Featured Posts
Home » Tag Archives: இறப்பு (page 6)

Tag Archives: இறப்பு

பார்வையிழந்த ஸஹாபியைப் பற்றிய ஹதீஸ்

இந்த ஹதீஸை இமாம் திர்மிதியும், நஸாயீயும் அறிவிக்கிறார்கள். ‘நபிகளின் துஆவை வைத்து பிரார்த்தித்தல்’ என்ற இனத்தைச் சார்ந்த ஹதீஸாக இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது. கண்பார்வை இழந்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து தமக்காகப் பிரார்த்தித்து தமது பார்வையை மீட்டுத்தர அல்லாஹ்வை வேண்டும்படி கேட்டுக்கொண்டார். இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரை நோக்கி ‘நீர் விரும்பினால் கொஞ்சம் பொறுமையுடன் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் நீர் நினைப்பதுபோல நான் பிரார்த்திக்கிறேன்’ என்றார்கள். இதைக் …

Read More »

வஸீலா ஷபாஅத் என்னும் வார்த்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்கள்

வார்த்தைகளைப் பற்பல கருத்துக்களுக்குப் பிரயோகிப்பதை அறியாதவர்களும், புரட்டியும், திருப்பியும் சொற்களைக் கூறக் கூடியவர்களுமான சிலரிடத்தில் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் போன்ற சில வார்த்தைகள் கிடைத்தபோது அவற்றிற்கு அல்லாஹ்வும், ரஸூலும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்கள் ஆகியோரெல்லாம் விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து மக்களை தவறின்பால் திருப்பி விட்டார்கள். இதனால் பலர் தவறினார்கள். இவ்வார்த்தையின் உட்கருத்தைப் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. பொதுவாக கல்வி என்பது நன்றாக ஆராய்ந்து கற்று அறிந்து கொள்வதாகும். …

Read More »

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.

நபிகள் (ஸல்) அவர்கள் எல்லா மக்களுக்கும் பரிந்து பேசி அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும் அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும், அந்தஸ்திலும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாவார்கள். அவர்களின் அந்தஸ்தின் அருகில் எந்த நபிகளும், எந்த ரசூலும் நெருங்க முடியாது. இவர்கள் அல்லாஹ்விடம் எல்லோரையும் விட மதிப்புக்குரியவர். யார் யாருக்கு அவர்கள் இறைவனிடம் துஆச் செய்து மன்றாடி சிபாரிசு …

Read More »