيبة والنّميمة، ص – ١٦٣ }

தமிழில்
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
[ 05/07/2018 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *