Featured Posts

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.

1301. ‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 242 ஆயிஷா (ரலி). 1302. நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, ‘(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு …

Read More »

குற்றங்களின் எண்ணிக்கை

ஏப்ரல்-28, 2008 அரப் நியூஸ் நாளிதழ் தெரிவிக்கும் செய்திக் குறிப்பு, கடந்த மூன்று மாதங்களில் மக்கா ரோந்துக் காவல் துறையினரால் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கடந்த ஜனவரி 10 முதல் ஏப்ரல் 21ஆம் தேதிவரை மக்காவைச் சார்ந்த ரோந்துக் காவல்துறையினர் 8,068 பேரை பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்துள்ளனர். இதில் 6,508 எட்டுபேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபடடுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

Read More »

மது ஊற வைக்கப்படும் குடுவைகள் பற்றி…

1296. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும் (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற்றை ஊற்றி வைக்காதீர்கள்” என்று சொன்னதாக அனஸ் (ரலி) எனக்கு அறிவித்தார்கள். புஹாரி : 5587 அனஸ் (ரலி). 1297. நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவையையும், தார் பூசப்பட்ட பாத்திரத்தையும் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். புஹாரி : 5594 அலீ (ரலி). 1298. …

Read More »

கனிகளை போதை பெற ஊறவைக்கத் தடை.

1294. நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம் பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சக் செங்காய்களையும் கலந்து ஊற வைக்க வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். புஹாரி : 5601 ஜாபிர் (ரலி). 1295. நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும், பேரீச்சம் பழத்தையும் உலர்ந்த திரட்சையையும் …

Read More »

ஜித்தாவில் “யூசுப் எஸ்ட்” – இஸ்லாமிய நிகழ்ச்சித் தொகுப்பு

இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதிலும் அதிக மக்களால் படிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டில் பல ஆண்களாலும் பெண்களாலும் இஸ்லாம் படிக்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகின்றது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து சவூதி அரேபியாவிற்கு பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் யூசுப் எஸ்ட் அவர்கள் வருகை புரிந்தார்கள். ஜித்தாவிலுள்ள சவூதி ஜெர்மன் மருத்துவமனை வளாகத்தில்

Read More »

அரபி படிக்கலாமே!

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் முடிந்து தற்போது மாணவர்களும், பெற்றோர்களும் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பின் மேற்படிப்புகளை எப்படித் தொடரலாம், எங்கே தொடரலாம் என்று ஆங்காங்கே கல்வி ஆலோசனை முகாம்கள், கையேடுகள், குறுந்தகடுகள் என பல வகையிலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

Read More »

தள்ளிப் போட்டது போதும்!

சில நேரங்களில் காலம் மிக மிக மெதுவாக நகர்வது போல நமக்குத் தோன்றும். நாம் பொறுமையிழந்து வேகமாக கடந்துச் செல்ல முயல்வோம். வேறு சில நேரங்களில் நன்மையான காரியம் ஒன்றை செய்ய நினைத்து, அதை செயல் படுத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம்; ஏதோ ‘நாளை நமது கையில்’ என்று நிச்சயமாக நமக்குத் தெரிவது போல! கடந்த காலத்தை புறட்டிப் பார்த்தால் நாம் இது போல தள்ளிப் போட்டு பிறகு …

Read More »

அந்நிய மார்க்கமா இஸ்லாம்?

இன்றைய நவீன உலக கண்ணோட்டத்தின்படி இஸ்லாம் பழமைவாதத்தை வலியுறுத்தும் தீவிரவாத மார்க்கமாகக் கணிக்கப்படுகின்றது. இத்தகைய தவறான கண்ணோட்டம் உருவானது ஏன்? அதற்குரிய பதில் இதுதான்:- பொதுவாக, இன்றைய மேற்குலக நாகரிகத்தில் மதம் என்பது அவர்தம் அன்றாட வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவோ அல்லது பின்பற்றத்தக்க கூடியதாகவோ இருப்பதில்லை. 

Read More »

போதை தரும் பானங்கள் பற்றி…

குடி பானங்கள் 1292. பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு கூட விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து …

Read More »

மாற்றப்பட்ட குர்பானிச் சட்டம்.

1287. குர்பானி இறைச்சிகளை மூன்று நாள்களுக்கு (மட்டும்) உண்ணுங்கள். (இந்த ஹதீஸின்படி செயல்படும் வகையில்) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மினாவிலிருந்து புறப்படும்போது குர்பானிப் பிராணிகளின் இறைச்சி(யைத் தவிர்ப்பதற்)காக (ரொட்டியை) எண்ணெய் தொட்டு உண்டுவந்தார்கள். புஹாரி : 5574 இப்னு உமர் (ரலி). 1288. நாங்கள் குர்பானி இறைச்சிக்கு உப்புத் தடவி அதை எடுத்துக்கொண்டு மதீனாவில் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் ‘மூன்று நாள்களுக்கு மேல் (குர்பானி இறைச்சியை) …

Read More »