Featured Posts

சந்திரன் பிளத்தல்.

1784. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். புஹாரி : 3636 இப்னு மஸ்ஊத் (ரலி). 1785. மக்காவாசிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள். புஹாரி : …

Read More »

புகை.

1783. (குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் ஏற்படட்டும்’ எனக் குறைஷியருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டது. எலும்புகளை அவர்கள் சாப்பிடும் அளவிற்கு(ப் பஞ்சம் கடுமையாக இருந்தது.) அவர்களில் ஒருவர் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து) களைப்படைந்து தமக்கும் வானத்திற்கும் இடையே புகை …

Read More »

நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்கும் போது வேதனை இறங்காது.

1782. (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!” என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்களின் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை. அவர்கள் …

Read More »

பொன்மாலைப் பொழுது

அன்றொரு வியாழனின் இனிய மொன்மாலைப் பொழுது, மறுநாள் விடுமுறையாதலால், Holiday ஐ Holy day-யாக வரவேற்றுக் குதூகலத்துடன் தேனீரை ருசித்துக் கொண்டே தொலைக்காட்சியை ரசித்தவாறு கல்யாணம் பண்ணிய பிரம்மச்சாரிகள் (Bachlors) அறையில் அமர்ந்திருந்தோம். தொலைக்காட்சி சிறுவர்கள் நிகழ்ச்சியில் ஒரு ஒல்லிப்பிச்சான் மாணவன் வீரபாண்டி கட்டபொம்மனாக சூளுரைத்துச் சென்றான். அடுத்து ஏதோ ஒரு வித்யாலயா மாணவிகளின் பரத நாட்டியம் – தா.. தை.. தத்.. தா..

Read More »

முக்கியமான செய்தி..

வெள்ளி மேடை வழங்குபவர்: டாக்டர் நுஃபார் ஃபாரூக் (அபூ யஹ்யா) இடம்: அல்-ஜுபைல் போர்ட் பள்ளி வளாகம், ஜுபைல், சவுதி அரேபியா நாள்: 31.10.2008 வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா சென்டர் (தமிழ் பிரிவு)

Read More »

கடன்

வெள்ளி மேடை வழங்குபவர்: மௌலவி ஷரீஃப் பாக்கவி இடம்: அல்-ஜுபைல் போர்ட் பள்ளி வளாகம், ஜுபைல், சவுதி அரேபியா நாள்: 14.11-2008 வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா சென்டர் (தமிழ் பிரிவு)

Read More »

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.

1780. அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றைஅவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்’ என்றார். அவர்களின் இன்னொருவர் ‘அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை என்றார். அவர்களில் மற்றொருவரோ, ‘(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் …

Read More »

சுவன வாசிகள் பெறும் மகிழ்ச்சி.

1778. நபி (ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப் போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்” என்று கூறினார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அபுல் காசிமே! அளவற்ற …

Read More »

கியாம நாளில் மரித்தோரை உயிர்ப்பித்தல்.

1777. (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான ஸஹ்ல் (ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் ‘அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது” என்று (கூடுதலாக) அறிவித்தார்கள். புஹாரி :6521 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி).

Read More »