Featured Posts
Home » நூல்கள் (page 203)

நூல்கள்

4] கி.பி.

நிலமெல்லாம் ரத்தம் 4 – பா.ரா யூதர்களின் சரித்திரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிக முக்கியமானதொரு நிகழ்ச்சி. மோஸஸுக்குப் பிறகு இன்னுமொரு தேவதூதனின் வரவு அவர்களுக்கு நியாயமாக மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், யூத குலத்தின் அடையாளமே ‘தேவதூதனுக்காகக் காத்திருக்கும் குலம்’ என்பதுதான். ஆனால் இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை. பெத்லஹெமில் (Bethlehem) இயேசு …

Read More »

3] யூதர்கள்

நிலமெல்லாம் ரத்தம் 3 – பா.ரா அது, 44வது வருடம். அதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நாற்பத்து நான்காவது வருடம். ஜெருசலேம் நகரிலிருந்த நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்திருந்தது. நீதிமன்றம் என்றால் அரசின் நீதிமன்றம் அல்ல. அது யூத மதகுருக்களின் நீதிமன்றம். மன்னர்களைக் காட்டிலும் அன்றைக்கு அவர்களுக்குத்தான் அதிகாரம் இருந்தது. மத குருக்கள் ஒரு தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள் என்றால் மன்னரேகூட அதனை மாற்றுவது சிரமம். காரணம், மக்கள் மன்னர்களை …

Read More »

2] ஆப்ரஹாம் முதல்

நிலமெல்லாம் ரத்தம் 2 – பா.ரா அந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன்? அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார். ஆனால் அவர் மனைவிக்கு மட்டும் ஒரு யோசனை. ஒருவேளை பிரச்னை தன்னிடம்தான் இருக்குமோ? தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற …

Read More »

1] அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்

நிலமெல்லாம் ரத்தம் – பா.ரா 1 ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், …

Read More »

நிலமெல்லாம் ரத்தம் தொடர் – எரியும் பிரச்னையின் புரியம் வடிவம் – Index

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவருடைய ஆய்வு. தனது ஆய்வுக்கு இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களையும் விட்டுவைக்கவில்லை, விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியத்தை அறிந்துக்கொள்வதற்காக. எழுத்துக்கள் பலவகை உண்டு. ஏன்தான் படிக்கத் தொடங்கினோமோ என்று நினைக்கக்கூடியது. மற்றொன்று தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை அவ்வெழுத்துகளோடு ஐக்கியப்படுத்திவிடுவது. இதில் இரண்டாம் வகைதான் பா.ராகவனின் எழுத்துக்கள். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வருவதை சேமிப்பதில் எனக்கு முன்னோடி, நண்பர் கிருஸ்டோபர் ஜான் அவர்கள். …

Read More »