Featured Posts
Home » நூல்கள் » வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்-தொடர் » படைத்தவனை ஒப்புக் கொள்ளுதல்.

படைத்தவனை ஒப்புக் கொள்ளுதல்.

குறைஷிகளிலிருந்தும், மற்ற சமூகங்களிலிருந்தும் முஷ்ரிக்குகள் என்று யாரைப்பற்றி திருமறை பிரகடனப்படுத்தியதோ அவர்களும் நபி (ஸல்) அவர்கள் எவர்களை வெட்டிக் கொன்று அவர்களின் செல்வத்தைப் பறித்து அவர்களின் மகளிரை சிறை பிடிக்க வேண்டுமென்றும், அவர்கள் அனைவரும் நரகவாதிகளென்றும் பகிரங்கமாக விளக்கினார்களோ அவர்களும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வானங்கள் பூமிகளைப் படைத்தவன் என்ற உண்மையை மனமாற ஏற்று ஒப்புக் கொண்டிருந்தார்கள்.

இதைப்பற்றி திருமறை “நபியே! வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவன் யார்? என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், அதற்கு அவர்கள் அல்லாஹ்தான் என்று திடமாகக் கூறுவார்கள். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை (புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள்(31:25). “(நபியே! நீர் அவர்களைப் பார்த்து) வானங்கள் பூமியை படைத்து, சூரியன், சந்திரனையும் தன்திட்ட பிரகாரமே நடக்கும்படி அடக்கி வைத்தவன் யார்? என கேட்பீராயின் அல்லாஹ்தான் என நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் ஏக தெய்வக் கொள்கையை விட்டு எங்கு வெருண்டோடுகின்றனர்” (29:61)

“நபியே! பூமியும் அதிலுள்ளவையும் யாருக்குச் சொந்தமானது? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள் எனக் கேளும்! அதற்கவர்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானது எனக் கூறுவார்கள். அவ்வாறாயின் இதனைக் கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெற மாட்டீர்களா? என கேட்பீராக! மேலும் ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் இறைவன் யார்? என கேட்பீராக! அதற்கவர்கள் யாவும் அல்லாஹ்வுக்குரியனவே எனக் கூறுவார்கள். அவ்வாறாயின் நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா? எனக் கூறும். அன்றி சகல பொருட்களின் அதிகாரமும் யார் கையிலிருக்கிறது? யாராலும் இரட்சிக்கப்படாதவனும், எல்லோரையும் இரட்சிக்கக் கூடியவனும் யார்? நீங்கள் அறிந்திருந்தால் சொல்லுங்கள் என கேளும்! அதற்கவர்கள் (சகல அதிகாரமும்) அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறுவார்கள். அப்படியென்றால் நீங்கள் உங்கள் சுயஅறிவை எங்கு இழந்து விட்டீர்களெனக் கூறும். நாம் அவர்களுக்கு சத்தியத்தையே கொடுத்திருந்தோம். இதனை மறுத்துக் கூறும் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே! அல்லாஹ் எந்த சந்ததியையும் எடுத்துக் கொள்ளவுமில்லை. அவனுடன் வேறு நாயனுமில்லை. அப்படியிருப்பின் ஒவ்வொரு இறைவனும் தான் சிருஷ்டித்தவற்றை தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஒருவர் மற்றவர் மீது போரிட்டு மிகைக்க ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் தன்மைகளை விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவனாவான். (23:84-91).

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *