Featured Posts
Home » Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான் (page 16)

Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

நபி யூனுஸ் (அலை) அவர்களின் சிறப்பு.

1536. ஒருவர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச்சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3416 அபூஹுரைரா (ரலி). 1537. நான் யூனுஸ் இப்னு மத்தாவை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (‘யூனுஸ் இப்னு மத்தா – மத்தாவின் மகன் யூனுஸ்’ …

Read More »

நபி மூஸா (அலை) அவர்களின் சிறப்புகள்.

1532. ‘இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை’ என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் …

Read More »

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்புகள்.

1529. இப்ராஹீம் (அலை) அவர்கள், தம் எண்பதாவது வயதில் ‘கத்தூம்’ (எனும் வாய்ச்சி’யின்) மூலமாக விருத்த சேதனம் செய்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3356 அபூஹுரைரா (ரலி). 1530. (இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் நாமே இப்ராஹீம(அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப் பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி,) …

Read More »

நபி ஈஸா (அலை)அவர்கள் சிறப்புகள்.

1526. நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் – இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் – எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி). 1527. ‘ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் …

Read More »

முஸ்லீம்களில் பெருங்குற்றம் புரிந்தவர்.

1521. ‘தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :7289 ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி). 1522. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. …

Read More »

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவசியம்.

1519. மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி (ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் …

Read More »

அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடிய அண்ணலார்.

1518. நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களை விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்” என்றார்கள். புஹாரி …

Read More »

நபி (ஸல்) அவர்களின் பிற பெயர்கள்.

1517. எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன். நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ (குஃப்ரை) அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஞர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி …

Read More »

மக்கா மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தார்கள்?

1516. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் நாற்பதாம் வயதில் நபியாக நியமிக்கப்பட்டார்கள். தமக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் மக்காவில் பதின்மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்கு கட்டளையிடப்பட, ஹிஜ்ரத் செய்து (மதீனாவில்) பத்தாண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள். புஹாரி : 3902 இப்னு அப்பாஸ் (ரலி).

Read More »