Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் (page 17)

விமர்சனம் விளக்கம்

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை பகுதி 6

பகுதி ஆறு தவாபுஸ் ஸியாரா. ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயல்களில் இந்தத் தவாபுஸ் ஸியாராவும் ஒன்று. இந்தத் தவாபைச் செய்யாதவரை ஹஜ் நிறைவு பெறாது. ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து, குர்பானி கொடுத்து, தலை முடி நீக்கி, இஹ்ராமிலிருந்து விடுபட்ட ஹாஜிகள், தவாபுஸ்ஸியாராச் செய்வதற்கு கஃபத்துல்லாஹ்வை நோக்கி புறப்படுகின்றனர். இன்றைய தினம் செய்யும் இந்தத் தவாபுஸ்ஸியாரா என்பது மிகவும் சிரமமானது தான். இது நாள் வரை ஹாஜிகள், எத்தனையோ முறை- …

Read More »

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை பகுதி 5

பகுதி ஐந்து துல் ஹஜ் 9 ஆம் நாள்- ஹஜ்ஜின் 2 ஆம் நாள். இன்று தான் ஹஜ். ‘ஹஜ் என்பது அரபாவாகும்” என்பது நபி மொழி இது வரை ஹாஜிகள் செய்த செயல்கள் எல்லாம், ஹஜ்ஜுடன் இணைந்த செயல்கள். உண்மையில் ஹஜ் என்பது, துல் ஹஜ் 9 ஆம் நாள் காலையிலிருந்து சூரியன் மறையும் வரை அரபாத் மைதானத்தில் நின்று வணங்குவது தான். அந்தப் புனித நாள் இன்று …

Read More »

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை பகுதி 4

ஜன்னத்துல் பகீஃ அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியரில் பலரும், அருமைத் தோழர்களில் பல்லாயிரக் கணக்கானோரும், இங்கு தான் அடக்கப் பட்டுள்ளனர். திரு மறையின் முழுமையான மூலப் பிரதியை உருவாக்கித் தந்தவரும், மூன்றாவது கலீபாவுமான உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள், பெருமானாரின் எண்ணற்ற பொன் மொழிகளை அகிலத்திற்கு அறிவித்த, அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள், அண்ணலாருக்கு அமுதூட்டிய அருமை அன்னை, ஹலீமா ஸஃதிய்யா (ரலி) …

Read More »

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை பகுதி 3

பகுதி மூன்று ஜம் ஜம் கிணறு. இப்போது மக்கா நகரமாக இருக்கும் இந்த இடம் ஊராக உருவாவதற்கு முன், முதன் முதலில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார்கள். குழந்தை தாகத்தால் தவித்த போது இஸ்மாயீலின் தாயார், ஸஃபா மர்வா என்னும் இரு மலைக் குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி, ஏதாவது வணிகக் …

Read More »

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை, பகுதி2

பகுதி இரண்டு மக்கத் திரு நகரில். ‘இறைவனின் விருந்தினர்களை வரவேற்பதில் மக்கத் திரு நகரம் மகிழ்ச்சி அடைகிறது” என்னும் ‘உம்முல் குரா” பல்கலைக் கழக அலங்கார வளைவு, ஹாஜிகள் புனித மக்காவில் நுழைந்து விட்டனர் என்பதை உணர்த்துகிறது. எந்த நகரைச் சிறப்பித்து இறைவன் தன் திரு மறையில் இயம்பினானோ! இறைவனை வணங்க, உலகின் முதல் இறையாலயம் எழுப்பப்பட்டச் சிறப்பு எந்த நகருக்குக் கிடைத்ததோ! எந்த நகரில், ஈருலக வேந்தர் இறைத் …

Read More »

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை, பகுதி 1

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹஜ் என்ற அந்தப் பெரும் கடமையை நிறைவேற்றிய நண்பர் எ- அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்கள் ஹஜ் செய்பவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் விதத்தில் அந்தப் பயணத்தை உணர்ச்சிப்பூர்வமாக தொகுத்து ‘நேர்முக வர்ணனை”யாக வழங்குகிறார். கட்டுரையின் பெயரிலேயே இந்த அனுபவக் கட்டுரை பல ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகமாகவும் வந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பு, இஸ்லாத்தின் மீதானக் குற்றச்சாட்டுக்களுக்கான விளக்கத்தை ”ஹஜ் பெருநாள் கழிந்த பின் தொடர்வேன். அதுவரை ”புனித …

Read More »

குர்பானி – அறுத்து பலியிடுதல், சட்டங்கள். பகுதி 2

“ஹஜ்” பெருநாளை நெருங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு. குர்பானி – அறுத்து பலியிடுதலின் சட்ட விளக்கங்கள். ஆக்கம்: நண்பர் M.I. முஹம்மது சுலைமான். பகுதி:2 குர்பானி பிராணியை அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை: பிராணியை அறுக்கும் முன் கத்தியை கூர்மையாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கூர்மையற்ற கத்தியினால் அறுத்து பிராணியை சித்திரவதைச் செய்யக் கூடாது. எல்லா உயிரினங்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் – பழிக்குப் …

Read More »

குர்பானி – அறுத்து பலியிடுதல், சட்டங்கள். பகுதி 1

“ஹஜ்” பெருநாளை நெருங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு. குர்பானி – அறுத்து பலியிடுதலின் சட்ட விளக்கங்கள். ஆக்கம்: நண்பர் M.I. முஹம்மது சுலைமான். ‘.. அவர் கூறினார்: ‘நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன். திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான். ‘என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக” (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம். பின் …

Read More »

இஸ்லாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும், 4

நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணமுடித்த போது மக்களை அழைத்து விருந்து வைத்தார்கள். விருந்துக்கு வந்த மக்களில் சிலர் விருந்து முடிந்தும் திரும்பிச் செல்வதில் தாமதம் செய்தார்கள். இது நபி(ஸல்)அவர்களுக்கு சங்கடமாக இருந்தது, இதை அவர்களிடம் சொல்ல வெட்கப்பட்டார்கள். இது பற்றியே 33:53ம் வசனம் அருளப்பட்டது. 33:53. முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் …

Read More »

இஸ்லாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும், 3

இஸ்லாத்தைக் களங்கப்படுத்திட வேண்டும் என்ற வெறியோடு ஒரு உண்மையுடன் பல பொய்களைக் கலந்து அந்தப் பொய்களையும் இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்ற பொய்யைத்தான், தமது (இஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்.) கட்டுரை முழுக்க விதைத்திருக்கிறார். // மேலே கண்ட திருக்குரான் வசனங்கள் அருளப் பட்ட பின்னும், மற்ற முஸ்லீம் பெண்கள் சுதந்திரமாக முகமது நபியவர்களின் கூட மசூதியில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்கள் என்றும், பர்தா அணியாமல் அவர் முன்வந்து பேசினார்கள் …

Read More »