Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » உனது உள்ளம் நோயுற்றுள்ளது என்பதை நீ அறிந்து கொள்வது எப்படி? [உங்கள் சிந்தனைக்கு… – 010]

உனது உள்ளம் நோயுற்றுள்ளது என்பதை நீ அறிந்து கொள்வது எப்படி? [உங்கள் சிந்தனைக்கு… – 010]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“உனது உள்ளம் தீமையை தீமையாகப் பார்த்து வெறுக்காமல், (நல்லதில்) நிலைத்திருக்காமல், நன்மையில் நிம்மதியடையாமல் இருப்பதாக நீ கண்டு கொண்டால் உன் உள்ளத்தில் நோய் இருப்பதாகப் புரிந்து கொண்டு அதைச் சீர்செய்ய முயற்சி செய்! இதே நேரம், உனது உள்ளம் நன்மையில் இன்புற்று அதைச் செய்வதோடு, அதன்பால் செல்வதற்கான வழியையும் காட்டி, தீமையை வெறுத்து, அதை விட்டும் தூரமாகியிருப்பதாக நீ கண்டு கொண்டால் அது தூய உள்ளமாக இருக்கிறது என்று புரிந்து கொள்!”
{ நூல்: ‘ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம்’, 01/300 }

قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
[ فإذا رأيت من قلبك: أنه لا يستنكر المنكر، وأنه لا يستقر، ولا يطمئن للمعروف، فاعلم أن في قلبك مرضا فحاول أن تصلحه! وإذا رأيت قلبك: يفرح بالمعروف ويفعله، ويرشد إليه، ويكره المنكر ويبتعد عنه، فاعلم أنه قلب سليم! ] { شرح صحيح مسلم، ١/٣٠٠ }

அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர அந்நாளில் செல்வமோ, பிள்ளைகளோ பயன் தராது” (அல்குர்ஆன், 26:88,89)

ஆசிரியரின் ஏனைய கட்டுரைகளை காண: http://www.islamkalvi.com/?author=171

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *