Featured Posts
Home » Tag Archives: விபசாரம்

Tag Archives: விபசாரம்

87. இழப்பீடுகள்

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6861 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒருவர் (நபியவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்’ என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘பிறகு எது (மிகப் பெரும் பாவம்)?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன்னுடைய உணவைப் …

Read More »

86. குற்றவியல் தண்டனைகள்

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6675 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவதும், கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6676 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக திட்டமிட்டு, (பொய்ச்) சத்தியம் செய்கிறவரின் மீது …

Read More »

85. பாகப் பிரிவினைச் சட்டங்கள்

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6623 அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை’ …

Read More »

84. சத்திய (முறிவுக்கான) பரிகாரங்கள்

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6608 இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)’ என்றார்கள். பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6609 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. …

Read More »

74. குடிபானங்கள்

பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5575 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்து விடுவான் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5576 அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் (ஒன்றில்) …

Read More »

68. மணவிலக்கு (தலாக்)

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255 அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து …

Read More »

65 (1). திருக்குர்ஆன் விளக்கவுரை

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4474 அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே நான் (தொழுது முடித்தபின்) அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை …

Read More »

55.மரண சாசனங்கள்

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2738 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களும் இவ்வாறே அறிவித்தார்கள். பாகம் 3, அத்தியாயம் 55, எண் …

Read More »

54.நிபந்தனைகள்

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2711-2712 மர்வான் இப்னி ஹகம் அவர்களும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது: சுஹைல் இப்னு அம்ர்(ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், ‘எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால் – அவர் உம்முடைய மார்க்கத்திலிருப்பவராயினும் சரி – அவரைத் திருப்பியனுப்பி, எங்களுக்கும் அவருக்குமிடையே நீர் ஒரு தடையாக இராமல் …

Read More »

46.அநீதிகளும் அபகரித்தலும்

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2440 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது …

Read More »