Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » நன்றிகெட்ட மனிதர்களாக இருக்காதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 051]

நன்றிகெட்ட மனிதர்களாக இருக்காதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 051]

நன்றி கெட்ட மனிதர்களாக இருக்காதீர்கள்!

அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக மனிதன் தன் இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன், 100:06)
“சோதனைகளைக் கணக்கிலெடுத்து, தனக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை மறந்து வாழ்பவனே நன்றி கெட்டவன்!”
எமக்கு முன் வாழ்ந்து மறைந்த ஸலfபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவர் வழுக்கைத் தலை உடையவராகவும், உடல் குஷ்டரோகமுடையவராகவும், இரு கண்கள் பார்வையற்றவராகவும், இரு பாதங்கள் மற்றும் இரு கைகளும் இயங்காதபடி சூம்பிப்போனவராகவும் இருந்தார். அவர், “படைத்த படைப்பினங்களில் அதிகமானோரைச் சோதித்ததை விட்டு என்னைப் பாதுகாத்துச் சுகமளித்ததோடு, என்னை நன்றாகவே சிறப்பித்திருக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறக்கூடியவராக இருந்தார்.

அப்போது, அவருக்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவர் அவரிடம்: “எதைக்கொண்டு அல்லாஹ் உங்களுக்குப் பாதுகாப்பும் சுகமும் அளித்திருக்கின்றான்? நீங்கள் ஓர் குருடர்; குஷ்டரோகமுடையவர்; வழுக்கைத் தலையர்; இயங்காதபடி கைகளும் பாதங்களும் சூம்பிப்போனவர்; இப்படியிருக்க, எப்படி அல்லாஹ் உங்களுக்குப் பாதுகாப்பும் சுகமும் அளித்திருக்கின்றான்?” என்று கேட்டார். அதற்கு அவர், “மனிதரே! உமக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! பேசும் நாவையும், நன்றி செலுத்தும் உள்ளத்தையும், சோதனையைப் பொறுமையுடன் தாங்கிக்கொள்வதற்கான உடலையும் அல்லாஹ் எனக்குத் தந்திருக்கின்றானே!” என்று கூறினார்.
{ முகநூலில்- சகோதரர் نور الدين مقرح என்பவர் }

 قال الله تعالى: { إن الإنسان لربّه لكنود } (سورة

من هو”الكنود”؟: “هو الذي يعد المصائب وينسى نعم الله عليه”.
أحد السّلف كان أقرع الرأس أبرص البدن أعمى العينين مشلول القدمين واليدين وكان يقول: « الحمد للّه الذي عافاني ممّا ابتلى به كثيرا ممّن خلق وفضّلني تفضيلا ».
فمرّ به رجل فقال له: « ممّا عافاك؟ أعمى وأبرص وأقرع ومشلول! فممّا عافاك؟» فقال: « ويحك يارجل! جعل لي لسانا ذاكرا وقلبا شاكرا وبدنا على البلاء صابرا ».
{ نور الدين مقرح في فيس بوك }

தமிழில்…
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *