Featured Posts
Home » Tag Archives: அறிஞர்களின் பார்வையில்

Tag Archives: அறிஞர்களின் பார்வையில்

ஆபத்துகள் நீங்க அல்லாஹ்வை நெருங்குவோம்! [அறிஞர்களின் பார்வையில்… – 03]

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: உள்ளம் அல்லாஹ்வை விட்டும் வெகுதூரத்தில் இருக்கும் போதெல்லாம் அந்த உள்ளத்தை நோக்கி ஆபத்துக்கள் மிக விரைவில் வந்து சேரும். உள்ளம் அல்லாஹ்விடம் நெருங்கும் போதெல்லாம் அந்த உள்ளத்தை விட்டும் ஆபத்துக்கள் வெகுதூரத்தில் சென்று விடும். (அல்ஜவாபுல் காஃபீ: 127) தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு) 23.09.2018

Read More »

மருந்து, மாத்திரைகள் மாத்திரம் நோய் நிவாரணியல்ல [அறிஞர்களின் பார்வையில் – 02]

بسم الله الرحمن الرحيم இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அதிகமான நோயாளிகள் மாத்திரைகளின்றியே நிவாரணம் பெறுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆவைக் கொண்டு அல்லது பிரயோசனமான ஓதிப் பார்த்தல் முறையைக் கொண்டு அல்லது உள்ளத்தில் உள்ள பலத்தைக் கொண்டு அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள சிறந்த நம்பிக்கையைக் கொண்டு அவர்கள் நோய் நிவாரணம் பெறுவர். மஜ்மூஉல் பதாவா: 12/563 தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு) 19.09.2018

Read More »

ஆஷுரா தினத்தில் பேண வேண்டியவை… [அறிஞர்களின் பார்வையில் – 01]

بسم الله الرحمن الرحيم இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: இந்த ஆஷூரா தினத்தில் (விஷேசமாக) கவலையை வெளிப்படுத்துவது அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இரண்டுமே நபிவழிக்கு முரணாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பதைத் தவிர (விஷேசமாக) வேறெதுவும் நபியவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை. மஜ்மூஉல் பதாவா: 16/194 தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு) 18.09.2018

Read More »

வழி காட்டும் கழுதையும், வழி தெரியாதிருக்கும் சில மனிதர்களும்! [உங்கள் சிந்தனைக்கு… – 023]

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:- “மிருகங்களிலேயே ஆகப் புத்தியற்ற மிருகமாக கழுதை இருந்தும், (போகும் இடத்திற்கான) வழியைக் காட்டுகின்ற தன்மை அதிலே இருக்கிறது. எப்படியெனில், ஒரு மனிதன் அதிலே பயணம் மேற்கொள்கிறான்; தூரத்திலிருந்து இருள் நிறைந்த இரவில் அவனை அது கொண்டு சென்று அவனது வீட்டை சரியாக அறிந்து கொள்கிறது; தனிமையில் விடப்பட்டாலும் அவனின் வீட்டிற்கு அது வந்து சேர்ந்து விடுகிறது; தன்னை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சத்தம், …

Read More »

வேர்களைப் பாழ்படுத்தி, கிளைகளைப் பாதுகாக்கும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 022]

இமாம் இப்னுல் ஜவ்சீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் அதிகம் பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அசுத்தமொன்றைத் தெளித்து பூசிக்கொள்ளாதவாறு பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொள்கிறார்கள்; ஆனால், புறம்பேசுவதிலிருந்து விலகித் தூரமாகாமல் அவர்கள் இருந்து விடுகின்றார்கள்! தானதர்மங்களை அவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள்; ஆனால், வட்டியுடன் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் அவர்கள் கணக்கில்லாமல் இருக்கிறார்கள்! இரவில் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகிறார்கள்; ஆனால், பர்ழான தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்துகிறார்கள்! இவ்வாறு, அடிப்படைகளைப் …

Read More »

பொய் வராதபடி பேச்சில் அவதானம் தேவை! [உங்கள் சிந்தனைக்கு… – 021]

இமாம் அபூ ரவ்ஹ், ஹாதம் பின் யூசுப் (ரஹ்) கூறுகின்றார்கள்:- நான் புfழைல் பின் இயாழ் (ரஹ்) அவர்களின் வாசல் படி சென்று, அவருக்கு சலாம் கூறி, “அலியின் தந்தை (புfழைல்) அவர்களே! என்னிடம் ஐந்து நபிமொழிகள் இருக்கின்றன; (உங்களிடம் உறுதிப்படுத்தி எழுதிக்கொள்வதற்காக) நீங்கள் அனுமதித்தால் அவற்றை உங்களுக்கு வாசித்துக் காட்டுவேன்!” என்று சொல்லி (அவர் அனுமதிக்க) வாசித்துக் காட்டினேன். ஆனால் அதுவோ ஆறு நபிமொழிகளாக இருந்தன. உடனே என்னிடம் …

Read More »

அருவருப்பான மலம் உருட்டி வண்டுகளுடன் இவனைச் சேர்த்து விடுங்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 020]

இமாம் அபூபக்கர் முஹம்மத் அத்தர்தூஷீ அல்மாலிகீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “(பயனுள்ள) அறிவையும் சரியான நுட்ப கருத்தையும் செவிமடுக்காது, அறிஞர்கள் மற்றும் சரியான நுட்ப கருத்துடைய ஞானிகளின் அவைகளிலிருந்து விரண்டோடி, உலகத்தின் செய்திகள், ஏனைய மெளட்டீகங்கள், பாமர மக்களின் அவைகளில் இடம்பெறும் (பயனற்ற) விடயங்கள் ஆகியவற்றைச் செவிமடுப்பதில் ஈர்ப்பும் விருப்பும் கொண்டவனாக இருக்கும் மனிதனொருவனை நீ கண்டுவிட்டால் அவனை அருவருப்பான மலம் உருட்டி வண்டுகள் உலகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடு! …

Read More »

ஏகத்துவமும், இஸ்லாமியக் கொள்கையும் சரியாக இருந்தால்தான் வெற்றி! [உங்கள் சிந்தனைக்கு… – 019]

அல்லாமா ரபீbஃ பின் ஹாதீ அல்மத்ஹலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “இஸ்லாமியக் கொள்கையாகிய ‘அகீதா’வையும், ‘தவ்ஹீத்’ எனும் ஏகத்துவத்தையும் (சரியாக விளங்கிச் செயல்படாமல்) நாம் பாழ்படுத்திவிட்டு, அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் விடயத்தில் நாம் வீழ்ந்து விட்டோமாக இருந்தால் (எம்மிடமிருக்கின்ற) ‘பிfக்ஹ்’ எனும் இஸ்லாமிய சட்டத்துறை அறிவுக்கோ, அல்லது வேறு துறைசார் அறிவுக்கோ அல்லாஹ் மீது ஆணையாக எந்தப் பெறுமதியும் இருக்க முடியாது!. வேறு அறிவு எதிலும் எவ்விதப் பயனும் இருக்கவும் முடியாது!. …

Read More »

இறுதி முடிவு இனிதாய் அமைய இறைவனிடம் இறைஞ்சுவோம்! [உங்கள் சிந்தனைக்கு… – 018]

இமாம் இஸ்மாஈல் அந்நைசாபூbரீ (ரஹ்) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தார்கள். அப்போது அவரிடம் அவரது தாய், “எதைப் பெற்றுக்கொள்கிறாய் மகனே?” என்று கேட்டார்கள். ஆனால், அவரால் பேச முடியவில்லை. உடனே அவர் தனது தாயின் கையில், (அல்குர்ஆனின் 56-ம் அத்தியாயம், 89-வது வசனத்தில் வருகின்ற) فروح وريحان وجنة نعيم» “அவருக்கு நலமும், மணமும், அருள் நிறைந்த சுவர்க்கமும் உண்டு” என்பதை எழுதிவிட்டு பின்னர் மரணத்துவிட்டாா். { நூல்: ‘சியரு அஃலாமின் …

Read More »

உன் மரணத்துடன் உன் பாவங்களும் மரணித்து விடட்டும்! [உங்கள் சிந்தனைக்கு… – 017]

ஹபீப் அல்பாfரிசீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ஒரு மனிதன் மரணிக்கின்றபோது, அவனுடன் சேர்ந்து அவனது பாவங்களும் மரணித்து விடுவதுதான் அவனுக்குரிய மகிழ்ச்சியும் ஈடேற்றமுமாகும்!” {நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’, 06/152} قال حبيب الفارسي رحمه الله تعالى:- [ إن من سعادة المرء أن يموت وتموت معه ذنوبه! ] { حلية الأولياء، ٦ /١٥٢ } “சமூக வலைத்தளங்களில் பாவங்களை நீ பரப்பிவிட்டு, பின்னர் நீ …

Read More »