Featured Posts
Home » பொதுவானவை » மும்பை தாக்குதல் – கேட்கக்கூடாதக் கேள்விகள்!

மும்பை தாக்குதல் – கேட்கக்கூடாதக் கேள்விகள்!

மும்பை தாக்குதல் குறித்து பல்வேறு வகையான யூகங்கள் செய்திகளாகவும் அறிக்கைகளாகவும் உலாவி வருகின்றன. தொலைக்காட்சி ஊடகங்கள் நேரலைக்காட்சியாக “Mumbai Under Attack” “Mumbai in Fire” “Mumbai 26/11” எனத்தலைப்பிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒளிபரப்பி ஊடகக் கடமையை நிறைவு செய்தனர்.

அடுத்ததாக இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தான், லஷ்கரே தோய்பா etc காரணம் என்று அத்வானிமுதல் தினமலர்வரை சொன்னதன்பேரில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மாற்றப்பட்டுவிட்டார்கள். அமெரிக்கா முதல் மேற்கத்திய நாடுகள் ‘அல்காயிதா’ முத்திரைகுத்தி 9/11 இன் இந்தியப் பதிப்பாக கருதி உள்ளார்கள். மாலேகான் நிகழ்வில் முகத்திரை கிழிக்கப்பட்ட பிறகு மறந்து போயிருந்த ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ ஒருவழியாக தூசுதட்டப்பட்டுள்ளது!

இத்தாக்குதலை நடத்தியது டெக்கான் முஜாஹிதீன்கள் என்று முதற்கட்டச் செய்திகள் வெளியாயின. பிடிபட்டத் தீவிரவாதியின்படி பாகிஸ்தான் தீவிரவாதிகளே இத்தாக்குதலை நடத்தியதாகவும், திசைதிருப்ப டெக்கான் முஜாஹிதீன் என்றபெயரில் ஈமெயில் அனுப்பியதாக ஒப்புக் கொண்டதாகச் செய்திகள் வெளியாயின. (http://thatstamil.oneindia.in/news/2008/11/27/india-terrorists-came-from-pakistan-by-sea.html)

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்புப் படையினருடன் மரண விளையாட்டு விளையாடிய தீவிரவாதிக்கு, email@deccanmujahideen.com குறித்தும், அது திசைதிருப்புவதற்காக அனுப்பப்பட்டதென்றும் எப்படி தெரிந்திருக்கும்? என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’

முதலில் இருபது தீவிரவாதிகள் வந்தனர். ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர். ஐவர் பிடிபட்டனர். இருவர் போலீஸ்வேனில் தப்பியோடி விட்டனர். மீதிபேர் ஹோட்டலில் உள்ளனர் என்று செய்தி வந்தது. அடுத்து பத்துபேர், அஜ்மல் எனும் பாகிஸ்தானி பிடிபட்டான் என்றும்.பிறகு பதினாறு பேர், பிடிபட்டவன் ஆஸம் என்றனர்.இடையே, வியாபாரச் சண்டையால் தாவூத் இப்ராஹீமின் கை இதிலுள்ளது என்றும் சொல்லப்பட்டது.சிறைகளிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும்.பிறகு, பாகிஸ்தான் மாரியட் ஹோட்டலைப்போல் மும்பை தாஜ் ஹோட்டலையும் தகர்க்கவே வந்தோம். என்றும் சொன்னதாகச் செய்திகள் வந்தன. பிறகு, ஐயாயிரம் பேரைக் கொல்லவே வந்தோம்.என்றனர். இவற்றில் எது உண்மை என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’

ஐயாயிரம் பேரைக் கொல்வதே நோக்கமென்றால் வடமாநிலங்களில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டிருக்கலாம்.அங்குதான் மோடி, அத்வானி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தார்கள். மும்பையிலிருந்து அடித்து விரட்டப் பட்ட பிகாரிகள் சிலரை சேர்த்துக்கொண்டு தாக்கரேயை தாக்கியிருக்கலாம். அனாயசயமாக இவ்வளவு ரிஸ்க் எடுத்து, பாதுகாப்பு நிறைத்த நட்சத்திர ஹோட்டலில் அறையறையாகச் சென்று ஐயாயிரம் பேரைக் கொல்லத் திட்டமிட்டது எவ்வளவு முட்டாள்தனமாகப் போய்விட்டது? என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’

கர்கரேயைக் கொன்றுவிட்டு போலீஸ் காரில் தப்பிய தீவிரவாதிகள் எங்கு சென்றனர்? அவர்களை ஏன் எந்தப்போலீஸ்காரரும் பின்தொடர்ந்து விரட்டிப் பிடிக்கவில்லை? என்று யாரும் கேட்கவில்லை! காமா மருத்துவமனையைத் தாக்கியவர்கள் மராட்டியில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. தீவிரவாதிகள் உர்தூ பேசினால் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களென நம்பலாம்! மராட்டி பேசியதால் மராட்டியத் தீவிரவாதிகளோ? என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’

பாகிஸ்தானிலிருந்து அதிவ

15 comments

  1. கோவி.கண்ணன்

    அத்வானி கோஷ்டி உட்பட அரசியல் ரீதியாகவும் யாரும் மும்பை குண்டுவெடிப்புக்கு இந்திய இஸ்லாமியர்கள் மீது யாரும் சந்தேகப்படவே இல்ல, குற்றமும் சொல்லவில்லை. பாகிஸ்தான் மற்றும் லஸ்கர் இ தொய்பா பற்றி தானே பேசினார்கள். இதை ஏன் நீங்கள் ஞாயப்படி தர்மப்படி பார்க்கக் கூடாது.

  2. மு மாலிக்

    1.வர இருக்கும் தேர்தல்,
    2.சங்பரிவார்களின் செயல் வரலாறு,
    3. இஸ்லாமியத் தீவிர்வாதிகளாக இருக்கும் பொருட்டு, இத்தாக்குதலினால் முஸ்லீம்களுக்கு ஏதும் நன்மை இரா நிலை.
    4. மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அதிகாரியான கர்கரேயின் கொலை

    ஆகியவை பல திசைகளில் சிந்திக்க வைத்தாலும் ….

    இந்தியா பாக்கிஸ்தானுக்கிடையே போரினை மூட்டி அதனால் குளிர்காய தாலிபன் அல்லது தாலிபன் ஆதரவாளர்களுக்கு காரணம் இருப்பதை நாம் மறுக்க முடியாது.

    அல்லது அத்தீவிரவாதிகளுக்கும், கர்கரேயை தீர்க்க வேண்டியத் தேவையுடையவர்களுக்கும் உளவுத்துறைகளின் மூலம் நிக‌ழ்ந்த ஒப்பந்தமாகவும் இருக்கலாமென்பதையும் நாம் புறம் தள்ளமுடியாது

  3. வாசகன்

    மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அப்பாவிகளே பகடையாகிறார்கள், இந்த அரசியல்வாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும்.

    மர்மம் கனக்கும் கேள்விகளினும் தாங்க இயலாதவை, இதையே சாக்காகக் கொண்டு பேனா தீவிரவாதம் பேசிய வலைப்பதிவுகள்.

    துணிச்சலும், ஆயுதங்களும் கைவரப் பெற்றிருப்பார்களாயின் இவர்களே பயங்கரவாதிகளினும் பயங்கரவாதிகள்.

  4. HOW DID OUR MEMBERS OF PARLIMENT WHO WERE IN THE HOTEL DURING THE ATTACK ESCAPED ? என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’

    ஒவ்வொரு பயங்கரவாத சம்பவங்கள் நடக்கும் போதும் இதுகுறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும் மோடி சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை மோடி மீது விசாரணைக் கணைகள் பாயாமல் இருப்பது ஏன்? மோடியை விசாரணைக்கு உட்படுத்து வதில் என்ன பிரச்சினை? என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’

  5. ╬அதி. அழகு╬

    நானு ஒன்னுமே கேட்கல.

    ஏன்னா நியாயப்படி, தர்மப்படி எதுவுமே கேட்கக் கூடாது … இல்லயா?

  6. மு மாலிக்

    //4. மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அதிகாரியான கர்கரேயின் கொலை//

    Sorry, mistake in the sentence.

  7. நல்லடியார்

    //அத்வானி கோஷ்டி உட்பட அரசியல் ரீதியாகவும் யாரும் மும்பை குண்டுவெடிப்புக்கு இந்திய இஸ்லாமியர்கள் மீது யாரும் சந்தேகப்படவே இல்ல, குற்றமும் சொல்லவில்லை. பாகிஸ்தான் மற்றும் லஸ்கர் இ தொய்பா பற்றி தானே பேசினார்கள். இதை ஏன் நீங்கள் ஞாயப்படி தர்மப்படி பார்க்கக் கூடாது. // – கோவி.கண்ணன்

    அத்வானி கோஷ்டி எப்பவும் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். கர்கரேயை கொன்றுவிட்டு அதை இந்திய முஸ்லிம்கள்தான் செய்தார்கள் என்றால் மோடிகூட ஒப்புக் கொள்ள மாட்டார் ;-)

  8. நல்லடியார்

    //அப்பாவிகளே பகடையாகிறார்கள்// – வாசகன்

    இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு அறிவே கிடையாது. மோடி, தொகாடியா, அத்வானி என பெரும் தீவிரவாதிகளை விட்டுவிட்டு, ஒவ்வொரு முறையும் சம்பந்தமேயில்லாத அப்பாவிகளைக் கொல்கிறார்கள். பாஜகவின் முகமூடி கிழிந்துவரும் நேரத்தில் வழக்குகளை விசாரித்து வந்த அதிகாரிகளையும் கொன்று மூழ்கிக் கொண்டிருந்த பாஜகவைக் காப்பாற்றி விட்டார்கள்.

    //HOW DID OUR MEMBERS OF PARLIMENT WHO WERE IN THE HOTEL DURING THE ATTACK ESCAPED ? என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’ ஒவ்வொரு பயங்கரவாத சம்பவங்கள் நடக்கும் போதும் இதுகுறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும் மோடி சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை மோடி மீது விசாரணைக் கணைகள் பாயாமல் இருப்பது ஏன்? மோடியை விசாரணைக்கு உட்படுத்து வதில் என்ன பிரச்சினை? என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’ // Anonymous

    ”தோட்டத்துக்குப் போன தோழர்கள் முகம் கொள்ளாத சிரிப்போடு வெளியே வந்த அடுத்த நாளே, அம்மையார் மதிக்கும் மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் தோட்ட விஜயம் செய்தாராம். ‘அவசரப்பட்டு கம்யூனிஸ்ட்களுடன் பந்தத்தை இறுக்கிக்கொண்டு விடாதீர்கள். அடுத்தடுத்த நாட்டு நடப்புகள் பி.ஜே.பி-க்கு சாதகமாக பெரும் காற்றை வீச வைக்கலாம். அந்தக் கூட்டணி உங்களுக்கு மிகுந்த லாபம் சேர்க்கலாம்!’ என்று சொன்னாராம். அம்மையார் முகத்தில் மீண்டும் ஆழ்ந்த சிந்தனை ரேகைகள்.” – ஜூ.வி.யில் கழுகு http://www.vikatan.com/jv/2008/dec/03122008/jv0101.asp
    BJP யை தூக்கிக்கொண்டு திரியும் அப்பத்திரிகையாசிரியருக்கும் தெரிந்திருக்கிறது எங்காவது வெடிகுண்டு வைத்துவிட்டு யார்மீதாவது பழியைப்போட்டு அத்தனையும் ஓட்டுக்களாக்க ஒரு டீமே வேலைசெய்து கொண்டிருக்கிறதென்று. கடவுளே இந்தியவைக் காப்பாற்று!

  9. கேள்வி கேக்கரது சுலபம்.

    ////அனாயசயமாக இவ்வளவு ரிஸ்க் எடுத்து, பாதுகாப்பு நிறைத்த நட்சத்திர ஹோட்டலில் அறையறையாகச் சென்று ஐயாயிரம் பேரைக் கொல்லத் திட்டமிட்டது எவ்வளவு முட்டாள்தனமாகப் போய்விட்டது?//////

    எங்க அடிச்சா வலிக்கும், எல்லாரும் பாப்பாங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
    ஹைதராபாதிலும், பிஹாரிலும் குண்டு விழுந்தால் ஒருத்தரும் சீண்டப் போவதில்லை.

  10. ///அம்மையார் மதிக்கும் மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் தோட்ட விஜயம் செய்தாராம். ‘அவசரப்பட்டு கம்யூனிஸ்ட்களுடன் பந்தத்தை இறுக்கிக்கொண்டு விடாதீர்கள். அடுத்தடுத்த நாட்டு நடப்புகள் பி.ஜே.பி-க்கு சாதகமாக பெரும் காற்றை வீச வைக்கலாம். அந்தக் கூட்டணி உங்களுக்கு மிகுந்த லாபம் சேர்க்கலாம்!’ என்று சொன்னாராம். அம்மையார் முகத்தில் மீண்டும் ஆழ்ந்த சிந்தனை ரேகைகள்.” – ஜூ.வி.யில் கழுகு ///

    ராசீவ்காந்தி இறந்ததற்கு யார்யாரையோ விசாரிக்கவேண்டும் என்று கோரியவர்கள், இப்போது இந்த ‘சோ கால்ட்’ பத்திரிக்கையாளரை இதற்காக விசாரிக்கவேண்டுமென்று கோரமாட்டார்களா?

  11. 1. They are using satellite phone, through conversation they know about that.
    2. For sales purpose, medias write in different aspects.
    3. They also killing foreignres.
    Foreign country is now very safe.so, they kill christians, in india.
    4.Karkeray killer is not escape in car. He was in Taj after that.
    5. Mumbai is economic capital of India. They also collope our economy. So, Mumbai is selected.
    6.All videos checked by IB. see thats tamil.
    7. video cameras collopsed by that terrorist.
    8.If BJP comes to power, It is not easy to them.
    9. At last what do you said? As sartharji said, he is not pakistani, you said This is planed by CIA and messat?

  12. As a Tamil blogger, we hope you will find our service at eTamil.net a useful one to promote your blog.  eTamil is a place for people to find and share content that could be interesting for Tamil audience.
    eTamil surfaces the best stuff as voted on by our users. We build this place where people can collectively determine the value of content.

    How does it work?

    Everything on eTamil is submitted by our community of users like you. Once a story is submitted, other users see it and vote for what they like best. If your submission is truly great and receives enough votes, it is promoted to the front page for the millions of our visitors to see. When we were collecting contact details of tamil bloggers to announce the service, we realized that there are many gems out there gone unnoticed.
    We strongly believe eTamil will fill a void in the Tamil blogosphere by exposing great content and encouraging users to promote them.

    We need your help to meet the tipping point easily. By encouraging your regular visitors to signup and submit your story to eTamil, you are helping your blog as well the Tamil blogosphere.

    And finally, we don’t want to limit our service only to the content written in Tamil, as long as the content is related to Tamil which can be submitted to eTamil.

    [eg :  A tamil movie review written in English or a breaking news on BBC about Ceylon]

    eTamil Team

  13. யார் நீங்கள், எதர்க்காக இப்படி செய்கிறர்கள், என்ன உரிமை உங்களுக்கு இந்த நாட்டில், நீங்கள் இந்த தேசத்தின் வம்சத்தினரா? என்ன உரிமையில் நீங்கள் இந்த நாட்டில் உரிமை கொண்டாடுகிறார்கள். வந்தேறிகளுக்கு இத்தனை திமிர் என்றால் 5000 வருட காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து அல்லல் பட்டு தேசத்தின் வளர்ச்சியில் பாடுபட்டுவரும் எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும். அதிகாரத்திற்கும், சுகபோக வாழ்விற்கும் மதம் மாறிப்போன நீங்கள் எப்படி இந்த் நாட்டில் உரிமை கொண்டாட முடியும்? அடக்கு முறைகளுக்கு பயந்து மதம் மாறாமல் இன்றும் வறுமையிலும், அடிமைத்தனதிலும் உழ‌ன்று கொண்டிருக்கும் தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு இல்லாத உரிமை உங்களுக்கு ஏது? தனி நாடு, தனிச்சட்டம் கேட்க உனக்கு ஏது உரிமை இந்த நாட்டில்? இரண்டாம் தர குடிமக்களாக இருந்தது விட்டு போங்கள், இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே என்று எந்த இந்து வாவது சொன்னது உண்டா. ஆனால் உங்களால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் ஒரு இந்துவாவது கேள்வி கேட்க முடியுமா? எதர்க்கு இத்தனை கொடூரம், என்ன சாதிப்பீர்கள்?

    ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் உங்களால் (இந்துஸ்தானின்) இந்தியாவின் ஒரு .. அசைக்க முடியாது

  14. நல்லடியார்

    //யார் நீங்கள், //

    சமஸ்தானங்களாக,குறுநிலப்பரப்புகளாக இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிதறிக்கிடந்த நிலப்பரப்புகளை ஒருங்கிணைத்தவர்கள்.

    //எதர்க்காக இப்படி செய்கிறர்கள், //

    அதையேதான் நாங்களும் கேட்கிறோம்.

    //என்ன உரிமை உங்களுக்கு இந்த நாட்டில், //

    குடியுரிமை பெற்ற ஒரு குடிமகனுக்கு என்னென்ன உரிமைகளெல்லாம் உண்டு என்று அரசியல்சாசனம் வரையறுத்துள்ளதோ அந்த உரிமைகள் இந்தியக்குடிமக்களாகிய எங்களுக்கும் உண்டு.

    //நீங்கள் இந்த தேசத்தின் வம்சத்தினரா?//

    நாங்கள் மட்டுமல்ல. நாங்களும்தான் என்றே சொல்கிறோம்.

    // என்ன உரிமையில் நீங்கள் இந்த நாட்டில் உரிமை கொண்டாடுகிறார்கள்.//

    இலக்கணப்பிழையாக எழுதியுள்ளீர்கள். மூன்றுவரிகள் மேலே பார்க்கவும்.

    // வந்தேறிகளுக்கு இத்தனை திமிர் என்றால் 5000 வருட காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து அல்லல் பட்டு தேசத்தின் வளர்ச்சியில் பாடுபட்டுவரும் எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்.//

    நியாயமான ஆதங்கம். வந்தேரிகள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

    //அதிகாரத்திற்கும், சுகபோக வாழ்விற்கும் மதம் மாறிப்போன நீங்கள் எப்படி இந்த் நாட்டில் உரிமை கொண்டாட முடியும்?//

    இல்லையே நாங்கள் முஸ்லிமாகத்தானே பிறந்தோம். அப்புறம் அதிகாரம், சுகபோக வாழ்வுன்னா என்ன? யாருக்குக் கிடைத்தது?

    //அடக்கு முறைகளுக்கு பயந்து மதம் மாறாமல் இன்றும் வறுமையிலும், அடிமைத்தனதிலும் உழ‌ன்று கொண்டிருக்கும் தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு இல்லாத உரிமை உங்களுக்கு ஏது?//

    அகைன் ஓவர் டூ வந்தேறிகள்.

    // தனி நாடு, தனிச்சட்டம் கேட்க உனக்கு ஏது உரிமை இந்த நாட்டில்? //

    தனிநாடு யார் கேட்டது? தனிச்சட்டம் நம் அரசியல் சாசணம் வழங்கும் உரிமை. ஐநாவிலும் இதை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

    //இரண்டாம் தர குடிமக்களாக இருந்தது விட்டு போங்கள், //

    அதெப்படி முடியும்? சுதந்திரப் போராட்டங்களில் முதல்தர குடிமக்களாக முன்நின்றோமே. மேலும், இந்தியர்கள் அனைவரும் சமமென்று சட்டம் சொல்கிறதே!

    //இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே என்று எந்த இந்து வாவது சொன்னது உண்டா. //

    VHP,பஜ்ரங்தள்,RSS,பாஜக, சங்பரிவாரங்கள் இந்துக்கள்தானே!

    //ஆனால் உங்களால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் ஒரு இந்துவாவது கேள்வி கேட்க முடியுமா? எதர்க்கு இத்தனை கொடூரம், என்ன சாதிப்பீர்கள்?//

    பாகிஸ்தானில் சென்று அதற்காகப் போராடுங்களேன்.

    //ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் உங்களால் (இந்துஸ்தானின்) இந்தியாவின் ஒரு .. அசைக்க முடியாது //

    அதெல்லாம் சரி. ஹேமந்த் கர்கரேயை ஏன்சார் கொன்றீர்கள்?

  15. \\\இல்லையே நாங்கள் முஸ்லிமாகத்தானே பிறந்தோம். அப்புறம் அதிகாரம், சுகபோக வாழ்வுன்னா என்ன? யாருக்குக் கிடைத்தது?\\\
    வரலாறு தெரியாதா உங்களுக்கு

    \\\அதெப்படி முடியும்? சுதந்திரப் போராட்டங்களில் முதல்தர குடிமக்களாக முன்நின்றோமே. மேலும், இந்தியர்கள் அனைவரும் சமமென்று சட்டம் சொல்கிறதே!\\\

    முதல்தர குடிமக்கள் அல்ல பச்சோந்திகள். உண்மையான மனமொத்த போராட்டமென்றால் பாகிஸ்தான் உருவாகியிருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *