Featured Posts
Home » Tag Archives: செல்வம் (page 2)

Tag Archives: செல்வம்

மக்களில் சிறந்தவர் யார்?

1237. ”இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘பிறகு யார்?’ என்று கேட்டார்கள். ‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். புஹாரி : 2786 அபூஸயீத் …

Read More »

அல்லாஹ்வின் பாதையில் சிறிது நேரம் போரிடுவதின் சிறப்பு.

1234. இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2792 அனஸ் இப்னு மாலிக் (ரலி). 1235. இறைவழியில் காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் போர் புரியச் செல்வது உலகத்தை விடவும் அதிலுள்ள பொருட்களை விடவும் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் …

Read More »

அறப்போருக்குச் செல்வதின் சிறப்பு.

1229. போரிடுவதற்குப் புறப்பட்டுச் சென்றவரைக் கூலியைப் பெற்றவராகவோ, போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அல்லது அவரைச் சொர்க்கத்தில் சேர்க்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான். என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமத்தைக் கொடுத்து விடுவேனோ என்று (அச்சம்) மட்டும் இல்லையானால் (நான்) அனுப்பும் எந்த இராணுவத்திற்குப் பின்னரும் (நானும் போகாமல்) உட்கார்ந்திருக்கமாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே …

Read More »

குதிரைகளின் நெற்றியில்….

1226. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரைக்கும் நன்மை உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2849 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி). 1227. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நன்மை யாதெனில் அந்தக் குதிரையில் ஏறி அறப்போரிடுதலில் கிடைக்கும் நன்மையும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி …

Read More »

போர் வெற்றிப் பொருளை திருடுதல்.

1201. நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, ‘மறுமை நாளில் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், …

Read More »

கஞ்சனின் மனைவி கணவனின் பொருளைத் திருடலாம்.

1115. (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்” என்று பதிலளித்தார்கள். புஹாரி :5359 ஆயிஷா (ரலி). 1116. ஹிந்த் பின்த் உத்பா, …

Read More »

55.மரண சாசனங்கள்

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2738 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களும் இவ்வாறே அறிவித்தார்கள். பாகம் 3, அத்தியாயம் 55, எண் …

Read More »

49.அடிமையை விடுதலைச் செய்தல்

பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2517 அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார். “ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். உடனே நான், இந்த நபிமொழியை அலீ …

Read More »

46.அநீதிகளும் அபகரித்தலும்

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2440 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது …

Read More »

45.கண்டெடுக்கப்பட்ட பொருள்

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2426 உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் …

Read More »