Featured Posts
Home » பொதுவானவை » குஜராத்: மறைக்கப்படாத இறுதித்தீர்வுகள்

குஜராத்: மறைக்கப்படாத இறுதித்தீர்வுகள்

The Final Solution – குஜராத் படுகொலை: ஆவணப்படம்

நிறையப் படித்துவிட்டோம். குஜராத்தில் இந்து மதவெறி சங்கப் பரிவாரக் குரங்குகள் நடத்திய கொடூரத்தை. எழுத்துக்களாய் நீங்கள் படிக்கும் போது உங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளால் அல்லது வார்த்தைகள் தந்த உணர்ச்சிகளால் தாக்குண்டு, வெகுண்டெழுந்த உங்களது கோபம், இப்போது ஒருவேளை மட்டுப்பட்டிருக்கலாம். இந்துமத வெறியர்களின் கொலைவெறித் தாண்டவத்திற்கு உதாரணமாகக் குஜராத்தைச் சொல்லிச் சொல்லி உங்களையறியாமலேயே சலிப்படைந்து சடங்குத்தனமாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்து கொண்டிருக்கலாம்.

உணர்ச்சி வசப்பட வைக்கும் எழுத்துக்களின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவு குறித்த வரையறை எதுவுமில்லைதான். ஆனால், அது நிச்சயமாகக் காட்சி ஊடகத்தின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவை விடக் குறைவுதான்.

சங்கப் பரிவாரக் குரங்கு ஒன்று இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு வெறியோடு அலறும் புகைப்படத்தையும், இசுலாமியர் ஒருவர் இரு கைகளையும் கூப்பி வணங்கி கண்ணில் நீர் மல்க, மரண பீதியுடன் நிற்கும் புகைப்படத்தையும், ஏற்கெனவே பத்திரிக்கைகளில் பார்த்திருந்ததால், குஜராத் படுகொலை குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தபோது, ஆரம்பத்தில் “ஒரே அழுகுரல், எங்கும் புகை, ஆங்காங்கே ஏதேதோ எரிந்து கொண்டிருக்கின்றன, வெட்டிச் சாய்க்கப்பட்ட பிணங்களாக மனிதர்கள், அலறி ஓடுகின்ற மக்கள், துரத்தி வரும் இந்து மதவெறியர்கள்….” — இப்படித்தான் கற்பனை செய்து கொண்டிருந்தேன். ஆனால் படத்தில் அப்படி ஏதுமில்லை. பிஜேபியின் சித்தாந்தம் பாசிசம்தான் என்பதையும், பிஜேபி, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலெல்லாம் பாசிசக் கூட்டம்தான் என்பதையும், மிகத் தெளிவாக, ரத்த சாட்சியங்களாக நம்முன் வைக்கிறது இந்த ஆவணப்படம், நாம் இனிமேல் குஜராத்தை என்றென்றைக்கும் மறந்து விட முடியாதபடி. இப்படத்தின் பெயர்: (ஃபைனல் சொல்யூஷன்) இறுதித் தீர்வு படத்தை எடுத்தவர் ராகேஷ் சர்மா.

இந்து நஞ்சு

படத்தின் துவக்கத்திலேயே, படுகொலையினால் பாதிக்கப்பட்ட, படுகொலைகளை நேரில் பார்த்த முசுலீம் குடும்பத்துச் சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. ஒரு நொடியில் நாம் அதை உணர்ந்து விடுவதால் ஓடிச் சென்று, கள்ளங்கபடமில்லாமல் மலங்க மலங்க விழித்தபடி பேசும் அவனைக் கட்டியணைத்து ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் எனச் சொல்ல வேண்டும் என மனம் துடிக்கிறது. படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது.

பக்தியை, கடவுளை, மதத்தை, மதவெறியை, கலவரம் மூலமாக, படுகொலைகள் மூலமாக, பாலியல் வன்முறை மூலமாக, தேர்தல் வெற்றியாக மாற்ற முடியும் என்பதைப் பாசிஸ்டுகள் நிரூபித்துக் காட்டுகிற விதத்தை தெளிவாக நாம் புரிந்து கொள்ளும்போது, படம் முடியப் போகும் நேரத்தில், மீண்டும் அதே சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. கேள்விகளுக்கு அவன் பதில் சொல்வதைக் கேளுங்கள். இஜாஜ் படித்துக் கொண்டிருப்பது யூ.கே.ஜி.

இஜாஜ்: 1… 2… 3… எனக்கு எல்லா எண்களும் தெரியும். வீடு… பூக்கள் எல்லாம் செய்யத் தெரியும்.

கேள்வி: பெரியவனான பிறகு என்ன ஆவாய்?

இ: சோல்ஜராவேன்! பிறகு அவர்களைச் சுடுவேன்!

கே: யாரை?

இ: இந்துக்களை!

கே: ஏன்?

இ: ஏன்னா, அவர்களும் இதைத்தான் செய்தார்கள்!

கே: நீ ஏன் அவர்களை மோசமானவர்களாக நினைக்கிறாய்?

இ: …..கட்டாயம் அவர்களைக் கொல்வேன்!

கே: ஏன்?

இ: நான் அவர்களைச் சேதப்படுத்துவேன்!

கே: எல்லா இந்துக்களும் மோசமானவர்களா?

இ: அவர்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசினார்கள்!

கே: எந்த மாதிரி?

இ: நான் அந்தக் கெட்ட வார்த்தைகளைப் பேசமாட்டேன்.

கே: நான் ஒரு இந்து. நான் மோசமானவன்னு நெனக்கிறியா?

இ: (யோசித்து) இல்லை.

கே: நீ ஒரு சோல்ஜர். என்னைக் கொல்லணுமல்லவா?

இ: (தலையசைத்து) ஆமா, நா வேற யாரையும் தாக்க மாட்டேன். இந்துக்களை மட்டும்தான் கொல்வேன்.

கே: சரி! நா ஒரு இந்து.

இ: இல்லை. நீங்கள் அவர்களில்லை.

கே: நான் அவர்களைப் போல இல்லையா?

இ: (இல்லையெனும்படித் தலையசைக்கிறான்)

கேள்வி: அப்புறம்?

இஜாஜ்: நீங்கள் ஒரு முசுலீம்.

குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், இசுலாமிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளிடம் என்ன எதிர்விளைவுகளை உண்டாக்கும்? அவைகள் எதிர்வன்முறைகளாக அமைந்தால், அது இந்துவெறியர்களுக்குத்தான் சாதகமானதாக இருக்கும் என்பதை எப்படி அவர்களிடம் விளக்கலாம் என்பதும்; கொழுந்துவிட்டு எரியும் இவர்களின் கோபத் தீக்கு என்ன சமாதானம் சொல்வது? எம்மாதிரியான தண்டனைகளை இந்து மதவெறிக் கும்பலுக்கு வழங்கினால், இவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புகளைச் சமன் செய்ய முடியும் என்கிற கேள்வியும் — படத்தின் இடையிடையே அலைபோல எழும்பியெழும்பித் தணிந்து கொண்டிருந்தபோது இறுதியில் வரும் இஜாஜின் சொற்கள் நம்மை அதிர வைக்கின்றன.

இந்துக்கள் என்றாலே கொடூரமானவர்கள் என்கிற ஆழமான வடுவை இஜாஜ் போன்ற குழந்தைகளின் மனதில் பதித்து விட்டார்கள், ராமபக்தர்களான இந்துப் பாசிஸ்டுகள். தம்மை இந்துக்கள் என்று நம்பிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் திரிபவர்கள் இஜாஜின் கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள்?

அது யாரோ வெறியர்கள் செய்தது என்றால், உங்களின் பெயரைப் பயன்படுத்தித்தான் அவர்கள் இதைச் செய்தார்கள் என்பதால் அவர்களுக்கு நீங்கள் என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்? பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்து என்பார்களே, அதை அப்படியே பார்க்க முடிகிறது. அதுவும் இது இந்து நஞ்சு.

பிரச்சாரம் பயம் வெற்றி

பிஜேபியின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுடன் படம் துவங்குகிறது. முசுலீம்களை இழிவாகத் திட்டும் சிறுவர்கள். இஜாஜின் நேர் காணல். முசுலீம் முகாம்கள் இடிக்கப்பட்ட வீடுகள் — “போலீசு பஜ்ரங்தளுடன் சேர்ந்து கொண்டனர்” என ஆவேசப்படும் முசுலீம்கள். போலீசு சுடும் காட்சி கலவரத்தை அடக்க போலீசால் சுடப்பட்டுச் செத்த 40 பேர்களில் 36 பேர் முசுலீம்கள். பாதிக்கப்பட்டவர்களின் நேர் காணல்கள். மோடியின் மதவெறியூட்டும் தேர்தல் பிரச்சாரப் பேச்சு. எல்லா இடங்களிலும் கோத்ரா பற்றியே பேச்சு.

கோத்ரா ரயிலில் இறந்த ஒரு பெண்ணின் இரண்டு புகைப்படப் பிரதிகளை வாங்கிக் கொண்டு போய், ஒன்றை விஎச்பி அலுவலகத்தில் கரசேவத் தியாகிகள் என கட்டம் போட்டும், இன்னொன்றை, வில்லோடும் வெறியோடும் சீறும் “ராம்’போவின் படத்துடன் இணைத்து லேமினேட் செய்தும் கொடுத்துள்ளார்கள். “எங்கம்மா கரசேவகர் இல்லை. விஎச்பிக்காரர்கள் அப்படி மாற்றி விட்டார்கள்” என்று அவரது மகள், ஒரு சிறுமி சொல்கிறார்.

தேர்தல் பிரச்சாரம் ராவணனால் வாலில் தீ வைக்கப்பட்ட ஹனுமான் குஜராத்திற்கு வந்திருந்தார் எனப் பிரச்சாரம். நடக்கும் தேர்தல் பிஜேபிக்கும் காங்கிரசிற்குமல்ல; இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பாகிஸ்தானே நமது எதிரி முஸ்ரஃபே எச்சரிக்கை இந்து வன்முறையாளர்கள் என்று சொல்கிறார்கள், இந்துக்களுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை, இந்துக்கள் வன்முறையில் இறங்கினால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இல்லாமல் போகும் – பிரச்சாரம், இந்துமதவெறிப் பாசிசத்தின் உச்சகட்டப் பிரச்சாரம்.

இடையில் இந்துக்களுக்கு ஆதரவாகச் சிலர், ஒரு டாக்ஸி டிரைவர், இளம்பெண், கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்… எனப் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவது பொய்தான் என்பதையும், உண்மையைச் சொல்ல வரும்போது அவர்கள் தடுமாறுவதையும் பேச்சை நிறுத்திக் கொள்வதையும், அவர்கள் மறைக்க நினைக்கும் இந்துத்துவச் சார்பை, டாக்ஸியில் இருக்கும் கண்ணாடிப் பிள்ளையார், பிரார்த்தனையை வலியுறுத்திப் பேசி, ஊதுபத்தி காட்டி, போலீசுக்குக் கும்பிடு போடும் இளம்பெண்… போன்றவைகளைக் கவனமாகக் காட்சிப்படுத்தியிருப்பதன் மூலமும் சிறப்பாக அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு ஆவணப்பட இயக்குநருக்கு அவசியம் இருக்க வேண்டிய “கருத்துக்களின் சார்பை வெளிக் கொணருதலை’ ராகேஷ் சர்மா இதில் முழுமையாகச் செய்திருக்கிறார்.

ஒரு இந்துக் கோயிலில் குண்டைத் தேடியும், தீவிரவாதிகளைச் சுட்டதாகவும் காட்டும் ராணுவ நடவடிக்கைகளைக் காண்பித்து “சான்சூய் டிவி’யின் விளம்பரத்தைக் காண்பித்திருப்பது பொருத்தமான அம்பலப்படுத்துதலோடு கிண்டலாகவும்இருக்கிறது.

படத்திலுள்ள செய்திகள் ஏராளம், ஒரு நூல் எழுதுமளவிற்கு. மந்திரம், வேதம், புனிதம், பக்தி, கடவுள், தியானம், யோகம், ஆன்மீகம், காவி, துறவு, பூஜை, தேசபக்தி, ஸ்ரீராம், காளி, கணபதி… இன்னும் தான் அணிந்திருக்கிற எல்லாவிதமான முகமூடிகளையும் கழற்றி எறிந்துவிட்டு, தான் ஒரு பாசிசம்தான் என முழு அம்மணமாய் குஜராத்தில் நின்றிருக்கிறது இந்துத்துவம். அதற்கு ஆதாரம் இப்படம்.

···

சுகானா, அவரது மகள்கள் ரேஷ்மா, சபானா மூன்று பேரும் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். பறிகொடுத்த உறவினரின் நேர் காணலுக்குப் பிறகு, அவர்கள் சீரழிக்கப்பட்ட, கொல்லப்பட்ட இடங்களையும், பார்வையிட்ட பிறகு, அத்தொகுதியின் பிஜேபி எம்.பி. பிரபலமான வக்கீல், கோபால்சிங் சோலங்கியிடம் அவரோடு காரில் பயணித்துக் கொண்டே நேர்காணல் துவங்குகிறது:

கே: நீங்கள் வழக்கறிஞராகச் செயல்பட்டு வருகிறீர்கள்.

எம்.பி: ஆம்! நான் முதலில் வக்கீல், அரசியல்வாதி பிறகுதான். அரசியல் என்னோடு கூடவே ஓடிவந்து கொண்டிருக்கிறது.

(கார் வக்கீல் அலுவலகத்திற்கு வந்துவிட்டது. ஏராளமான புகார்தாரர்கள். போலீசும் அமர்ந்திருக்கிறது. கேள்விகளுக்குச் சிலர் பதில் சொல்கிறார்கள்.)

பதில்: ஆம்! அவர் எங்கள் வக்கீல்!

கே: எப்படிப்பட்ட வக்கீல்?

ப: மிகத் திறமைசாலி அவருக்கு எல்லாச் சட்டமும் தெரியும்.

கே: என்ன வழக்கில் நீங்களெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர்கள்?

ப: செக்ஷன் 302, 307 அப்புறம் 376.

கே: எதுக்காக?

ப: 376 ரேப்… 302 கொலை

இசுலாமியப் பெண்கள் நரவேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். வேட்டையாடிய இந்து ஓநாய்களின் வக்கீல் பிஜேபியின் பாராளுமன்ற உறுப்பினர். வக்கீல் த எம்பி த கலவரம் த பாலியல் வன்முறை த படுகொலை த வக்கீலிடம் குற்றவாளிகள் கூட்டம் த சிறந்த வக்கீல் த பாலியல் வன்முறை, படுகொலை வழக்குகள் த வெற்றிகரமான வக்கீல் தொழில் த மிகத் துல்லியமாக இந்த வலைப்பின்னலை அம்பலப்படுத்தியிருக்கும் இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர்.

ஆவணப்படம் எனும் வடிவத்தில் இச்செய்தியை ராகேஷ் சர்மா வெளிக் கொணரக் கையாண்டிருக்கும் பொருத்தமான தொகுப்பும், உத்தியும், ஆவணப்பட உலகினர் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று. இந்தப் பொருத்தமும், தொகுப்பும் ராகேஷ் சர்மாவிற்குக் கனகச்சிதமாய் அமைந்ததற்கு, பிரச்சினையின் உண்மையை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதுதான் அடிப்படை.

குற்றங்களைச் செய்வதற்கான குற்றவாளிகளை உருவாக்கிப் பணமும் சம்பாதிப்பதற்கு, பிஜேபிக்கு பயன்பட்டிருக்கிறது வக்கீல் தொழில். மைக்கேல் மூரின் “பாரன்ஹீட் 9/11”ஐ நினைவூட்டுகிறது இக்காட்சி. பணம் சம்பாதிக்க புஷ் குடும்பம் துவக்கிய ஈராக் போர். அங்கே அமெரிக்க “அப்பன் புஷ்’; இங்கே பிஜேபி எம்.பி சோலங்கி.

இவ்வளவு குரூரமான கலவரத்திற்குப் பிறகும் பிஜேபி தேர்தலில் எவ்வாறு வெற்றியடைந்தது என்பதைப் படம் தெளிவாக விளக்குகிறது.

சங்பரிவாரக் குரங்குகளால் தாக்கப்பட்ட முசுலீம் பகுதியிலுள்ள ஒரு இந்துவின் வீடு. வீட்டைச் சீர் செய்து கொடுத்திருக்கிறது இசுலாமியக் கமிட்டி — இவற்றையெல்லாம் சொல்லும் அந்தப் பெண்ணிடம், “யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?” எனக் கேட்கப்படும் கேள்விக்கு அவர் சொல்லும் பதில் “பிஜேபிக்கு.” காரணம்? பயம்.

“ஏன் மோடிக்கு ஓட்டுப் போடுவேன் என்கிறீர்கள்?” இதற்கு ஒரு இளைஞனின் பதில், “அப்பத்தாங்க டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.” டென்ஷன் என்பது பயம்தான்.

பயத்தை விதைத்து தேர்தல் வெற்றியை அவர்கள் அறுவடை செய்திருக்கிறார்கள். முசுலீம்களிடம் மட்டுமல்ல இந்துக்களிடமும் அந்தப் பயம் மிக அதிகமாகவே இருந்திருக்கிறது. இந்தப் பயம்தான் பாசிஸ்டுகளுக்குத் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

···

நாமும் இங்கிருந்தே கற்றுக் கொள்வோம். தேர்தலில் தோல்வியடைய வைப்பதன் மூலம் பாசிஸ்டுகளுக்குப் பாடம் கற்பிக்க முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிற நாமும் அதே “பயம்’ எனும் ஆயுதத்தையே எடுத்துக் கொள்வோம். பயம் என்பதை “பயப்பட வைத்தல்” என்று மாற்றிக் கொள்வோம். தேர்தலில் அல்ல, தெருவில் திருப்பியடிப்போம். மதவெறிக் குரங்குகளைக் கட்டிவைத்து வாலில் தீ வைப்போம். பயம் அறுப்போம். துணிச்சல். துணிச்சல் ஒன்றுதான் வழி. மதவெறியர்களைப் பயப்பட வைக்கும் நடவடிக்கையில் இறங்கும் துணிச்சல் ஒன்றுதான் பாசிஸ்டுகளை ஒழித்துக் கட்டப் பயன்படும் முதல் ஆயுதம் என்பதை இறுதித் தீர்வு (The Final Solution) எனும் இந்த ஆவணப்படம் முகத்தில் அறைந்து சொல்கிறது.

ஹிட்லர் தனது இறுதித் தாக்குதலுக்கு வைத்துக் கொண்ட பெயர் இறுதித் தீர்வு. படத்தின் தலைப்பாக இருக்கும் இந்த வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் அர்த்தமும் இதுதான்.

குஜராத்திற்குப்பின் தமிழகம்தான் என்கிற கனவைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்திருக்கிறது காவிக் கும்பல். தேர்தலும் சட்டமன்றமும் பாராளுமன்றமும் பாசிஸ்டுகளை ஒழிக்காது. அவை பாதுகாக்கும், வளர்க்கும். குஜராத்தைவிட வேறு எடுத்துக்காட்டு இனித் தேவையே இல்லை.

இவர்களின் பிரச்சாரத்தையும், நடவடிக்கைகளையும் எதிர்க்கும் துணிச்சலும், நேருக்கு நேர் சந்திக்கும், மோதும் துணிச்சலும்தான், பாசிஸ்டுகளை ஒழிக்கும், அழிக்கும். அதற்குத் தமிழகம் ஓர் எடுத்துக்காட்டு என்பதை புரட்சிகர அமைப்புகள் நிரூபித்தே தீரும்.

– குருசாமி மயில்வாகனன்

http://www.tamilcircle.net

4 comments

  1. இறை நேசன்

    //ஓடிச் சென்று, கள்ளங்கபடமில்லாமல் மலங்க மலங்க விழித்தபடி பேசும் அவனைக் கட்டியணைத்து ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் எனச் சொல்ல வேண்டும் என மனம் துடிக்கிறது//

    Really i want to do the same.

    //தேர்தலில் தோல்வியடைய வைப்பதன் மூலம் பாசிஸ்டுகளுக்குப் பாடம் கற்பிக்க முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிற நாமும் அதே “பயம்’ எனும் ஆயுதத்தையே எடுத்துக் கொள்வோம். பயம் என்பதை “பயப்பட வைத்தல்” என்று மாற்றிக் கொள்வோம். தேர்தலில் அல்ல, தெருவில் திருப்பியடிப்போம். மதவெறிக் குரங்குகளைக் கட்டிவைத்து வாலில் தீ வைப்போம். பயம் அறுப்போம். துணிச்சல். துணிச்சல் ஒன்றுதான் வழி. மதவெறியர்களைப் பயப்பட வைக்கும் நடவடிக்கையில் இறங்கும் துணிச்சல் ஒன்றுதான் பாசிஸ்டுகளை ஒழித்துக் கட்டப் பயன்படும் முதல் ஆயுதம்//

    //தேர்தலும் சட்டமன்றமும் பாராளுமன்றமும் பாசிஸ்டுகளை ஒழிக்காது. அவை பாதுகாக்கும், வளர்க்கும். குஜராத்தைவிட வேறு எடுத்துக்காட்டு இனித் தேவையே இல்லை.

    இவர்களின் பிரச்சாரத்தையும், நடவடிக்கைகளையும் எதிர்க்கும் துணிச்சலும், நேருக்கு நேர் சந்திக்கும், மோதும் துணிச்சலும்தான், பாசிஸ்டுகளை ஒழிக்கும், அழிக்கும்//

    When this people wake up?

    He gave the only “FINAL SOLUTION” to stop the facist’s activities.

    Where enomino/nesam/Arokkiyam etc..

  2. ‘Zahira lied, maybe for money’

    Best Bakery: She has developed image of a self-condemned liar, says SC panel

    ANANTHAKRISHNAN G. & SOURAV SANYAL

    Posted online: Tuesday, August 30, 2005 at 0323 hours IST

    NEW DELHI, AUGUST 29: A Supreme Court appointed committee which went into charges by and against Best Bakery case witness Zahira Sheikh, whose family was killed in the post-Godhra riots in Gujarat, has concluded that she lied in the course of her testimony probably under inducement.

    Ironically, it was Zahira’s allegations against her one-time mentor and activist Teesta Setalvad that led to the formation of the committee. But the panel found that she had gone back even on this.

    The bench of Justice Arijit Pasayat and Justice H.K. Sema, however, made it clear that it would accept the report only after hearing the counsel for both Teesta and Zahira.

    The report, prepared by Supreme Court Registrar General B.M. Gupta, said: ‘‘looking to the aforementioned status in full, including all other circumstances of the case, I feel no hesitation to mention that Zahira is not such a lady who speaks the truth. She has developed an image of a self-condemned liar whose statements alone cannot safely be accepted’’.

    On January 10, the court had referred the matter for inquiry after Zahira’s ‘‘flip flops’’ and allegations that she may have been induced to do so.

    The report submitted today raises serious questions on Zahira’s conduct. It clearly says there ‘‘appears a high probability of money changing hands’’ which was the ‘‘allurement’’ by which Zahira ‘‘was induced for giving a particular statement in the trial court, Vadodara which was supportive to the defence/accused and against the case of the prosecution’’.

    Putting the role of local BJP MLA Madhu Srivastava under the scanner, the committee said after ‘‘receiving the first call (proposal)’’ from Srivastava through his cellphone on Nafitullah’s cellphone, the latter was ‘‘continuously calling’’ Srivastava on his cell till July 2, 2003 ‘‘i.e. just after the judgment of the trial court was pronounced’’ on June 27, 2003, and ‘‘just before their approaching’’ Setalvad on July 5.

    Responding to the ‘‘very material allegations’’ levelled by Setalvad against the state of Gujarat, including non-intimation of Zahira’s November 3, 2004, press conference at Vadodara to the Public Prosecutor conducting the retrial, the committee has said that her allegations ‘‘cannot be ignored’’. A visibly relieved Setalvad, however, refused to blame Zahira for the change in stand. ‘‘Forces behind her are trying to use her as a pawn,’’ she said.

    MLA rubbishes report

    VADODARA: Waghdodia BJP MLA Madhu Shrivastava on Monday trashed the SC committee’s report, saying it was an attempt to shield Teesta Setalvad. At a press meet at the Circuit House here, Shrivastava alleged that SC Registrar General B.M. Gupta had conspired to shield Setalvad in the report. “The two have family relations and the report has been written to save her. We have all trust in the SC, but its committee has left Zaheera’s subsequent allegations against Setalvad untouched,’’ he said. — ENS

  3. Aarokkiyam உள்ளவன்

    இந்து வெறியர்கள் செய்துகொண்டு வந்த இந்த போக்கிரி தனங்களால், முஸ்லிம்களுக்கு மட்டும் பிரச்சனை ஏற்படவில்லை. மாறாக அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் தொல்லையாகவே இருந்தது. ஏன், மத்திய அரசுக்கே இவர்களால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எதை பற்றியும் இவர்களுக்கு கவலையில்லை. இந்த நாட்டின் பொருளாதாரத்தில் நஷ்டம் ஏற்பட்டால் என்ன?, இந்த நாட்டில் இவர்கள் செய்யும் குழப்பத்தால் ரத்த ஆறுகள் ஓட்டப்பட்டால் இவர்களுகென்ன? இந்த போக்கிரிகளுக்கு தேவை இந்த நாட்டை இந்து நாடாக்க வேண்டும் அவ்வளவுதான். இந்த வெறியர்களின் வெறியாட்டாத்தால் ரயிலை பலமுறை அவசரமாக வழியில் நிறுத்தவேண்டிய சு{ழல் ஏற்பட்டது.

    26-02-2002 நள்ளிரவு வந்து சேரவேண்டிய சபர்பதி எக்ஸ்பிரஸ் 27-02-2002 அன்று காலை சரியாக 7.43 மணிக்கு கோத்ரா ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. பிரயாணிகள் அனைவரும் இறங்கி தங்களின் காலை சிற்றுண்டியை முடித்து கொண்டார்கள். அவர்களுடன் சேர்ந்து இந்த வெறியர்களும் இறங்கினர். அருகில் இருந்த சித்திக் பக்கர் என்ற ஒரு முஸ்லிமின் சிற்றுண்டியில் தங்களுக்கு தேவையான அனைத்தையும் சாப்பிட்டனர்.

    சாப்பிட்டு போகும் போது, சிற்றுண்டி நடத்திகொண்டிருக்கும் முஸ்லிம் முதியவர் சாப்பிட்டதற்காக பணம் தரும்படி கேட்டார். அந்த மதவெறி கும்பல் பணம் கொடுக்க மறுத்ததோடு, அங்கு ஒரு பெரும் ரகளையே செய்தனர். அந்த முதியவரின் தாடியை பிடித்து இழுத்து, அவரை நைய்ய புடைத்தனர். அவரை காக்க சிலர் முன்வந்தபோது, அங்கு அது ஒரு சிறிய கலவரமாக மாறியது.

    இந்த அமளியை கடையின் உள்ளிருந்து கேட்ட அந்த வயதான முஸ்லிமின் மகள், தன் தந்தை தாக்கப்படுவதை பார்த்து பதறிபோய் ஓடி வந்தாள் தந்தையை காக்க.

    தாக்கிகொண்டிருந்த அந்த மதவெறி கும்பல், தாக்கியவர்களை விட்டு அந்த 16 வயது சிறுமியை து}க்கி தங்களின் பெட்டிக்குள் போட்டு, கதவையும் முடிவிட்டார்கள்.

    இந்த சம்பவத்தை நிய10ஸ் வீக் என்ற அமெரிக்க வாரதெடிpன் ஏப்ரல் 22, 2002ம் பதிப்பு பின்வருமாறு கூறுகிறது:

    ‘The Hindu zealots returning from Ayodhya arrived at the station in Godhra. The ‘kar sevaks’ as the Hindu militants are known, reportedly refused to pay a Muslim tea vendor, forced Muslims to sing praises to Ram and the allegedly brought a Muslim girl into their car. The enraged response young Muslim men killed 59 Hindus.’

  4. அசுரன்

    //இஜாஜ்: 1… 2… 3… எனக்கு எல்லா எண்களும் தெரியும். வீடு… பூக்கள் எல்லாம் செய்யத் தெரியும்.

    கேள்வி: பெரியவனான பிறகு என்ன ஆவாய்?

    இ: சோல்ஜராவேன்! பிறகு அவர்களைச் சுடுவேன்!

    கே: யாரை?

    இ: இந்துக்களை!

    கே: ஏன்?

    இ: ஏன்னா, அவர்களும் இதைத்தான் செய்தார்கள்!

    கே: நீ ஏன் அவர்களை மோசமானவர்களாக நினைக்கிறாய்?

    இ: …..கட்டாயம் அவர்களைக் கொல்வேன்!

    கே: ஏன்?

    இ: நான் அவர்களைச் சேதப்படுத்துவேன்!

    கே: எல்லா இந்துக்களும் மோசமானவர்களா?

    இ: அவர்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசினார்கள்!

    கே: எந்த மாதிரி?

    இ: நான் அந்தக் கெட்ட வார்த்தைகளைப் பேசமாட்டேன்.

    கே: நான் ஒரு இந்து. நான் மோசமானவன்னு நெனக்கிறியா?

    இ: (யோசித்து) இல்லை.

    கே: நீ ஒரு சோல்ஜர். என்னைக் கொல்லணுமல்லவா?

    இ: (தலையசைத்து) ஆமா, நா வேற யாரையும் தாக்க மாட்டேன். இந்துக்களை மட்டும்தான் கொல்வேன்.

    கே: சரி! நா ஒரு இந்து.

    இ: இல்லை. நீங்கள் அவர்களில்லை.

    கே: நான் அவர்களைப் போல இல்லையா?

    இ: (இல்லையெனும்படித் தலையசைக்கிறான்)

    கேள்வி: அப்புறம்?

    இஜாஜ்: நீங்கள் ஒரு முசுலீம்.

    குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், இசுலாமிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளிடம் என்ன எதிர்விளைவுகளை உண்டாக்கும்? அவைகள் எதிர்வன்முறைகளாக அமைந்தால், அது இந்துவெறியர்களுக்குத்தான் சாதகமானதாக இருக்கும் என்பதை எப்படி அவர்களிடம் விளக்கலாம் என்பதும்; கொழுந்துவிட்டு எரியும் இவர்களின் கோபத் தீக்கு என்ன சமாதானம் சொல்வது? எம்மாதிரியான தண்டனைகளை இந்து மதவெறிக் கும்பலுக்கு வழங்கினால், இவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புகளைச் சமன் செய்ய முடியும் என்கிற கேள்வியும் — படத்தின் இடையிடையே அலைபோல எழும்பியெழும்பித் தணிந்து கொண்டிருந்தபோது இறுதியில் வரும் இஜாஜின் சொற்கள் நம்மை அதிர வைக்கின்றன.

    இந்துக்கள் என்றாலே கொடூரமானவர்கள் என்கிற ஆழமான வடுவை இஜாஜ் போன்ற குழந்தைகளின் மனதில் பதித்து விட்டார்கள்,

    இவர்களின் பிரச்சாரத்தையும், நடவடிக்கைகளையும் எதிர்க்கும் துணிச்சலும், நேருக்கு நேர் சந்திக்கும், மோதும் துணிச்சலும்தான், பாசிஸ்டுகளை ஒழிக்கும், அழிக்கும். அதற்குத் தமிழகம் ஓர் எடுத்துக்காட்டு என்பதை புரட்சிகர அமைப்புகள் நிரூபித்தே தீரும்//

    அந்த சிறு பாலகனின் மனதில் வன்மம் விதைக்கப்பட்ட விதமும் அப்படி விதைக்கப்பட்ட வன்மம் எப்படி மத வேறுபாடின்றி இந்து மற்றும் இஸ்லாம் மத வெறி பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது என்பதை அதிகம் விளக்க வேண்டியதில்லை.

    சில எடுத்துக்காட்டுகள் போதும்:

    #1) குஜராத்தில் இந்து வெறி பயங்கரவாதிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதாவது மக்களின் பீதியை வெறுப்பாக மாற்றி தங்களது அதிகார வெறீக்கு பயன்படுத்திக்கொள்ளூம் கால்குலேசனிலும் கூட இரண்டுபேரும் ஒன்றுதான்.

    #2) கடந்த பிஜேபி ஆட்சியில் மும்பையில் பஸ்களில் சிறு வெடிகுண்டுகள் வெடித்தன. வெகு நாட்கள் கழித்து போலிஸ் ஒரு முஸ்லீம் குடும்பத்தை கைது செய்தது. அந்த குடும்பம் எந்த ஒரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு கொள்ளவில்லை. குஜாராத் பற்றிய தடை செய்யப்பட்ட ஒரு விவரணப்படத்தைப் பார்த்து கோபமுற்று சொந்தமாகவே அந்த குண்டு வெடிப்புகளை நடத்தினர். இது பற்றி புதிய ஜனநாயகம்(மேலே நீங்கள் கொடுத்துள்ள கட்டுரையின் TAMILCIRCLE லிங்கில் உள்ளதும் இந்த பத்திரிக்கைதான்) ஒரு நல்ல சாட்டையடி கட்டுரை வெளியிட்டிருந்தது(2003 கடைசி என்று நினைக்கிறேன்).

    இதில் இரண்டு விசயங்கள் உள்ளன.
    அ) எப்படி சாதரண அப்பவிகளையும் கூட பயங்கரவாத செயல் புரிய குஜராத் போன்ற வரலாற்று அவமானங்கள் காரணமாகின்றது. இது போன்ற செயல்களீன் கருத்து வடிவ/செய்ல வடிவ இருப்புதான் இஸ்லாம் பயங்கரவாதிகளின் ஊற்று மூலமாக இருப்பதை எந்த அறிவாளிகளும் உணர்ந்ததாக தெரியவில்லை(எ-கா – வக்ரா, முயுஸ், ச’மூத்திர’ம், ஆரோக்கியம்).

    ஆ) இது போல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியனும் தனது தாய் நாட்டின் மீது நம்பிக்கை இழந்தால் என்ன நடக்கும் என்பதை சொல்லி புரிய வேண்டியதில்லை. ஆனால் அப்படி ஒன்று நடப்பதைத்தான் மேலே சொன்ன இந்து ப்யங்கரவாத வெறீயர்கள் விரும்புகிறார்கள். அப்படி ஒவ்வொரு இஸ்லாமியனும் நம்பிக்கை இழக்காமல் இன்னும் இந்த தாயின் மடியில் தன்னையும் ஒரு குழந்தையாக பார்ப்பதால்தான் அந்த சம்பவம் ONE OFF ஆக உள்ளது.

    மேற் சொன்ன மும்பை குண்டு வெடிப்பு கண்டனத்துக்குரியது. ஆனால் ஒன்றும் தெரியாத அப்பாவி மக்கள் மீது குண்டு வைக்க அந்த குடும்பத்தை நிர்பந்தித்த சமூக காரணி என்ன? இந்து என்ற பெயரில் நடந்த குஜராத கலவரத்தை இந்திய சமூகம் அமைதியாக வேடிக்கை பார்த்ததே….அதன் விளைவு அந்த சமூகத்தின் மீதுதான அந்த குடும்பத்தின் கோபமாக திரும்பியது.

    அமேரிக்க அடாவடியை கண்டிக்காத, தடுத்து போராடாத மக்கள் செப் 11 யை சந்தித்தார்கள் அதுபோல். ஆம் அரசும் சரி, பாசிஸ்டுகளும் சரி, பயங்கரவாதிகளும் சரி ஒரு அரசின் தவறுகளுக்கு அந்த மக்களை தண்டிப்பதில் ஒன்றுபடுகிறார்கள்.
    ஆனால் நாம் இவர்களிடம் சென்றா பேசமுடியும்?..அய்யா மக்களை தண்டிக்காதீர்கள் என்று. மாறாக மக்களிடம்தான் சென்று, நடக்கின்ற அநியாயங்கள் உன் பெயரில் நடக்கிறது எனவே நீதான் தட்டிக் கேட்க வேண்டும் என்று உணர்த்த வேண்டும். அது ஜனநாயகமான புரட்சிகர அமைப்புகளின் கீழ் மத இன வேறுபாடின்றி வர்க்க உண்ர்வுடன் மக்கள் அணிதிரளும் போது மட்டுமே சாத்தியம். அது நடந்தே தீரும் என்பது வரலாற்றின் விதி. அப்பொழுது பாசிஸ்டுகளுக்கு தண்டனை நடுவீதிகளில் கொடுக்கப்படும்.

    நன்றி,
    அசுரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *