Featured Posts
Home » Tag Archives: உம்ரா (page 5)

Tag Archives: உம்ரா

இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் கடைபிடிக்க வேண்டியவைகள்

தடை செய்யப்பட்டவைகள்: ஹஜ் அல்லது உம்றாவுக்காக இஹ்ராம் அணிந்துவிட்ட ஒருவர், எக்காரணம் கொண்டும் இஹ்ராமைத் தடைசெய்யக்கூடிய காரியங்களைச் செய்யக்கூடாது. நகம்வெட்டுதல், முடிவெட்டுதல், மழித்தல்: அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: ‘ஹத்யு (குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்..’.

Read More »

குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா)

இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது, தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும்.

Read More »

இணைவைப்போர் நிராகரிப்போர் ஹஜ் உம்ரா செய்ய தடை நிர்வாண தவாஃப் தடை.

854. ஹஜ்ஜத்துல் விதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ‘எச்சரிக்கை! இந்த ஆண்டிற்குப் பின்னர் இணைவைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக்கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் வலம் வரக்கூடாது’ என அறிவிக்கச் செய்தார்கள். புஹாரி : 1622 அபூஹூரைரா (ரலி).

Read More »

ஹஜ் உம்ராவிலிருந்து திரும்பும் போது…

852. நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் கற்கள் நிறைந்த இடத்தில் தம் ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள். இப்னு உமர் (ரலி), இது போன்றே செய்வார் என நாஃபிஉ கூறுகிறார். புஹாரி :1532 இப்னு உமர் (ரலி). 853. பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் முஅர்ரஸ் எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) ‘நீங்கள் அபிவிருத்தி மிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள்” என்று …

Read More »

உம்ரா ஹஜ்ஜில் ரமல் செய்தல்

794. நபி (ஸல்) அவர்கள் கஃபாவை வலம் வரும்போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் மட்டும் விரைந்து ஓடுவார்கள். புஹாரி :1617 இப்னு உமர் (ரலி). 795. நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்தபோது, ‘யத்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் இவர்கள் வந்துள்ளனர்’ என்று இணைவைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது …

Read More »

மக்காவினுள் ஒருவழியாக நுழைந்து மறு வழியாக வெளியேறுதல்

787. நபி (ஸல்) அவர்கள் ஷஜரா எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும்போது முஅர்ரஸ் எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு செல்லும்போது ஷஜராவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும்போது பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுதுவிட்டு விடியும் வரை அங்கேயே தங்குவார்கள். புஹாரி : 1533 இப்னு உமர் (ரலி). 788. நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து கீழ்ப்புறக் …

Read More »

ரமலான் மாதத்தில் செய்யும் உம்ராவின் சிறப்பு!

786. நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்… ‘இப்னு அப்பாஸ் (ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான் அதை மறந்துவிட்டேன்!” என அவரிடமிருந்து அறிவிக்கும் அதா (ரஹ்) கூறினார்.. ‘நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?’ எனக் கேட்டார்கள். அதற்கவர், ‘எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும் (என்னுடைய கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; இன்னொரு ஒட்டகத்தை விட்டுச் சென்றுள்ளனர்; …

Read More »

இஹ்ராமும் பலிப்பிராணியும்

781. யமனிலிருந்து திரும்பிய அலீ (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘எதற்காக இஹ்ராம் அணிந்தீர் (ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் சேர்த்தா? உம்ராவிற்கு மட்டுமா)?’ எனக் கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) ‘நீங்கள் இஹ்ராம் அணிந்தது போன்றே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன்…” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடன் குர்பானிப் பிராணி இல்லையெனில் (உம்ராவை முடித்து) நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்” என்றார்கள். புஹாரி:1558 அனஸ் …

Read More »

இஹ்ராமிலிருந்து விடுபடுவது….

779. இப்னு அப்பாஸ் (ரலி), ‘உம்ரா செய்பவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுவார்” என்று சொன்னதாக அதாஉ (ரஹ்) எனக்கு அறிவித்தார்கள். நான், ‘எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) இப்படிக் கூறுகிறார்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘தியாகப் பிராணிகளை அறுத்துத் தியாகம் செய்வதற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகில் உள்ளது” எனும் (திருக்குர்ஆன் 22:33வது) இறைவசனத்தை ஆதாரமாகக் கொண்டும், நபி (ஸல்) …

Read More »

51.அன்பளிப்பும் அதன் சிறப்பும்

பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2614 அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன். பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2615 அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று …

Read More »