Featured Posts
Home » Tag Archives: தூய்மை (page 2)

Tag Archives: தூய்மை

48.அடைமானம்

பாகம் 3, அத்தியாயம் 48, எண் 2508 அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். ‘முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர, காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் …

Read More »

46.அநீதிகளும் அபகரித்தலும்

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2440 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது …

Read More »

11.ஜும்ஆத் தொழுகை

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 876 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர். என அபூ …

Read More »

4.உளூச் செய்வது

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 132 ‘மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். ‘அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்” என அலீ(ரலி) அறிவித்தார். பாகம் 1, அத்தியாயம் 4, எண் 133 ஒருவர் …

Read More »

நபியைக் கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் வஸீலா தேடினார்களா?

நபி (ஸல்) அவர்களைக் கொண்டு ஷபாஅத் தேடுதல் அன்னார் வாழ்ந்திருந்த காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களைக் கொண்டு பிரார்த்தித்தலும், சத்தியம் செய்து கேட்டலும் அவர்கள் இறந்ததற்கப்பால் அனுமதிக்கப் படாதது போன்று நபியவர்கள் மறைந்திருக்கும் போதும், அவர்கள் முன்னிலையில் வைத்தும் இப்படிச் செய்யப்பட மாட்டாது. அன்றி இது விஷயத்தில் நபிமார்களைப் போன்றுதான் மற்றவர்களும். இவர்களைக் கொண்டெல்லாம் வஸீலா தேடுவதை நபித்தோழர்களும், தாபியீன்களும்வழக்கமாக்கிக் கொள்ளவில்லை.

Read More »

சன்மார்க்கம்!

மனிதர்கள் எவற்றைச் செய்ய வேண்டுமென்று நபியவர்கள் பணித்திருக்கிறார்களோ அவற்றைப் புரிவதால் சன்மார்க்கத்தை அடைய முடிகிறது நபியவர்கள் செய்ய வேண்டாமென்று எவற்றைத் தடுத்தார்களோ அவற்றைத் தவிர்ந்து நடக்க வேண்டும். அவர்கள் கூறிய சொற்களுக்கொப்ப செயல்பட்டு அச்சொற்களை நம்வாழ்வில் மெய்பித்துக் காட்ட வேண்டும். அப்படியானால் நிச்சயமாக நாம் சன்மார்க்கத்தை அடையலாம். அல்லாஹ்வின்பால் சென்றடைய இதைக் காட்டிலும் நேர்மையான ஒருவழியே இல்லை. இறைவனை நெருங்கிய நல்மக்கள் இப்பாதையைப் பின்பற்றினர். இதனால் அவர்கள் வெற்றியடைந்து ஜெயசீலர்களாகவும் …

Read More »