Featured Posts
Home » நூல்கள் » மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? – 1.

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? – 1.

முன்னுரை – கி.வீரமணி.

1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள ஓர் சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறிவிட்டது. திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? அவ்வூரிலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரிகளும், சகோதரர்களும் தங்களது தன்மானத்தைக் காத்துக் கொள்ள, இந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்; மதம் மாறினர்.

அவர்களை நான் அந்தப்பகுதிக்கு கழகப் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த போது, இந்தச் சமூகப்பிரச்சினையில் உள்ள உண்மைகளைக் கண்டறிய, அந்த கிராமத்திற்கே நேரில் சென்று, அங்கே மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும், மதம் மாறாத அதே சமூகத்தினைச் சேர்ந்தவர்களையும் – பல வயதுக்காரர்களையும் சந்தித்து, கேள்வி கேட்டு ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டு வந்து அதையே ஒரு சிறு நூலாக அப்படியே அவர்கள் கூறியதை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாக்காது வெளியிட்டேன்.

இந்த சந்திப்பு நிகழ்ந்த நாள் 25-07-1981 ஆகும்!

அங்கே மொத்தம் உள்ள 300 குடும்பங்களில் 210 குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறியுள்ளனர். இவர்கள் 19-02-1981 அன்று மதம் மாறினார்கள்.

இந்த ஆண்டில்(2002) ஒரியண்டல் லாங்குமென்ஸ் லிமிடெட் புத்தக கம்பெனியினரால் வெளியிடப்பட்டுள்ள “Vishwa Hindu Parishad and Indian Politics” என்ற ஓர் ஆங்கில நூல் – இதன் ஆசிரியர் “மஞ்சேரி காட்ஜு” என்ற அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் விரிவுரையாளரான ஓர் அம்மையார். இங்கிலாந்து நாட்டில் உள்ள School of Oriental and African Studies என்ற லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பி.எச்.டி பட்ட ஆய்வினை இந்த தலைப்பில் மேற்கொண்டு செய்தார். அது தான் மேலே காட்டிய நூலாக வெளிவந்துள்ளது.

அந்நூலில் மூன்றாவது அத்தியாயத்தில், “Translation to Mass Activism” தீவிரதன்மை கொண்ட மக்கள் இயக்கமாக(வி.இ.ப) மாற்றம் என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.

In February 1981 Meenakshipuram, a village in Tirunelveli District of Tamil Nadu with a population of 1,300 almost all of whom were “Untouchables”, became a centre of controversy when large-scale conversions to Islam were reported. For the VHP and its associate organizations, the Meenakshipuram conversions were not an outburst of local grievances, but “a small experience of an old conspiracy to destroy Hindus, Hinduism and Hindusthan,” financed by petrodollars.

இறைவன் நாடினால் வளரும்.

8 comments

  1. மரைக்காயர்

    கி.வீரமணி அய்யா அவர்களின் பேரைச் சொன்னாலே இங்கே சில பேருக்கு பின்பக்கம் எரியும். அதுல வி.இ.ப போன்ற ‘மக்கள் இயக்கங்களை’ (?) பத்தி வேற சொல்லியிருக்காரா.. ரொம்ப நல்லாயிருக்கும் போல இருக்கே?. தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம். நன்றி.

  2. மதம் மாறுவது ஒருவரின் அடிப்படை உரிமை. அதை எந்த மதத்துக்காரரும் மறுக்க முடியாது. கூடாது. ஆகையால் இவர்களின் மதமாற்றம் அவர்களுக்கு நியாயமானதே.

  3. மதம் மாறுவது ஒருவரின் அடிப்படை உரிமை. அதை எந்த மதத்துக்காரரும் மறுக்க முடியாது. கூடாது. ஆகையால் இவர்களின் மதமாற்றம் அவர்களுக்கு நியாயமானதே
    1,How about inducing conversion by gifts, incentives and other baits.
    2,Muslim countries permit conversion to Islam but not
    from Islam.Why is that so.
    Why they have rules that punish
    those converting from Islam
    with death.
    Ragavan sounds very naive.Unless
    Hindus awake to this meance of
    conversion by inducement and
    fight against it, there is no
    solution.The legal solution
    as in M.P.Gujrat is fine as
    it acts as a disincentive to
    conversion by hook or crook.
    Veeramani’s aim is to destroy
    hindu society.That is why these
    muslims support him although
    they hate atheism.Had Periyar
    been in Pakistan or Saudi he
    would have been stoned to death
    by these muslims.

  4. // // tamilreber said…
    மதம் மாறுவது ஒருவரின் அடிப்படை உரிமை. அதை எந்த மதத்துக்காரரும் மறுக்க முடியாது. கூடாது. ஆகையால் இவர்களின் மதமாற்றம் அவர்களுக்கு நியாயமானதே //
    1,How about inducing conversion by gifts, incentives and other baits. //

    பணத்துக்காக மாறிடும் அளவிற்கு ஒரு நம்பிக்கை இருக்குமானால் அதை நம்பிக்கை என்று எப்படிச் சொல்வது? உங்களுக்குப் பணம் கொடுத்து மாறச் சொன்னால் மாறுவீர்களா?

    // 2,Muslim countries permit conversion to Islam but not
    from Islam.Why is that so.
    Why they have rules that punish
    those converting from Islam
    with death. //

    இஸ்லாமில் மதம் மாறுவதற்கு அனுமதி இல்லையென்றால் அதுவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே. மதமாற்றத்தைத் தடுப்பவர் எவராயினும் அவர் குற்றவாளிதான். என்ன காரணம் சொன்னாலும் அவர் ஒருவரின் அடிப்படை உரிமையைப் பறிக்கின்றவர்தான்.

  5. மரைக்காயர்

    //2,Muslim countries permit conversion to Islam but not
    from Islam.Why is that so.//

    முஸ்லிம் நாடுகளில் மதமாறுவதற்கு தடை இருப்பதாக புகார் சொல்லும் அதே கும்பல்தான் இந்தியாவில் மதமாற்ற தடை சட்டத்தை தீவிரமாக ஆதரிக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?

    By the way, பணமோ பொருளோ கொடுத்து ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றுவது இஸ்லாமிய வழிமுறை அல்ல. ஏனெனில் ‘கன்வர்ட்’ எனும் சொல்லே குர்ஆனில் இல்லை

  6. Hi i m kavitha working in singapore past two years. i like to follow muslim religious i would like to read kuran,everyday must obey god. i had many muslim girl friends now i would like to pray Allah but i do know where how? my friend say girl’s never go to Masque so i scared to ask other people. Can u help me please.

  7. Alhamdulillah.

    We welcome you to islam.

    Please contact a muslim brother, in singapore through the following email:

    “Thoobaah”

    He would insha Allah, help you towards sisters who could help you know about islam more.

    Masoud,
    masuud2k5@gmail.com

  8. Hi, It is not true that girl’s never go to Mosque, especially in Singapore. You can visit Chulia Mosque in china town or Sultan Mosque, and the people there will be happy to help you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *