Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » அல்லாஹ் இட்ட வரம்புகள், சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைகள் அல்ல! [உங்கள் சிந்தனைக்கு… – 046]

அல்லாஹ் இட்ட வரம்புகள், சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைகள் அல்ல! [உங்கள் சிந்தனைக்கு… – 046]

“(கொஞ்சம் இப்படிக்) கற்பனை செய்துபார்! நீ நடந்து செல்லும் உன் பாதையில், ‘முன்னே செல்லத் தடை; மிதிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதி இருக்கிறது!’ என்று எழுதப்பட்ட அறிவித்தல் பதாகை காணப்படுகிறது. அப்போது, ‘தடை!’ என்ற வார்த்தையைச் சொல்லி (எழுதி) அப்பதாகையை வைத்தவன் மீது உன் மனதில் குரோதம் ஏற்படுவதை நீ கண்டு கொள்ளவேமாட்டாய்!. மாறாக, அதற்காக நீ அவனுக்கு நன்றி செலுத்துவாய். அப்பதாகை, உன் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டதென்றும் நீ சிந்திக்கவேமாட்டாய்! மாறாக, அது உன் ஈடேற்றத்திற்கான பாதுகாப்பு என்றே நீ விளங்கிக் கொள்வாய்!.

இவ்வாறுதான், ‘மார்க்க சட்ட வரம்புகள் தமது சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன!’ என்று விளங்குவோரும், ‘அவை, தமது ஈடேற்றத்திற்கான பாதுகாப்பு!’ என்று விளங்குவோரும் (மனிதர்களில்) இருந்து கொண்டிருக்கின்றனர்!!.

அல்லாஹ் கூறுகிறான்: “இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவன் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகி்றானோ அவன் தனக்குத்தானே அநியாயம் செய்துகொண்டான்!”.
(அல்குர்ஆன், 65: 01)

{ Facebook – ilyes Hispanista, 4 Nov 2015 }

[ تخيل! أنك تمشي في طريقك فإذا بلوحة مكتوب عليها « ممنوع التقدم – حقل ألغام »! لن تجد في نفسك حقدا على من وضع هذه اللوحة لأنه قال لك «ممنوع»، بل ستشكره عليها. ولن تفكر أن هذه اللوحة قد حدت من حرّيتك، بل ستفهمها أنها ضمان لسلامتك!
وهكذا من يفهم حدود الشرع على أنها تحد من حريته، ومن يفهمها على أنها ضمان لسلامته!
قال الله تعالى: « وتلك حدود الله ومن يتعدّ حدود الله فقد ظلم نفسه » (سورة الطلاق ، الآية : ١ }
{ Facebook – ilyes Hispanista, 4 Nov 2015 }

தமிழில்…
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *