Featured Posts
Home » Tag Archives: அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்

Tag Archives: அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்

குடும்பப் பிரச்சினைகளுக்கு காட்டும் தீர்வு | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-38 [சூறா அந்நிஸா–15]

“பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதி யுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) …

Read More »

மனிதனின் பலவீனம் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-36 [சூறா அந்நிஸா–13]

மனிதனின் பலவீனம் يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا “அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) இலகுபடுத்தவே விரும்புகின்றான். மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.” (4:28) அடிமைப் பெண்களைத் திருணம் செய்ய அனுமதித்த பின்னர் அல்லாஹ் இலகுபடுத்த விரும்புகின்றான் என்பது கூறப்படுகின்றது. அத்துடன் மனிதன் பலவீனமானவனாகவும் படைக்கப் பட்டுள்ளான் என்றும் கூறப்படுகின்றது. இங்கே மனித பலவீனமாகக் கூறப்படுவது எது என்பது குறித்து அறிஞர்கள் விபரிக்கின்ற போது, பெண்கள் விடயத்தில் ஆண்களும் …

Read More »

ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-35 [சூறா அந்நிஸா–12]

ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ ا تَيْن بِفَاحِشَة فَعَلَيْهِن نِصْف مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ‌ ؕ ‘அவர்கள் திருமணம் முடித்த பின்னர் மானக்கேடான செயலைச் செய்து விட்டால், சுதந்திரமான கன்னிப் பெண்களுக்கு வழங்கும் தண்டனையில் அரைவாசியே அவர்களுக்குரிய தண்டனையாகும்.’ (4:25) மேற்படி வசனத்தை மொழிபெயர்ப்புச் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியில் இலங்கையில் பெரிய கொள்கைக் குழப்பமே ஏற்பட்டது எனலாம். இந்த அத்தியாயத்தின் 24, 25 ஆம் …

Read More »