Featured Posts
Home » பொதுவானவை » எச்சரிக்கை (page 6)

எச்சரிக்கை

கோள் சொல்லுதல்

மக்களிடையே குழப்பம் விளைவிப்பதற்காக ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் சொல்வதே கோள் ஆகும். கோள் சொல்லித் திரிவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இது மக்களிடையே விரோதத்தையும் குரோதத்தையும் மூட்டி விடுவதற்கும் அவர்களுக்கிடையே உள்ள நல்லுறவைத் துண்டிப்பதற்கும் மிகப் பெரிய காரணமாகும். இவ்வாறு செய்பவனை அல்லாஹ் இழித்துரைத்துள்ளான்: “அதிகமாக சத்தியம் செய்கின்ற அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர். அவன் குறைகூறி திரிபவனாகவும் கோள் சொல்லித் திரிபவனாகவும் இருக்கின்றான்” (68:10,11) ‘கோள்ச் …

Read More »

புறம் பேசுதல்

முஸ்லிம்களைப் புறம் பேசுவதும் அவர்களின் கண்ணியத்திற்கும் மான மரியாதைக்கும் இழுக்காகப் பேசுவதும் பெரும்பாலான சபைகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக ஆகிவிட்டது. புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அதை விட்டும் தன் அடியார்களை விலகியிருக்கச் செய்திருக்கிறான். மனித உள்ளங்கள் அருவருப்பாகக் கருதுகின்ற விதத்தில் அதற்கு ஓர் உவமானம் கூறியுள்ளான்: “உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா? …

Read More »

இசையும் இசைக் கருவிகளும்

மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காகவெனில் அவர்கள் எவ்வித அறிவுமின்றி (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம்செய்வதற்காகவும் தான்” (31:6). இவ்வசனத்திலுள்ள மனமயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்பதன் கருத்து பாடல்களே என இப்னு மஸ்வூத் (ரலி)அவர்கள் கூறியுள்ளார்கள். ‘விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் என்னுடைய சமுதாயத்தில் நிச்சயம் …

Read More »

பொய் சாட்சி சொல்லுதல்

அல்லாஹ் கூறுகிறான்: “எனவே விக்கிரகங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்தும் விலகியிருங்கள். அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காது, அவனுக்கே ஒருமனப்பட்டவர்களாய்த் திகழுங்கள்” (22:30,31) அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது …

Read More »

தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள்

தற்காலத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்களை விற்பனை செய்யும் கடைகளில் எந்தக் கடையிலும் தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் இல்லாமலில்லை. அவ்வாறே செல்வந்தர்களுடைய வீடுகளும், பல ஹோட்டல்களும், இன்னும் சொல்வதானால் இந்த தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிலர், சிலருக்கு வழங்கும் உயர்ந்த அன்பளிப்புப் பொருள்களாகவும் ஆகி விட்டன. இன்னும் சிலர் தங்களுடைய வீடுகளில் அவற்றை வைத்துக் கொள்வதில்லை. ஆயினும் மற்றவர்களுடைய வீடுகளிலும் …

Read More »

ஒரு துளியேனும் மது அருந்துதல்

அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்” (5:90) மதுவைத் தவிர்ந்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருப்பது அது ஹராம் என்பதற்கு பலமான ஆதாரமாகும். மதுவை அடுத்து அல்லாஹ் பலிபீடங்களை கூறியுள்ளான். அவை காஃபிர்களுடைய கடவுள்களான விக்கிரகங்களாகும். (விக்கிரகங்கள் எந்த அளவுக்கு ஹராமோ அதுபோல மதுவும் ஹராமாகும் என்பதை இது காட்டுகிறது) இனி, …

Read More »

ஹராமானவற்றை உண்ணுதல்

இறையச்சம் இல்லாதவன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதிக்கிறோம் அதை எவ்வழியில் செலவு செய்கிறோம் என்பதைப் பொருட்படுத்த மாட்டான். மாறாக, அவனுடைய அக்கரை தன் செல்வத்தை அதிகப்படுத்துவதிலேயே இருக்கும். அது திருடுதல், லஞ்சம் வாங்குதல், பிறருடைய பொருளை அபகரித்தல், மோசடி செய்தல், ஹராமான வியாபாரம், வட்டி கொடுக்கல் வாங்கல், அநாதையின் சொத்தை அபகரித்தல் ஆகியவற்றின் மூலமாகவோ அல்லது ஜோதிடம், விபச்சாரம், இசை போன்ற ஹராமான காரியங்களின் பேரில் கிடைக்கக் கூடிய கூலியின் மூலமாகவோ …

Read More »

கடன்

திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமில்லாமல் கடன் கேட்பது மனித உரிமைகளுக்கு அல்லாஹ்விடம் அதிக முக்கியத்துவம் உண்டு. ஒரு மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறினால் தவ்பா செய்வதம் மூலம் பரிகாரம் பெறலாம். ஆனால் மனித உரிமைகளில் தவறிழைத்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அவற்றை நிறைவேற்றாத வரை தப்பிக்க முடியாது. அந்நாளில் விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. மாறாக, நன்மை, தீமைகளைக் கொண்டே தீர்க்கப்படும். …

Read More »

தேவையின்றி யாசகம் கேட்பது

‘ஒருவன் தனக்குப் போதுமான அளவு வசதி இருந்தும் யாசகம் கேட்டால் அவன் நரகத்தின் கங்குகளையே அதிகப்படுத்திக் கொள்கிறான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யாசகம் கேட்காத அளவுக்கு போதுமான வசதி என்றால் என்ன?’ எனத் தோழர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஒரு பகல், ஓர் இரவு உண்பதற்குப் போதுமான அளவு’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹன்ழலா (ரலி), நூல்: அபூதாவூத்.‘தனக்கு போதுமான அளவு வசதி …

Read More »

பிள்ளைகளிடையே பாரபட்சம்

அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளுக்கிடையே பாரபட்சம் சிலர் தங்களுடைய பிள்ளைகளில் சிலரை விடுத்து சிலருக்கு மட்டும் அன்பளிப்புகள், வெகுமதிகள் வழங்குகின்றனர். ஷரீஅத் ரீதியிலான தக்க காரணம் இல்லையெனில், சரியான கூற்றின் பிரகாரம் இவ்வாறு செய்வது ஹராமாகும். உதாரணமாக தம் பிள்ளைகளில் ஒருவனுக்கு மற்ற பிள்ளைகளூக்கு ஏற்படாத ஒரு தேவை ஏற்பட்டு விட்டதெனில் – உதாரணமாக அவன் நோயாளியாக இருக்கிறான், அல்லது அவனுக்கு கடன் இருக்கிறது, அல்லது திருக்குர்ஆனை மனனம் செய்ததற்காக அவனுக்கு …

Read More »