Featured Posts
Home » Tag Archives: சத்தியம் செய்தல்

Tag Archives: சத்தியம் செய்தல்

குர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- நாம் சொல்லக் கூடிய செய்திகளை உண்மைப் படுத்த வேண்டும் என்றால் அந்த செய்தி நம்பிக்கையானவர் சொல்லியிருக்க வேண்டும். சந்தேகமான செய்தி, அல்லது சந்தேகத்திற்கு இடமான செய்தி என்றால், அதை யாராவது உறுதிப் படுத்த வேண்டும். அப்படி யாரும் இல்லாவிட்டால் சத்தியம் செய்து அதை உறுதிப் படுத்த வேண்டும். ஒரு முஸ்லிம் எப்படி சத்தியம் செய்ய வேண்டும்.? எதைக் கொண்டு சத்திம் செய்ய …

Read More »

பழிவாங்குதல் (இழப்புக்கு).

1090. என் தந்தையின் சகோதரி – ருபய்யிஉ பின்த் நள்ர் (ரலி) ஓர் அன்சாரி இளம் பெண்ணின் முன் பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தார் பழிவாங்கலைக் கோரி நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களும் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர் (ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறு நடக்காது; ருபய்யிஉவின் பல் உடைக்கப்படாது, இறைத்தூதர் அவர்களே!” என்றார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) …

Read More »

அல்கஸாமா(கொலை வழக்கில் சாட்சி கிட்டாதபோது குற்றஞ்சாட்டப் பட்ட தரப்பிலிருந்து 50பேர் சத்தியம் செய்தல்.)

1085. அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் (பேரீச்சம் பழம் கொள்முதல் செய்வதற்காகச் சென்ற தம் தோழர்களைத் தேடி) கைபருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பேரிச்சந் தோப்புக்குள் பிரிந்துவிட்டனர். பின்னர் அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். எனவே, (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா இப்னு மஸ்ஊத் (ரலி) முஹய்யிஸா இப்னு மஸ்ஊத் (ரலி) …

Read More »

இஸ்லாத்தை தழுவும் முன்பு செய்த நேர்ச்சையை நிறைவேற்று

1075. அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை தழுவும் முன்பு), ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், உமர் (ரலி) ஹுனைன் போரில் பிடிபட்ட போர்க் கைதிகளிலிருந்து இரண்டு அடிமைப் பெண்களைப் பெற்றிருந்தார்கள். அவ்விருவரையும் மக்காவிலுள்ள ஒரு வீட்டில் தங்க …

Read More »

குடும்பத்தார்க்கு எதிராக தீங்காக சத்தியம் செய்யாதே.

1074. நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது பெரும் பாவமாகும். (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வது சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6624-6625 அபூஹூரைரா (ரலி).

Read More »

இன்ஷா அல்லாஹ் கூறுதல்.

1072. (ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், ‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) ‘இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால்” என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்” என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ்’ …

Read More »

செய்த சத்தியத்தை விட சிறந்ததைக் கண்டால்…

1069. என் நண்பர்கள் என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர் – உஸ்ராப் போரே தபூக் போராகும் – அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு …

Read More »

லாத் உஸ்ஸா மீது சத்தியம் செய்தவர்…

1068. யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்” என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 4860 அபூஹுரைரா (ரலி).

Read More »

அல்லாஹ் தவிர பிறவற்றின் மீது சத்தியம் செய்யத் தடை.

1066. (என் தந்தை) உமர் (ரலி) கூறினார்: என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்” என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை. புஹாரி :6647 இப்னு உமர் (ரலி). 1067. …

Read More »