Featured Posts
Home » அபூ உமர் (page 10)

அபூ உமர்

67] அந்த மூன்று காரணங்கள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 67 இஸ்ரேல் உருவான போது காஸா பகுதி இஸ்ரேலின் பெருமைக்குரிய இடங்களுள் ஒன்றாக இருந்தது. 1948 யுத்தத்தின்போது அது எகிப்து வசமானதை ஏற்கெனவே பார்த்தோம். எப்படியாவது காஸாவை எகிப்திடமிருந்து மீட்டுவிடவேண்டுமென்பதுதான் இஸ்ரேலின் அடிப்படை எண்ணம். இழந்த பகுதியை மீட்கும் சாக்கில் இன்னும் கொஞ்சம் சேர்த்துச் சாப்பிட முடிந்தால் சந்தோஷம்தானே? இந்தத் திட்டத்துடன்தான் இஸ்ரேல் ராணுவம் காஸா வழியாக எகிப்தினுள் புகுந்தது. யுத்தம் வரத்தான் …

Read More »

66] சூயஸ் கால்வாயின் சரித்திரம்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 66ஒரு கால்வாய்க்கு என்ன பெரிய சரித்திரம் இருந்துவிட முடியும்? ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சூயஸின் பெயர்தான் கால்வாயே தவிர, உண்மையில் அது ஒரு சிறிய கடல் என்றுதான் சொல்லவேண்டும். அத்தனை நீளம். அத்தனை ஆழம். பிரும்மாண்டமான கப்பல்களெல்லாம் மிக அநாயாசமாக வரும். யுத்த தளவாடங்களை, போர் விமானங்களை ஏற்றிக்கொண்டு ராணுவக் கப்பல்கள் அங்கே அணிவகுக்கும். வெள்ளம் வரும். எல்லாம் வரும். மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் …

Read More »

65] எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 65 ஏதோ ஒன்று நடக்கப்போகிறது; பெரிதாக, மிகப்பெரிதாக என்று எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது. ஆயுதம் தாங்கிய போராளிகள் அனைவரும் தத்தம் பயிற்சிகளில் மும்முரமாக இருந்தார்கள். அரபு லீக் என்று சொல்லப்படுகிற அரபு நாடுகளின் கூட்டமைப்பின் வலுவான பின்புலத்தில் உருவாகியிருந்த பி.எல்.ஓ. பாலஸ்தீனில் மட்டுமல்லாமல் ஏனைய அரபு தேசங்கள் அனைத்திலும் பயிற்சிப் பாசறைகளை உருவாக்கி, தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அதுவரை பி.எல்.ஓ.வில் சேராத யாசர் …

Read More »

நான்தான் உங்கப்பன்டா..

உலகத்தில் நாட்டுக்கு நாடு, மனிதனுக்கு மனிதன் என்று எவராக இருந்தாலும் போட்டி போட்டுக்கொண்டு “உனக்கு அப்பன் நானடா” என்று முன்னேறி வருகிறார்கள். இந்த முன்னேற்றம் மனித வாழ்க்கையை உயர்த்துமானால் அது அவசியமான முன்னேற்றம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பகட்டுக்காகவும், பெருமைக்காகவும்தான் எனும்போது சற்று சிந்திக்க வேண்டியுள்ளது. இவர்களின் முன்னேற்றம் யார் “அதிக நேரம் முத்தம் கொடுப்பது” என்பதிலும், பாம்பு பல்லி போன்ற விஷ ஜந்துக்களை கடித்து விழுங்குவதிலும், …

Read More »

64] அராஃபத் என்கிற புரட்சியாளர்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 64 பகலில் அவர் ஒரு பொதுப்பணித்துறை ஊழியர். ஆனால் அவரது இரவுகளுக்கு வேறு முகம் இருந்தது. அராஃபத் குவைத்துக்குப் போய்ச்சேர்ந்து, பொதுப்பணித்துறை பொறியியல் வல்லுநராகப் பதவி ஏற்றுக்கொண்டவுடன் செய்த முதல் காரியம், தனக்கென ஒரு சௌகரியமான வீட்டைத் தேடிக்கொண்டதுதான். சற்றே ஒதுக்குப்புறமான பகுதி ஒன்றில் மாடியும் தரைத்தளமுமாக இருந்த ஒரு சிறிய வீடு. அராஃபத் அந்த வீட்டின் மாடிப் பகுதிக்கும் தரைப்பகுதிக்கும் நடுவில் …

Read More »

63] யூதர்களை ஆதரிக்கும் காரணங்கள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 63 பாலஸ்தீன் போராளிகளுக்கு அன்றைக்கு இருந்த மிகப்பெரிய பிரச்னை, ஆயுதங்கள். அதிநவீன ஆயுதங்களுடன் அவர்களுக்குப் பரிச்சயம் கிடையாது. கொடுத்தாலும் உபயோகிக்கத் தெரியாது. நாட்டுத் துப்பாக்கிகளும் கையெறிகுண்டுகளுமே அவர்களுக்குப் போதுமானவை. ஆனால் அவை கிடைப்பதில்தான் அதிக சிக்கல்கள் இருந்தன. மற்ற விஷயங்களில் எப்படியோ. ஆயுதப் பதுக்கல், கடத்தல், தயாரித்தல் நடவடிக்கைகளைக் கண்டறிந்து ஒழிப்பதில் அப்போது பாலஸ்தீனில் இருந்த பிரிட்டிஷ் ராணுவம் மிகத் தீவிரமாக இருந்தது. …

Read More »

62] யாசர் அராஃபத்தின் மறக்க முடியாத..

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 62 நல்ல, குளிர் மிகுந்த இரவு. வீட்டில் அத்தனை பேரும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். துளி சப்தம் இல்லாத சாலையில் எங்கோ தொலைவில் ஒரே ஒரு நாய் மட்டும் ஒரு முறை குரைத்தது. குரைக்கத் தொடங்கிய அந்த நாயின் குரல், ஆரம்பத்திலேயே அடங்கிப்போனது, அரை உறக்கத்தில் இருந்த அந்தச் சிறுவனுக்கு வியப்பளித்தது. நாய் குரைக்கத் தொடங்கினால் ஒரு நிமிடமாவது நீடிக்காதோ? இதென்ன, ஆரம்பத்திலேயே …

Read More »

61] அரபுக்களின் ஒற்றுமையின்மை

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 61 இஸ்ரேல் உருவான மறுதினமே யுத்தமும் ஆரம்பமாகிவிட்டபடியால், இஸ்ரேலின் அரசியல் அமைப்பு, ஆட்சி முறை போன்ற விவரங்களை உடனடியாக நம்மால் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் மிக முக்கியமான விஷயம் இது. மத்தியக்கிழக்கு என்று சொல்லப்படும் மாபெரும் நிலப்பரப்பின் 99.9 சதவிகிதத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை வேறு; 0.1 சதவிகித நிலப்பரப்பே கொண்ட இஸ்ரேலின் அரசியல் அமைப்பு முற்றிலும் வேறு. இஸ்ரேல் ஒரு …

Read More »

நகர்ந்து வருமா மலைத்தொடர்

நாம் சென்றுகொண்டிருக்கும் திசையில் ஒரு ஆரஞ்சு வண்ண மலைத்தொடர் திடீரென முளைத்துள்ளது. அதுவும் 4000 அடிகளுக்கு மேல் உயரமுடையது. திடீரென முளைத்த மலைத்தொடர் நம்மை நோக்கி நகர்ந்து வருகின்றது. மிக அருகில்.. ரொம்ம்ம்ப பக்கத்தில்.. நம்மையே சூழ்ந்துவிட்டதே! மதியம்தான் ஆகுது. அதற்குள் இருட்டிவிட்டதே. இப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் அகப்பட்டால் என்ன செய்வீர்கள்?. மத்திய கிழக்கு நாடுகளில் எப்போதாவது இந்த மணற்காற்று (Sandstorm) வீசுவதுண்டு. நீங்கள் இப்பாலைவன பிரதேசத்திற்கு புதியவராக …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 9

முகம்மதுக்கு முன்பு இறைத் தூதர்களாக இவ்வுலகில் அறியப்பட்டவர்கள் மொத்தம் இருபத்தைந்து பேர். அவர்களுள், முதல் மனிதர் ஆதாம் தொடங்கி, இயேசு வரையிலான பதினேழு பேரைப் பற்றிய விரிவான அறிமுகங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியவர்கள், இறைவனாலேயே நல்வழி காட்டப்பட்டவர்கள் ஒருவகை. இறைவனிடமிருந்து மக்களுக்கு வேதத்தைப் பெற்று அளித்தவர்கள் இன்னொரு வகை. முகம்மதுக்கு முன்னர் இப்படி வேதம் அருளப்பட்ட சம்பவம் மட்டும் மூன்றுமுறை நடந்திருக்கிறது. முதலாவது, …

Read More »