Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 075]

சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 075]

சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்!

ஷுரைஹ் அல்காழீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“சோதனையால் நிச்சயமாக நான் பீடிக்கப்படுவேன். அப்போது, அதற்காக நான்கு தடவைகள் அல்லாஹ்வை நான் புகழ்ந்து கொள்வேன்.

  1. ஏற்பட்ட சோதனை, அதைவிட மிகப்பெரியதாக இருக்கவில்லை என்பதற்காகப் புகழ்வேன்.
  2. அதற்காகப் பொறுமையுடன் இருக்கும் பாக்கியத்தை அவன் தந்துள்ளான் என்பதற்காகப் புகழ்வேன்.
  3. நற்கூலியை நான் ஆதரவு வைத்துப் பெறுவதற்காக, ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ ௭ன்று சொல்லும் பாக்கியத்தை அவன் எனக்குத் தந்துவிட்டான் என்பதற்காகப் புகழ்வேன்.
  4. எனது மார்க்க விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக அச்சோதனையை அவன் ஆக்கவில்லை என்பதற்காகப் புகழ்வேன்!”

{ நூல்: ‘சியரு அஃலாமின் நுபbலா’, 04/105 }

قال شريح القاضي رحمه الله تعالى: [ إنّي لأصاب بالمصيبة، فأحمد الله عليها أربع مرات:-
? أحمد إذ لم يكن أعظم منها.
? وأحمد إذ رزقني الصّبر عليها.
? وأحمد إذ وفّقني للإسترجاع لما أرجو من الثواب.
? وأحمد إذ لم يجعلها في ديني.
{ سير أعلام النبلاء، ٤/١٠٥ }

அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு (நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக!

  • அவர்கள் யாரெனில், தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!’) என்று கூறுவார்கள்.
  • இத்தகையோருக்கே அவர்களின் இரட்சகனிடமிருந்து புகழுரைகளும், கருணையும் உண்டாகும். அவர்களே நேர்வழி பெற்றவர்கள்!”.

(அல்குர்ஆன், 02:155 -157)

தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *