Featured Posts
Home » Tag Archives: மார்க்கம் (page 2)

Tag Archives: மார்க்கம்

கப்றுகளில் பள்ளி கட்டலாமா?

கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள்.

Read More »

இறைவன் அனுமதித்தவை

எதை அல்லாஹ்வும், அவன் ரஸூலும் விலக்கினார்களோ அது ஹராம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அனுமதித்தவை அனைத்தும் ஹலாலானவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் இஸ்லாம் மார்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் அல்லாஹ், ரஸூலை நேசித்து, வழிபட்டு அவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். அவர்கள் கொடுத்தவற்றைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதை திருமறையும் விளக்குகிறது: “அவர்கள் (மெய்யாகவே) விசுவாசிகளாக இருந்தால் அவர்களைத் திருப்திப் படுவதற்கு அல்லாஹ்வும், ரஸூலும் மிகவும் …

Read More »

ஒரே ஸஹாபியின் கூற்று சான்றாகுமா?

ஒரு ஸஹாபியின் குறிப்பிட்ட தனிமையான ஒரு அபிப்பிராயத்தை மார்க்க விதிகளுக்குச் சான்றாக எடுக்கப்படுமா இல்லையா என்பதில் அறிஞர் சிலர் அபிப்பிராய பேதங்களைக் கூறியுள்ளனர். ஸஹாபாக்களில் ஒருவரின் கருத்து குர்ஆன், ஹதீஸ் நேருரைகளுக்கு (நஸ்ஸுக்கு) மாறாக இல்லையென்றால் அது ஆதாரமாகக் கொள்ளப்படும். ஒருவரின் அபிப்பிராயத்தை அனைத்து ஸஹாபாக்களும் புறக்கணிக்காமல் இருக்கின்ற போதும் அது சான்றுடையதாக மதிக்கப்படும். இதற்கு ‘இஜ்மாவுன் இக்ராரிய்யுன்’என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் தவறுதலான அபிப்பிராயம் கூறப்படுமானால் மற்ற ஸஹாபிகள் அதனை …

Read More »

கப்றும் திருவிழாக்களும்

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்) தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

Read More »

இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் ஒன்றே!

தொன்று தொட்டு இன்று வரை அனைத்து நபிமார்களும் போதித்து வந்த ஒரேவழி நாம் விளக்கிக் காட்டிய இதே இஸ்லாம் ஒன்றே. இதுவே நேர்மையான வழி. இதுவே உண்மையான இஸ்லாமிய வழி. நேர்மையில்லாச் செய்கைகளை இஸ்லாமியச் செய்கைகள் எனக்கருதி எவர் செயல்பட்டாலும் அவை இஸ்லாத்திற்குப் புறம்பான செய்கைகள் என்றே கருதப்படும். இந்த உண்மையை விளக்குவதற்காக இறைவன்: “இஸ்லாத்தைத் தவிர வேறொரு மார்க்கத்தை யாரும் விரும்பினால் நிச்சயமாக அவனிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. …

Read More »

கஃபா மனிதனைத் தாவஃப் செய்கிறதா?

புனித மக்கமாநகரில் இருக்கின்ற ஆதி இறையில்லமான கஃபத்துல்லாஹ் அப்படியே எழுந்து வந்து தன்னை (தவாஃப்) சுற்றுவது போல சில காட்சிகள், மாபெரும் அர்ஷும், அதன் மீது பெரியதொரு உருவமும் இருப்பது போலக் காணும் இன்னொரு காட்சி, யார் யாரோ வானத்தில் பறந்து செல்கிறார்கள், சிலர் அணிவகுத்து வானத்திலிருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர், இத்தகைய இன்னுமொரு காட்சி இத்தகைய காட்சிகளைச் சிலர் காணுகின்றனர்.

Read More »