Featured Posts
Home » சட்டங்கள் » தொழுகை » தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் சில முறைமைகள்

தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் சில முறைமைகள்

தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் சில முறைமைகள்
(صيغ التشهد في الصلاة)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.

நாம் நமது தொழுகையில் இரண்டாவது ரக்ஆத்தில் மற்றும் இறுதி ரக்ஆத்தில் ஒரு அவர்வில் அமர்வதை “அத்தஹிய்யாத்” அல்லது “அத்தஷஹ்ஹுத்” அமர்வு என்று அழைப்போம். எனவே, அதிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியதாக வரக்கூடிய பல அறிவிப்புக்கள் பலவிதமாக வருகின்றன. ஆகவே, அப்படி அவா்கள் ஓதியதில் ஆதாரபூர்வமான சில ஓதல்கள் சிலதைப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்…

முதலாவது :

عن ابن مسعود رضي الله عنه قال: علمني رسول الله صلى الله عليه وسلم التشهد، وكفي بين كفيه، كما يعلمني السورة من القرآن: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. -أخرجه البخاري (6265) ومسلم وابن أبي شيبة-

இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில், குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்ஹுதை எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள். (அது பின்வருமாறு)
“அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தையிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபிய்யூ வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மன் அப்துஹு வரஸுலுஹு”
பொருள் : அனைத்து காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபீட்சமும் நிலவட்டுமாக! எங்களின் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி நிலவட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன். (ஆதாரம் : புஹாரி-6265)

இரண்டாவது :

عن ابن عباس رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا التشهد كما يعلمنا السورة من القرآن، فكان يقول: التَّحِيَّاتُ المباركات الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لله، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُوْلُ الله. – أخرج مسلم والنسائي-
وفي رواية عَبْدُهُ وَرَسُوْلُهُ. انتهى.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனின் அத்தியாயம் ஒன்றைக் கற்றுத் தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எங்களுக்கு (பின்வருமாறு) கற்றுத்தந்தார்கள்
“அத்தஹிய்யாதுல் முபாரகாதுஸ் ஸலவாதுத் தையிபாது லில்லாஹி, அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபிய்யூ வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மர் ரஸுலுல்லாஹி”
இன்னொரு அறிவிப்பின் (இறுதியில்) : “அப்துஹு வரஸுலுஹு” என்று வந்துள்ளது.
பொருள் : சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் சுபீட்சங்களும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபீட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழிகின்றேன். (ஆதாரம் : முஸ்லிம்-677)

மூன்றாவது :

عن أبي موسى الأشعري قال: قال رسول الله صلى الله عليه وسلم: “… وإذا كان عند القعدة فليكن من أول قول أحدكم: التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لله، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا، وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. – أخرج مسلم وأبو داود وابن ماجه-

அபூமூஸா அல்-அஷ்அரி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் நீண்டதொரு அறிவிப்பில்…
றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மேலும், அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்தால் உங்களுடைய முதல் சொல் இதுவாக இருக்கட்டும்
“அத்தஹிய்யாது அத்தையிபாது அஸ்ஸலவாது லில்லாஹி, அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபிய்யூ வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா, வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு”
பொருள் : சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் பாராட்டுகளும் வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபீட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதி மொழிகிறேன். மேலும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன். (ஆதாரம் : முஸ்லிம்-679)

நான்காவது :

عن ابن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال في التشهد: ” التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ. – قال ابن عمر: زدت فيها وَبَرَكَاتُهُ – السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ – قال ابن عمر: وزدت فيها وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ – وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. -أخرج أبو داود (971) والدارقطني- وصححه الألباني

இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஷஹ்ஹுதில் (பின்வருமாறு) கூறுவார்கள்
“அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தையிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபிய்யூ வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு” (ஆதாரம் : அபூதாவூத், அத்தாரகுத்னி)

ஐந்தாவது :

تشهد عمر قاله على المنبر يعلم الناس : (التَّحِيَّاتُ لِلَّهِ ، الزَّاكِيَاتُ لِلَّهِ ، الطَّيِّبَاتُ لِلَّهِ ، الصَّلَوَاتُ لِلَّهِ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ) رواه مالك (204) وصححه الألباني .

உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மின்பரின் மேலே இருந்து மனிதர்களுக்கு தஷஹ்ஹுதை கற்பித்தார்கள்
“அத்தஹிய்யாது லில்லாஹி, அzஸ்zஸாகியாது லில்லாஹி, அத்தையிபாது லில்லாஹி, அஸ்ஸலவாது லில்லாஹி, அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபிய்யூ வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு” (ஆதாரம் : முவத்தா மாலிக்)

ஆறாவது :

عن القاسم بن محمد: كانت عائشة تعلمنا التشهد وتشير بيدها تقول: التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ الزَّاكِيَاتُ لِلَّهِ ، السَّلَامُ عَلَى النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ -أخرجه ابن أبي شيبه والبيهقي بسند صحيح-

அல்காசிம் பின் முஹம்மத் கூறினார் ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது கையால் சுட்டிக்காட்டியவராக தஷஹ்ஹுதை எங்களுக்கு கற்பித்துத்தந்தார்கள்
“அத்தஹிய்யாது அத்தையிபாது அஸ்ஸலவது அzஸ்zஸாகியாது லில்லாஹி, அஸ்ஸலாமு அலன் நபிய்யூ வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு” (ஆதாரம் : இப்னு அபீஷைபா, அல்பைஹகீ)

குறிப்பு: எங்களில் ஒருவர் தொழுகையில் இந்த அத்தஹிய்யாத்களில் எவையாவது ஒன்றை தெரிவுசெய்து ஓதலாம். ஏனெனில், இவைகள் அனைத்தும் நபியவர்கள் கற்பித்த அத்தஹிய்யாத் வகைகளாகும். அதிலும், இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக்கூடிய அத்தஹிய்யாத் (அதாவது முதலாவது வகை) மிகவும் ஏற்றமானது. ஏனெனில், அது அனைத்து அத்தஹிய்யாத்துக்களையும் ஒன்றினைத்த பூரணமான ஒன்றாக விளங்குகிறது.

(இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் அத்தஹிய்யாதின் பிற்பாடு ஓதப்படும் “அஸ்ஸலாதுல் இப்ராஹீமாவை”ப் பற்றிப்பார்ப்போம்.)

யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.

தொகுப்பு : றஸீன் அக்பா் (மதனி)
அழைப்பாளன் : தபூக் அழைப்பு நிலையம் – சவுதி அரேபியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *