Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » எது நல்ல வாழ்க்கை? [உங்கள் சிந்தனைக்கு… – 014]

எது நல்ல வாழ்க்கை? [உங்கள் சிந்தனைக்கு… – 014]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“நல்ல வாழ்க்கை என்பது, பொதுமக்கள் சிலர் விளங்கி வைத்திருப்பதுபோல வறுமை, நோய், கவலை போன்ற ஆபத்துக்களிலிருந்து ஈடேற்றமடைந்திருப்பது என்பதல்ல. மாறாக, ஒரு மனிதன் உள்ளம் தூய்மையானவனாகவும், (இஸ்லாத்தைத் தூய வடிவில் விளங்கிச் செயல்படுவதன்பால்) உள்ளம் விரிந்தவனாகவும், அல்லாஹ்வின் கழா கத்ரில் திருப்திகொண்டவனாகவும் இருப்பதுதான் நல்ல வாழ்க்கையாகும். அத்தோடு அவனுக்கு மகிழ்ச்சியான விடயம் ஒன்று ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவான்; அது அவனுக்கு நலவாக அமைந்து விடும்! அவனுக்குத் துன்பம் ஒன்று ஏற்பட்டுவிட்டால் பொறுமையாக இருப்பான்; அதுவும் அவனுக்கு நலவாகிவிடும்! இதுதான் நல்ல வாழ்க்கையாகும்; இதுதான் உள்ளத்திற்கும் திருப்தியாகும். நிறைய சொத்துக்கள் இருப்பதும், உடல்கள் வெறுமனே ஆரோக்கியமாக இருப்பதும் மனிதனுக்கு சில வேளை மூதேவித்தனமாகவும், களைப்பையும் கஷ்டத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்து விடும்!!”

{ நூல்: ‘பfதாவா இஸ்லாமிய்யா’, 04/64 }

قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
[ الحياة الطيبة ليست كما يفهمه بعض الناس: السلامة من الآفات من فقر ومرض وكدر. لا، بل الحياة الطيبة أن يكون الإنسان طيب القلب، منشرح الصدر، مطمئنا بقضاء الله وقدره. إن أصابته سراء شكر فكان خيرا له، وإن أصابته ضراء صبر فكان خيرا له! هذه هي الحياة الطيبة؛ وهي راحة القلب.
أما كثرة الأموال وصحة الأبدان فقد تكون شقاءا على الإنسان وتعبا ] { فتاوى إسلامية، ٤/ ٦٤ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *