Featured Posts
Home » ஜாஃபர் அலி (page 39)

ஜாஃபர் அலி

குர்ஆன் எதைக் குறித்துப் பேசுகின்றது?

இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட இறுதி இறைவாக்கே திருக்குர்ஆன்! இதுவே, ஒவ்வொரு முஸ்லிமுடைய நம்பிக்கை மற்றும் வாழ்வியல் நடைமுறையின் தோற்றுவாயாக அமைந்திருக்கின்றது. மனித இயல்போடு தொடர்புடைய ஒவ்வொரு பணபைக் குறித்தும் அது பேசுகின்றது. பகுத்தறிவு, கொள்கை விளக்கம், வணக்கவழிபாடு, சட்டம் என்று அவற்றை பட்டையலிட்டுக் கொண்டே செல்ல முடியும். ஆனால், திருக்குர்ஆனின் அடிப்படைக் கொள்கை படைப்பாளனுக்கும், படைப்பினங்களுக்கும் இடையிலான உறவைக் குறித்தே! அதேவேளை, ஒரு நல்ல சமுதாயம் உருவாகிடவும், மனித ஒழுங்குகள் சீர்பெறவும், …

Read More »

அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்கும் போது….

1403. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். புஹாரி :5232 உக்பா பின் ஆமிர் (ரலி).

Read More »

தங்களின் தேவையை நிறைவேற்ற பெண்கள் வெளியே செல்தல்.

1402. பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி(ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் இப்னு கத்தாப் (ரலி) பார்த்துவிட்டு ‘சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற …

Read More »

சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்.

1401. (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள். புஹாரி : 6247 அனஸ் (ரலி).

Read More »

வேதக்காரர்களின் ஸலாமுக்கு எப்படி பதிலுரைப்பது?

1398. வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6258 அனஸ் இப்னு மாலிக் (ரலி). 1399. யூதர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் அவர்களில் சிலர் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே, (அவர்களுக்கு பதிலாக) ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்று சொல் என …

Read More »

ஒரு முஸ்லீமுக்கு பிற முஸ்லீமின் மீதுள்ள கடமை.

1397. ”ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1240 அபூஹுரைரா (ரலி).

Read More »

வாகனத்தில் செல்பவர் நடப்பவருக்கு ஸலாம் கூறுதல்.

முகமன் கூறுதல். (ஸலாம்) 1396. சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) ஸலாம் சொல்லட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6234 அபூஹுரைரா (ரலி).

Read More »

பிறர் வீட்டில் துவாரம் வழியாகப் பார்க்காதே.

1393. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது ‘என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது” என்று …

Read More »

பிறர் வீட்டில் நுழைய அனுமதி முறையாகக் கேட்டல்.

1392. என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், ‘யார் அது?’ என்று கேட்டார்கள்.அதற்கு நான், ‘நான்தான்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நான் நான் என்றால்…?’ என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள். புஹாரி : 6250 ஜாபிர் (ரலி).

Read More »

குர்ஆன் – அது என்ன?

வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இறைச்செய்தியின் பதிவே திருக்குர்ஆன்! முஹம்மத் (ஸல்) அவர்கள், தான் மனனம் செய்த இந்த இறைவசனங்களை தம்முடைய தோழர்களிடம் கூறினார்கள். பின்னர் அவர்களில் எழுதத் தெரிந்தவர்களைக் கொண்டு இறைவசனங்கள் எழுதி வைக்கப்பட்டன. பின்னர், அதனை முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளிலேயே சரிபார்த்து அங்கீகரித்தார்கள்! திருக்குர்ஆன் 114 அத்தியாயங்களைக் கொண்டது. பல நூற்றாண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் அதன் …

Read More »