Featured Posts

அபூஹுரைரா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1621. ‘அபூஹுரைரா (ரலி), இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கிறாரே’ என்று நீங்கள் (குறையாகக்) கூறுகின்றீர்கள். (இந்தக் குற்றச்சாட்டு சரியா? தவறா? என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு. நான் ஓர் ஏழை மனிதன். நான், என் வயிறு நிரம்பினால் போதும் என்ற திருப்தியுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். முஹாஜிர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்வதில் கவனமாக இருந்தார்கள். அன்சாரிகள் தம் (வேளாண்மை) செல்வங்களில் …

Read More »

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1616. மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலி) பள்ளிவாசலில் கவி பாடுவதை உமர் (ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான் (ரலி), ‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இருக்கும்போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா (ரலி) பக்கம் திரும்பி, ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) …

Read More »

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)அவர்களின் சிறப்புகள்.

1614. நபி(ஸல்) அவர்கள் பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும், ‘இவர் சொர்க்கவாசி” என்று சொல்லி நான் கேட்டதில்லை. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைத் தவிர, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைக் குறித்தே, ‘மேலும், இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து சாட்சி சொல்பவர் ஒருவர் இது போன்ற வேதத்திற்கு சாட்சி கூறினார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்” என்னும் (திருக்குர்ஆன் 46:10) இறைவசனம் அருளப்பட்டது. புஹாரி : 3812 ஸஅது பின் …

Read More »

மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா?

சகோதரர் கோவி.கண்ணனின் மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா? என்ற பதிவில் மதங்களைப் பற்றிய அவரின் புரிந்து கொள்ளலை எழுதி இருந்தார், “எம்மதமும், கோட்பாடும் உலக மக்களை மேம்படுத்தாது” என்று எழுதி இருந்தது சரியல்ல;. மற்ற மதங்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அவரின் கூற்றுக்கு எதிர்வினையாற்றலாம். இஸ்லாம் உலக மக்களை மேம்படுத்தியது, மேம்படுத்திக் கொண்டிருக்கிறது, மேம்படுத்தும் என்பதைச் சொல்லவே இப்பதிவு. உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற, எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான மார்க்கம் …

Read More »

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் சிறப்பு.

1612. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘அனஸ் தங்களின் சேவகர், (அவருக்காகப் பிரார்த்தியுங்கள்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கிடுவாயாக! அவருக்கு நீ வழங்கியவற்றில் சுபிட்சத்தை ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். புஹாரி :6380 உம்மு சுலைம் (ரலி). 1613. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்புக்குப் பிறகும் கூட ஒருவரிடமும் …

Read More »

நினைவூட்டல்

வழங்குபவர்: மௌலவி ஷரீஃப் பாக்கவி வாராந்திர மார்க்க சொற்பொழிவு – நாள்: 05.06-2008 இடம்: ஜாமியா கபீர் ஜும்மா பள்ளி வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா சென்டர் (தமிழ் பிரிவு)

Read More »

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் சிறப்புகள்

1611. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு …

Read More »

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1610. ‘நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றதும் நான் அவர்களுக்காகத் தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் ‘இந்தத் தண்ணீரை யார் வைத்தது?’ என்று கேட்டதற்கு (என்னைப் பற்றி) கூறப்பட்டது. உடனே ‘இறைவா! இவருக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்”. புஹாரி: 143 இப்னுஅப்பாஸ்(ரலி).

Read More »

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள். …

Read More »

அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்களின் சிறப்பு.

1607. அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது தம் சகோதரிடம், ‘இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, ‘வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகிற ஓர் இறைத்தூதர்’ என்று தம்மை வாதிடுகிற இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரின் சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா!” என்று கூறினார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று …

Read More »