Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் (page 30)

அல்குர்ஆன்

அல்குர்ஆன் விளக்கம் – இப்றாஹீம் நபியின் விவாதம்

‘தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்த தற்காக (கர்வம் கொண்டு) இப்றாஹீமிடம் அவரது இரட்சகன் விடயத்தில் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? இப்றாஹீம், ‘எனது இரட்சகனே உயிர்ப்பிப்பவனும் மரணிக்கச் செய்பவனுமாவான்’ என்று கூறியபோது ‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கச் செய்வேன்’ என்றான். (அதற்கு) இப்றாஹீம் ‘அப்படியானால் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கின்றான். ஆகவே, அதனை நீ மேற்கிலிருந்து உதிக்கச்செய் (பார்க்கலாம்) என்றார். உடனே நிராகரித்த அவன் வாயடைத்துப் போனான். …

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை

‘இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) ‘தாகூத்’தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ‘ (2:256) ‘லா இக்ராஹ பித்தீன்’ மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என இந்த வசனம் கூறுகின்றது. இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என யாரும் நிர்ப்பந்தம் செய்யக் …

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – அல்குர்ஆனின் மகத்துவமிக்க ஆயத்து

‘(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறு தூக்கமோ, பெரும் தூக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப் பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர, அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது ‘குர்ஸி’ …

Read More »

குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – இறைத்தூதர்களுக்கு மத்தியில் பாரபட்சம்

‘இத்தூதர்களில் சிலரைவிட சிலரை நாம் சிறப்பாக்கி வைத்திருக்கின்றோம். அவர்களில் (நேரடியாக) அல்லாஹ் பேசியவர்களுமுள்ளனர். மேலும் அவர்களில் சிலரின் பதவிகளை அவன் உயர்த்தினான். மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளை வழங்கி, ‘ரூஹூல் குத்ஸ்’ (எனும் ஜிப்ரீல்) மூலம் அவரை வலுவூட்டினோம். (தூதர்களான) இவர்களுக்குப் பின் வந்த (சமூகத்த)வர்களுக்கு தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் (அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என) அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் தமக்குள் சண்டை செய்திருக்க …

Read More »

அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – தாலூத்தும் ஜாலூத்தும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ‘மூஸாவுக்குப் பின் தங்கள் நபியிடம், ‘அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிட எமக்கு ஒரு மன்னரை நியமியுங்கள்’ எனக் கேட்ட பனூஇஸ்ராஈல்களின் பிரமுகர்களை (நபியே!) நீர் அறியவில்லையா? அ(தற்க)வர், ‘உங்கள் மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போராடாது இருந்து விடுவீர்களோ?’ எனக் கேட்க, ‘நாம் எமது இல்லங்களையும் எமது குழந்தைகளையும் விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் போது, அல்லாஹ்வின் பாதையில் …

Read More »

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்: ஐவேளைத் தொழுகை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – “தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு “(முற்றிலும்) அடிபணிந்தவர்களாக நில்லுங்கள்”” (அல்குர்ஆன் 2:238) இஸ்லாம் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கியுள்ளது. இது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரியும். இருப்பினும் அஹ்லுல் குர்ஆன் என்ற பெயரில் இயங்கும் ஒரு குழுவினர் உள்ளனர். அவர்கள் ஹதீஸ்களை முழுமையாக மறுப்பவர்கள். தம்மைக் குர்ஆன்வாதிகள் என அழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் மூன்று …

Read More »

(குர்ஆனிய்யத்) மரணித்த பின் உயிர் கொடுத்து எழுப்பப்படுதல்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மறுமை வாழ்வு உண்டு: மரணித்த அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவர் என்பது இறைத்தூதர்களின் போதனையில் அடிப்படையானதாகும். இறைத் தூதர்கள் மரணத்தின் பின் வாழ்வு உண்டு என போதித்த போது அக்காலத்தில் வாழ்ந்த பகுத்தறிவாளர்கள் (?) அதை மறுத்தனர். மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாக மாறியதன் பின் அவனை உயிர் கொடுத்து மீண்டும் எழுப்ப முடியுமா? இது …

Read More »

மனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘தமது மனைவியருடன் உறவு கொள்வதில்லை என சத்தியம் செய்வோருக்கு நான்கு மாதங்கள் அவகாசமுண்டு. (அதற்குள்) அவர்கள் திரும்பிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’ ‘அவர்கள் விவாகரத்து செய்வதையே தீர்மானமாகக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்ளூ நன்கறிந்தவன்.’ (2:226-227) மனைவி மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லது மனைவியைத் திருத்துவதற்காக உன்னைத் தீண்ட மாட்டேன் என …

Read More »

சத்தியத்தை சாட்டாக்காதீர்கள் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்களது சத்தியங்களின் மூலம் அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிந்தவன்.’ (2:224) நல்ல விடயங்களைச் செய்யமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் இருப்பது கூடாது. உதாரணமாக, அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்தப் பள்ளிக்கு எந்த உதவியும் நான் …

Read More »

மூட நம்பிக்கை ஒழிப்பு (அல்குர்ஆன் விளக்கம்)

‘உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள். உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள். இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக!’ (2:223) இஸ்லாம் எல்லா வகையான மூடநம்பிக்கைகளையும் ஒழித்த மார்க்கமாகும். உடலுறவு தொடர்பில் யூதர்களிடம் ஒரு மூடநம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் தாக்கம் மதீனத்து முஸ்லிம்களிடம் இருந்தது. …

Read More »