Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » வழி காட்டும் கழுதையும், வழி தெரியாதிருக்கும் சில மனிதர்களும்! [உங்கள் சிந்தனைக்கு… – 023]

வழி காட்டும் கழுதையும், வழி தெரியாதிருக்கும் சில மனிதர்களும்! [உங்கள் சிந்தனைக்கு… – 023]

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“மிருகங்களிலேயே ஆகப் புத்தியற்ற மிருகமாக கழுதை இருந்தும், (போகும் இடத்திற்கான) வழியைக் காட்டுகின்ற தன்மை அதிலே இருக்கிறது. எப்படியெனில், ஒரு மனிதன் அதிலே பயணம் மேற்கொள்கிறான்; தூரத்திலிருந்து இருள் நிறைந்த இரவில் அவனை அது கொண்டு சென்று அவனது வீட்டை சரியாக அறிந்து கொள்கிறது; தனிமையில் விடப்பட்டாலும் அவனின் வீட்டிற்கு அது வந்து சேர்ந்து விடுகிறது; தன்னை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சத்தம், செல்வதற்குத் தூண்டப்படுகின்ற சத்தம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டையும் அது பிரித்து அறிந்து கொள்கிறது! எனவே, எவனொருவன் ‘சுவர்க்கம்’ என்ற தனது வீட்டிற்குச் செல்வதற்கான வழியை அறியவில்லையோ அவன் கழுதையை விட புத்தியற்றவனாவான்!”
{ நூல்: ‘ஷிபாfஉல் அலீல்’, பக்கம்: 76 }

قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
[ من هداية الحمار – الذي هو أبلد الحيوانات – أن الرجل يسير به ويأتي به إلى منزله من البعد في ليلة مظلمة فيعرف المنزل، فإذا خلي جاء إليه، ويفرق بين الصوت الذي يستوقف به والصوت الذي يحث به على السير. فمن لم يعرف الطريق إلى منزله – وهو الجنة – فهو أبلد من الحمار ! ]
{ شفاء العليل ، ص – ٧٦ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *