Featured Posts
Home » சட்டங்கள் (page 59)

சட்டங்கள்

நோன்பின் தத்துவங்கள்!

எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவனே இரவையும் பகலையும் இயக்கக் கூடியவன். மாதங்களையும் வருடங்களையும் சுழன்று வரச் செய்பவன். அவன் அரசன். தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன். மகத்துவத்திலும் நீடித்திருப்பதிலும் தனித்துவம் உடையவன். குறைபாடுகளை விட்டும் மனிதர்களுக்கு ஒப்பாகுதல் என்பதை விட்டும் தூய்மையானவன்! நரம்புகள் மற்றும் எலும்புகளினுள் இருப்பதென்ன என்பதையும் அவன் பார்க்கிறான். மெல்லிய குரல்களையும் நுண்ணிய பேச்சையும் கேட்கிறான்! கருணை பொழியும் இறைவன். அதிக அளவு உபகாரம் செய்பவன். ஆற்றல் …

Read More »

ரமளானைப் புறக்கணித்தல்.

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்லாத்தைப் பின்பற்றுவது மற்றும் தீனின்** அடிப்படைகள் என்பது மூன்று விதமான அடிப்படைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இவைகளில் ஏதாவதொன்றையேனும் யாராவது புறக்கணிப்பார்களென்றால் அவர், இஸ்லாத்தைப் புறக்கணித்தவராவார், அவருடைய இரத்தம் பாதுகாப்பற்றதுமாகும். அந்த அடிப்படைகளாவன: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி பகர்வது, தொழுகையை முறையாகப் பேணிவருவது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது ஆகிய மூன்று அடிப்படைகளுமாகும். அபு யஃலா. **தீன் என்ற …

Read More »

இபாதத் ஏற்படுத்தும் உளத்தூய்மை (தஸ்கியா)

ரமளான் மாத இபாதத்களை தொடர்புபடுத்தி ‘இபாதத் ஏற்படுத்தும் உளத்தூய்மை (தஸ்கியா)’ என்ற தலைப்பின் கீழ் ரமளான் தொடர்பான பல்வேறு செய்திகளை தொகுத்து வழங்குகின்றார் ஆசிரியர் முஜாஹித் இப்னு ரஸீன். 1. ரமளான் தொடர்பான தவறான செய்திகள்: • ரமளான் என்று சொல்லாமல் ரமளான் மாதம் என்று தான் சொல்லவேண்டும்? இது சரியா? இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதா? • ரமளான் ஏழைகளின் பசியை உணர்கின்ற மாதமா? இந்த செய்தி சரியானதா? • …

Read More »

நோன்பை முறித்ததற்காக மீண்டும் நோன்பு நோற்றலும், அதற்கான பரிகாரமும்.

நோன்பை முறிக்கக் கூடிய காரணிகளாக, திருமறைக் குர்ஆனில் மூன்று காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன : உண்ணுதல், பருகுதல் மற்றும் உடலுறவு கொள்ளுதல் ஆகியவைகளாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் : நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு …

Read More »

பாவங்களுக்குப் பரிகாரமாகும் நோன்பு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். நோன்பு பாவங்களிலிருந்தும், நரக வேதனையிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகத் திகழ்கின்றது. நாம் நோற்கும் நோன்பின் மூலம் எமது பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பாவங்களை அழிக்கும் விஷேட அம்சம் நோன்பில் உள்ளடங்கியிருப்ப தால்தான் பல்வேறுபட்ட குற்றங்களுக்குப் பரிகாரமாக நோன்பு பரிந்துரைக்கப்படுகின்றது. இந்த வகையில் நோன்பைக் குற்றப் பரிகாரமாகப் பரிந்துரைக்கும் சில குர்ஆனின் சட்டங்களை உங்கள் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – குனூத் (தொடர்..)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சுபஹ் தொழுகையில் வழமையாக ஓதப்படும் குனூத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே ராஜிஹான (வலுவான) கருத்தாகும். பிரச்சினையான சந்தர்ப்பங்களில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஐவேளைத் தொழுகையிலும் குனூதுன்னவாஸில் ஓதிக் கொள்ளலாம். இதுவே சரியான முறையாகும். இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் தமது ‘ஸாதுல் மஆத்’ எனும் நூலில் இது குறித்து கூறும் கருத்து கவனிக்கத் தக்கதாகும். அபூஹுரைரா(வ) …

Read More »

ரமளான் மாதத்தில் நன்மைகளை அதிகம் பெற்றுத் தரத் கூடிய செயல்கள்!

ரமளானில் செய்யப்படும் அமல்களுக்கான கூலிகள் அபரிதமாகக் கணக்கிடப்பட்டு அல்லாஹ்வால் கொடுக்கப்படுகின்றன : அத்தகைய நற்செயல்களாவன : 1. திருமறையை ஓதுதல் : மகத்துவமிக்கவனான அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ – தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ – நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் குனூத்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குனூத் ஓதுவதை சிலர் தொழுகையில் செய்ய வேண்டியவற்றில் ஒன்றாகவும் மற்றும் சிலர் செய்யக் கூடாதவற்றில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளனர். சுபஹுடைய குனூத் விடயத்தில் நபித்தோழர்கள் காலத்திலிருந்தே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இருப்பினும் சுபஹுடைய குனூத் விடயத்தில் சிலர் தீவிரப் போக்கைக் கைக்கொண்டு வருகின்றனர். சுபஹுடைய குனூத் ஸுன்னா எனக் கருதுபவர்கள் குனூத் ஓதாத இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் …

Read More »

ரமலானின் சிறப்புக்கள்!

நோன்பு என்பது தொழுகை என்ற கடமையை விட வேறுபட்டதாக இருக்கின்றது, தொழுகை என்பது ஒரு குறிப்பிட்ட செய்முறைகளைக் கொண்டதாகவும், இரவும் பகலும் அதற்கென குறிப்பிடப்பட்டதொரு நேரங்களைக் கொண்டதாகவும் இருக்கின்றது. ஒருவர் நோன்பாளியாக இருக்கும் பொழுது, அந்த நோன்பாளியினுடைய அன்றாடத் தேவைகளான உணவு மற்றும் குடிப்பு ஆகியவற்றை இறைவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அவற்றிலிருந்து அவரை விலக்கி வைத்து, இறைவனுடையநற்கூலியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தத் தவிர வேறெதற்காகவும் அவர் நோன்பு …

Read More »

ரமலான் ஆசிர்வதிக்கப்பட்ட மாதம்!!

ரமளான் என்ற நம்முடைய மரியாதைக்குரிய விருந்தாளி வருடம் ஒரு முறை நம்மை நோக்கி வருகின்றது. இந்த மாதம் தான் இறைவனிடமிருந்து நமக்கு கருணையையும் மற்றும் மன்னிப்பையும் பெற்றுத் தரக் கூடிய மாதமாக இருக்கின்றது. நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த மாதத்தின் வருகையைப் பற்றிய செய்தியை மக்களுக்கு இவ்வாறு அறிவிப்பவர்களாக இருந்தார்கள் : அறிந்து கொள்ளுங்கள்! உங்களை நோக்கி ஒரு மிகப்பெரிய ஆசிர்வதிக்கப்பட்ட மாதம் ஒன்று வந்து  இருக்கின்றது. …

Read More »