Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » சுன்னா » தாடி வழித்தல் தொடர்பாக உலமாக்களின் கருத்துகள்

தாடி வழித்தல் தொடர்பாக உலமாக்களின் கருத்துகள்

بسم الله الرحمن الرحيم

தாடி வழித்தல் தொடர்பாகப் பழைய புதிய 11 உலமாக்களின் கருத்துக்களை இங்கு நாம் தொகுத்தளித்துள்ளோம். அவற்றை நன்கு வாசித்துப் பயன்பெறுமாறு இப்பதிவு மூலம் விண்ணப்பிக்கின்றோம்.

1. அல்லாமா இப்னு ஹஸ்ம் அல்அந்தலுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியை வழிப்பது அலங்கோலமாகும். எனவே, அது கூடாது என்ற கருத்தில் இமாம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” (மராதிபுல் இஜ்மா, அல்மஹல்லி)

2. இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “தாடியை வழிப்பது ஹராமாகும். ஆண்களில் உள்ள அரவாணிகளைத் தவிர வேறு எவரும் இதனைச் செய்ய மாட்டார்கள்.” (அத்தம்ஹீத்)

3. இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “தாடியை வழிப்பதை உடனடியாக விட்டுவிடுவதே தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தாகும்.” (ஷர்ஹ் முஸ்லிம்)

4. இமாம் அல்குர்துபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “தாடியை வழிப்பதோ பிடுங்குவதோ குறைப்பதோ கூடாது.” (தஹ்ரீமு ஹல்கில் லிஹா)

5. இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “மேலும், தாடியை வழிப்பது ஹராமாகும்.” (அல்இஹ்தியாராதுல் இல்மிய்யா)

6. அல்ஹாபிழ் அல்இராகி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: “தாடியை அதன் நிலையிலேயே விட்டுவிடுவதற்கும் அதில் இருந்து எதனையும் துண்டிக்காமல் இருப்பது மேலானது என்பதற்கும் பெரும்பான்மையான அறிஞர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள். இன்னும் இது இமாம் ஷாபி மற்றும் அவர்களுடை தோழர்களின் கருத்துமாகும்.” (தர்ஹுத் தஸ் ரீப்)

7. அல்லாமா அஷ்ஷங்கீதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “எனது தாயின் மகனே நீ என்னுடைய தாடியையும் தலையையும் பிடிக்காதே!” என்ற வசனம் தொடர்பாக விளக்கமளிக்கையில்: “இச்சங்கை மிக்க வசனம் தாடியை நீளமாக வளரவிடுவதைப் பேணுவது பற்றி அறிவிக்கின்றது. எனவே, இது ஒரு தாடியை வளரவிடுதல் தொடர்பாகவும் அதனை வழிக்காமல் இருப்பது தொடர்பாகவும் பேசக்கூடிய குர்ஆனிய ஆதாரமாகும்” என்கிறார்கள். (அழ்வாஉல் பயான்)

8. அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “தாடியை வளரவிடுவது வாஜிபாகும். மேலும், அதனை வழிப்பது ஹராமாகும்.” (ஆதாபுஸ் ஸிபாப்)

குறிப்பு: தாடியை வழித்தல் ஹராம் என்பதை உரத்துக் கூறும் அதிகமான இவரது பேச்சுக்கள் இவருடைய புத்தகங்களிலும் ஒலிப்பதிவு நாடாக்களிலும் காணப்படுகின்றன.

9. அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்ட இந்த வார்த்தை தாடியை நீளமாக வளரவிடுவது வாஜிப் என்பதையும் அதனை வழிப்பது மற்றும் குறைப்பது ஹராம் என்பதையும் வேண்டி நிற்கின்றது.”

மேலும் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியைப் பரிபாலிப்பதும் அதனை அடர்த்தியாக வளரவிடுவதும் மேலும், அதனை தொங்கும் அமைப்பில் நீளமாக வளரவிடுவதும் விட்டுவிட முடியாத பர்ளாகும்.”

இன்னும் கூறுகிறார்கள்: “இன்னும், இவ்வாறே தாடியை வழிப்பதும் அதனைக் குறைப்பதும் ஈமானைக் குறைக்கக்கூடிய மேலும், அதனை பலவீனப்படுத்தக்கூடிய பாவங்களில் மற்றும் மாறு செய்தலில் உள்ளடங்குகின்றன. இன்னும், இதன் காரணமாக அல்லாஹ்வுடைய கோபம் மற்றும் அவனுடைய தண்டனை உண்டாகும் என்றும் அச்சம் கொள்ளப்படும்.” (வுஜூபு இஃபாஇல் லிஹ்யா)

10. இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “தாடியை வழித்தல் ஹராமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அது அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தலாகும். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: ‘தாடியை வளரவிடுங்கள்! மீசையைக் கத்தரியுங்கள்!’ மேலும், அது ரஸூல்மார்களின் வழிமுறையை விட்டு நெருப்பு வணங்கிகள் மற்றும் இணைவைப்பாளர்களின் வழிமுறையை நோக்கி வெளியேறுதலுமாகும்.” (முஜ்மூஉல் பதாவா இப்னி உஸைமீன்)

11. அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஸஹீஹான ஹதீஸ்கள் தாடியை வழிப்பது ஹராம் என்பதை அறிவிக்கக்கூடியனவாக இருக்கின்றன.” (அல்பயான்)

தொகுப்பு: அபூஹுனைப் ஹிஷாம் (ஸலபி, மதனீ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *